நான் பிரதமரானால் இங்கிலாந்தின் குடியேற்ற முறையில் மாற்றம் கொண்டுவரப்படும் என்று ரிஷி சுனக் உறுதியளித்தார். இங்கிலாந்தின் பிரதமராகும் போட்டியில் இறுதிப் போட்டியாளராக உள்ள இருவரில் ஒருவரான முன்னாள் இங்கிலாந்து நிதி அமைச்சர் ரிஷி சுனக், நான் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டால் இங்கிலாந்தின் “உடைந்த” குடியேற்ற முறையை சரிசெய்வேன் என்று உறுதியளித்தார். மேலும் பிரிட்டிஷ் இந்தியத் தலைவர், நெருக்கடியைத் தீர்க்க பத்து அம்சத் திட்டத்தையும் வெளியிட்டார். ஆண்டுதோறும் ஏற்றுக்கொள்ளப்படும் அகதிகளின் எண்ணிக்கையை நாடாளுமன்றம் தீர்மானிக்கும் என்று கூறினார்.
இங்கிலாந்து பிரதமர் வேட்பாளராக இறுதி கட்ட போட்டிக்கு இந்திய வம்சாவளி நபர் ரிஷி சுனக் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவருக்கு போட்டியாக லிஸ் டிரஸ் களத்தில் இருக்கிறார். இங்கிலாந்து பிரதமர் பதவியில் இருந்து போரிஸ் ஜான்சன் ராஜினாமா செய்ததை தொடர்ந்து அந்த பதவிக்கு போட்டி பலமானது. இதில், இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக் , லிஸ் டிரஸ், பென்னி உட்பட 8 பேர் போட்டி போட்டனர். இதில் இதுவரை நடைபெற்று சுற்று வாக்கெடுப்பில் ரிஷி சுனக் 137 வாக்குகள் […]