டெல்லி: இளநிலை மருத்துவ படிப்பிற்காக இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் முறைகேடு நடந்ததாகப் பல புகார்கள் எழுந்தது. இதன் எதிரொலியாக தற்போது மத்திய அரசு 7 பேர் கொண்ட குழு அமைத்துள்ளது. தேசிய தேர்வு முகாமை மேம்படுத்துவது மற்றும் அது நடத்தும் தேர்வுகளை நேர்மையாகவும் வெளிப்படைத்தன்மையுடன் நடத்துவது குறித்தும் ஆய்வு செய்ய இஸ்ரோ முன்னாள் தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமையில் மத்திய அரசு தற்போது குழு ஓன்றை அமைத்து உள்ளது. நீட் தேர்வு குளறுபடி காரணமாக தேசிய […]
உதவிப் பேராசிரியர் பணிக்கான UGC NET தேர்வு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வருகின்ற மே 2 முதல் 17 வரை பல்வேறு கட்டங்களாக நடைபெறவிருந்த யுஜிசி நெட்(UGC NET) தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் அதிகரிப்பால் 3-ம் முறையாக இந்த தேர்வை மத்திய அரசு ஒத்திவைத்தி வைத்துள்ளது. மே 2 ஆம் தேதி தொடங்க திட்டமிடப்பட்ட யுஜிசி நெட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் போக்ரியால் ட்வீட் செய்துள்ளார். பல்கலைக்கழகங்களில் உதவி பேராசிரியர்களின் தகுதியை நிர்ணயிப்பதற்கும், […]
யுஜிசி – நெட்டுக்கு விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டிருந்த கடைசித் தேதி இன்றிலிருந்து ஜூன் 15 ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் தேசியத் தேர்வுகள் முகமை என்டிஏ சார்பில், பல்வேறு உயர்கல்வி படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வுகளுக்கான தேர்வுத் தேதிகள் அறிவிக்கப்பட்டு, அதற்கு ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கும் நாட்கள் குறித்த விவரங்கள் அறிவிக்கப்படும். அதன் பின்னர் ஆன்லைன் மூலமாக விண்ணப்பங்கள் பெறப்படும். இதனிடையே, கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில், மத்திய அரசு நாடு முழுவதும் 5 […]