டெல்லி : இந்திய குடிமகனின் தனிப்பட்ட அடையாளச் சான்றுகளில் மிக முக்கிய ஒன்றாக ஆதார் அட்டை உள்ளது. அரசு திட்டங்கள், தனிப்பட்ட அடையாளம், முகவரி சான்று என பல்வேறு வகைகளில் ஆதார் இந்திய மக்கள் மத்தியில் புழக்கத்தில் உள்ளது. இந்த ஆதாரில் புகைப்படம், கைவிரல் ரேகைகள், கருவிழி விவரங்கள், பிறந்த தேதி, முகவரி உள்ளிட்ட தனிப்பட்ட விவரங்கள் பதிவாகி இருக்கும். இதனைக் குறிப்பிட்ட கால இடைவெளியில் இந்திய குடிமக்கள், ஆதார் விவரங்களை புதுப்பிக்க அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்த […]
ஆதார் அட்டை புதுப்பிப்பு : இந்தியாவில் தனிநபர் ஆவணத்தில் முக்கியமாக திகழ்வது ஆதார் அட்டை ஆகும். முன்னதாக, ஆதார் அட்டையில் உள்ள முகவரி, தந்தை பெயர் உள்ளிட்ட விவரங்களில் ஏதெனும் திருத்தங்கள் இருந்தால், அதனை நாளை (ஜூன் 14ஆம் தேதி) வரை மட்டுமே இலவசமாக திருத்தம் செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்பொழுது, அந்த காலக்கெடுவை செப்டம்பர் 14ம் தேதி வரை நீட்டித்துள்ளதாக இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) தெரிவித்துள்ளது. ஆதார் உடன் பதிவு செய்யப்பட்ட […]
பிறப்பு சான்றாக (DoB) ஏற்றுக்கொள்ளக்கூடிய பட்டியலில் இருந்து ஆதாரை நீக்கும்படி, ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்புக்கு (EPFO), இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசால் வழங்கப்படும் ஆதார் அடையாள அட்டை, அனைத்து சேவைகளுக்கும் தேவைப்படும் ஒரு முக்கிய ஆவணமாக இருந்து வருகிறது. பணியில் சேர்வதில் தொடங்கி வங்கிகளில் கணக்கு தொடங்குவது, பிஎப், இபிஎப்ஓ கணக்குகள் என அனைத்திலும் ஆதார் தவிர்க்கமுடியாத ஆவணமாக உள்ளது. இதுபோன்று பல்வேறு சேவைகளுக்கு ஆதார், பிறப்புச் சான்று […]
இந்தியாவின் தனித்துவமான அடையாள ஆணையம்(UIDAI),ஆதார் தவறாகப் பயன்படுத்துவதையும்,புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு நன்மைகளை வழங்குவதையும் நோக்கமாகக் கொண்ட இரண்டு புதிய திட்டங்களைத் தொடங்க திட்டமிட்டுள்ளது.அதன்படி,புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கும் இனி தற்காலிக ஆதார் எண்ணைப் பெற்றுக் கொள்ளும் வசதி கொண்டு வரப்படவுள்ளது எனவும்,பிறப்பு,இறப்பு தரவுகளை இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றும் தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில்,பிறக்கும்போதே ஒரு யுஐடிஏஐ எண்ணை ஒதுக்கீடு செய்வது குழந்தைகள் மற்றும் குடும்பங்கள்,மத்திய அரசின் திட்டங்களின் பயன்களை பெறுவதை உறுதி செய்யும் என்றும்,பிறப்பு, இறப்பு பதிவு தரவுத்தளங்களுடனும்,பொது […]
ஆதார் அட்டை நகலை எங்கும் கொடுக்க வேண்டாம் என்ற அறிவிப்பை திரும்பப் பெறுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.முன்னதாக, ஹோட்டல்கள்,திரையரங்குகள் உள்ளிட்ட எந்தவொரு உரிமம் பெறாத தனியார் நிறுவனத்துடனும் ஆதார் அட்டை நகலைப் பகிரக்கூடாது என்றும்,அவை தவறாகப் பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளது எனவும் மத்திய அரசு எச்சரித்திருந்தது.இது தொடர்பாக,மத்திய அரசு ஏற்கனவே வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: “பயனர் உரிமம் பெற்ற நிறுவனங்கள் மட்டுமே ஒரு நபரின் அடையாளத்தை நிறுவ ஆதாரை பயன்படுத்த முடியும்.மாறாக, ஹோட்டல்கள் அல்லது திரையரங்குகள் போன்ற உரிமம் […]
பான் எண்ணை ஆதார் கார்டுடன் இணைப்பதற்கான கால அவகாசம் அடுத்த ஆண்டு மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மத்திய நேரடி வரிகள் வாரியம் (சிபிடிடி), பான் எண்ணை ஆதார் எண்ணுடன் இணைப்பதற்கான காலக்கெடுவை மீண்டும் நீட்டிப்பதாக அறிவித்தது. பான்-ஆதார் இணைக்கும் காலக்கெடு சமீபத்தில் செப்டம்பர் 30, 2021 வரை மத்திய அரசால் நீட்டிக்கப்பட்டது. கொரோனா தொற்றுநோயால் பல்வேறு பங்குதாரர்கள் எதிர்கொள்ளும் கஷ்டங்களை நிவர்த்தி செய்வதற்கான தனது உறுதிப்பாட்டின் தொடர்ச்சியாக, பல்வேறு பங்குதாரர்களிடமிருந்து பெறப்பட்ட பிரதிநிதித்துவங்களை மத்திய அரசு, […]
12 இலக்கம் கொண்ட எண்கள் அனைத்தும் ஆதார் எண்கள் அல்ல என யுஐடிஏஐ எச்சரித்துள்ளது. ஆதார் அட்டை இந்தியாவில் மக்கள் அதிக அளவில் பயன்படுத்தப்படக் கூடிய அடையாள சான்றாக விளங்குகிறது. புதிதாக சிம்கார்டு வாங்குவது முதல் வங்கி வேலை, அரசாங்க சலுகைகள் பெறுவது என அனைத்திற்குமே ஆதார் நிச்சயம் தேவைப்படுகிறது. ஆதார் அட்டையில் உள்ள 12 இலக்க தனித்துவ எண்கள் தான் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. இந்நிலையில், இந்த 12 இலக்க எண்கள் குறித்து இந்திய தனித்துவ […]
பிறந்த குழந்தை முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு ஆன்லைன் மூலமாக ஆதார் அட்டைக்கு விண்ணப்பிப்பது எப்படி என்பது குறித்த சில எளிய வழிமுறைகளை தெரிந்து கொள்ளலாம் வாருங்கள். இந்திய குடிமகனாக, குடிமகளாக பிறந்த ஒவ்வொரு குழந்தைக்கும் ஆதார் அட்டை என்பது மிகவும் அவசியம். தற்போதைய கால கட்டங்களில் உணவு வாங்கும் கடையில் இருந்து மருந்து எடுக்கும் மருத்துவமனை வரையிலும் ஆதார் அட்டை என்பது கட்டாயமான ஒன்றாகவே காணப்படுகிறது. அனைத்து ஆதாரங்களுக்கும் ஆதார் அட்டை முக்கியமான […]
புதிய வகையிலான PVC ஆதார் அட்டைகளை வாங்கிவிட்டீர்களா? அதனை எப்படி வாங்குவது என்பது குறித்து காணலாம். இந்தியாவில் பிறந்த ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் அட்டை கட்டாயம் என மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது. நாம் இந்திய குடிமகன் என்ற அடையாளத்தை ஆதார் அட்டை வழங்குகிறது. இதன்மூலம் வாக்காளிப்பது, வங்கிக் கணக்கு தொடங்குவது, போன்ற எண்ணற்ற நடைமுறைகளுக்கும் ஆதாரமாக பயன்படுத்தி வருகின்றோம். இந்த ஆதார் அட்டைகளை வழங்கும் UIDAI நிறுவனம், சமீபத்தில் புதிய வகையிலான PVC ஆதார் அட்டைகளை அறிமுகப்படுத்தியது. […]
ஆதாருக்காக தேர்ந்தெடுக்கலாம் என்ற உறுதி மொழியோடு கட்டாயமாக்கப்பட்ட ஆதாரில் இன்று மாநில மொழிகள் நீக்கப்பட்டுள்ளன என்று கனிமொழி தெரிவித்துள்ளார். ஆதார் அட்டைகளை வழங்கும் UIDAI நிறுவனம், தற்பொழுது புதிய வகையிலான ஆதார் அட்டைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.இது, PVC அட்டை மூலம் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், இதனை கிரேடிட் கார்டுகள் போல எளிதாக எங்கு வேண்டுமாலும் வைத்து கொள்ளலாம் எனவும், இதனை பெற UIDAI அமைப்பின் அங்கீகாரப் பூர்வமான வலைத்தளத்திற்கு சென்று, ரூ.50-ஐ கட்டணமாக செலுத்தி பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்பொழுது புதிதாக […]