உயர்கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடு நீக்கம் தொடர்பாக யுஜிசி அறிவிப்பு ஒன்றை வெளியிட்ட நிலையில் அந்த அறிவிப்புக்கு மத்திய கல்வி அமைச்சகம் மறுப்பு தெரிவித்துள்ளது. மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத பணியிடங்களை நிரப்பும் போது, பிற பிற்படுத்தப்பட்டோர், பட்டியலினம், பழங்குடியினரில் தகுதியானவர்கள் கிடைக்காவிட்டால், அப்பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டை ரத்து செய்து விட்டு, பொதுப்பிரிவினரைக் கொண்டு அந்த இடத்தை நிரப்புவதற்கு அனுமதிக்க பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) முடிவு செய்திருந்தது. இதனைத்தொடர்ந்து உயர்கல்வி நிறுவன […]
தமிழ்நாட்டில் கடந்த 2, 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் தாக்கிய ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக 48 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெருமழை பெய்துள்ளது. இதனால் சென்னை மக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகி உள்ள நிலையில், அவர்களது இயல்பு வாழ்க்கை கேள்விக்குறியாகியாகியுள்ளது. இந்த நிலையில், மழை பாதிப்பு காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், மாணவர்களின் நலன் கருதி, அண்ணா, திருவள்ளூர், சென்னை உள்ளிட்ட பல்கலைக்கழக தேர்வுகளும் […]
முதுநிலை படிப்புக்கான நுழைவு தேர்வு அடுத்தாண்டு ஜூன் 1 முதல் 10 வரை நடைபெறும் என்று அறிவிப்பு. முதுநிலைப் படிப்புகளுக்கான பொதுப் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு (CUET) அடுத்த ஆண்டு ஜூன் 1 முதல் ஜூன் 10 வரை நடைபெறும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. 45 மத்திய பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கைக்காக அகில இந்திய அளவில் தேர்வு நடத்தப்படுகிறது. CUET-PG மதிப்பெண்ணைப் பயன்படுத்தி முதுகலைப் படிப்புகளில் மாணவர்கள் பல பல்கலைக்கழகங்களில் சேருவதற்கு முயற்சி செய்ய […]
மத்திய அரசு பல்கலைக்கழகங்களில் சேருவதற்கான க்யூட் தேர்வு தேதியை அறிவித்தது பல்கலைக்கழக மானியக்குழு. நாடு முழுவதிலும் உள்ள மத்திய அரசு பல்கலைக்கழகங்களில் இளங்கலைப் படிப்புகளுக்கான சேர்க்கைக்கான விண்ணப்பதாரர்களைத் தேர்வு செய்வதற்கான நுழைவுத் தேர்வாக CUET UG நடத்தப்படுகிறது. அந்தவகையில், இளநிலை க்யூட் (CUET UG 2023) நுழைவுத்தேர்வு அடுத்தாண்டு மே 21 முதல் 31ம் தேதி வரை நடைபெறும் என யுஜிசி அறிவித்துள்ளது. இதுபோன்று முதுநிலை க்யூட் தேர்வு அடுத்த ஆண்டு ஜூன் முதல் அல்லது 2வது வாரத்தில் […]
4 ஆண்டு இளங்கலை பட்டம் பெற்ற மாணவர்கள் நேரடியாக பிஎச்டி தொடரலாம் என்று யுஜிசி அறிவிப்பு. இதுதொடர்பாக யுஜிசி தலைவர் ஜெகதேஷ் குமார் கூறுகையில், நான்கு ஆண்டு இளங்கலை பட்டம் பெற்ற மாணவர்கள் நேரடியாக பிஎச்.டி படிப்பைத் தொடரலாம் என்றும் மூன்று ஆண்டு படித்தவர்களுக்கு ஹானர்ஸ் பட்டம் வழங்குவதா அல்லது நான்கு ஆண்டு இளங்கலை பட்டப் படிப்பை வழங்குவதா என்பதை பல்கலைக்கழகங்கள் முடிவு செய்யலாம் எனவும் அவர் தெரிவித்தார். மேலும், 4 ஆண்டு திட்டம் முழுமையாக செயல்படுத்தப்படும் […]
யு.ஜி.சி நெட் தேர்வு முடிவுகள் நவம்பர் 5 ஆம் தேதி தேசிய தேர்வு முகமையால் (NTA) வெளியிடப்படும். யு.ஜி.சி நெட் தேர்வு முடிவுகள் நாளை வெளியிடப்படும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. அதன்படி, யு.ஜி.சி நெட் தேர்வின் 2021 டிசம்பர், 2022 ஜூன் மாத தேர்வுகளுக்கான தேர்வு முடிவுகள் நாளை வெளியிடப்பட உள்ளது. நாளை www.nta.ac.in என்ற இணையதளத்தில் தேர்வு முடிவுகளை காணலாம். நெட் தேர்வில் தேர்ச்சி பெற்றால் தேசிய அளவிலான பல்கலைக்கழகங்களில் உதவி பேராசிரியர், […]
சிபிஎஸ்சி தேர்வு முடிவுகள் தாமதமாக வந்ததால் கல்லூரிகளை மாற்றிய மாணவர்களுக்கு அவர்கள் முதலில் சேர்ந்த கல்லூரிகளில் மாணவர்கள் செலுத்திய கட்டணத்தை அந்ததந்த கல்லூரிகள் திருப்பி தரவேண்டும் என யுஜிசி உத்தரவிட்டுள்ளது. இந்த வருடம் சிபிஎஸ்சி தேர்வு முடிவுகள் தாமதமாக வெளியிட பட்டதாலும், நீட், ஜே.இ.இ தேர்வு முடிவுகள் காரணமாக பல்வேறு கல்லூரிகளில் மாணவர்கள் முன்கூட்டியே சேர்ந்துவிட்டனர். பின்னர் முடிவுகள் தெரிந்த பின்னர் அவர்கள் தங்கள் படிப்புகளை மாற்றும் நிலை வந்தது. இதனால், கல்லூரியில் இடைநின்ற மாணவர்களுக்கு அவர்கள் […]
இளங்கலை மற்றும் முதுகலை அளவில் சைபர் பாதுகாப்பு பாடப்பிரிவுகளை தொடங்க வேண்டும் என யுஜிசி உத்தரவு. இளங்கலை மற்றும் முதுகலை அளவில் சைபர் பாதுகாப்பு பாடப்பிரிவுகளை தொடங்க வேண்டும் என கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு யுஜிசி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனையடுத்து, பல்கலைக்கழக மானியக் குழு, சைபர் பாதுக்காப்புத்துறைக்கான பாடத்திட்டத்தை அறிவித்துள்ளது. இந்த பாடத்திட்டம், பாதுகாப்பான மற்றும் பொறுப்பான சைபர் பாதுகாப்பை உறுதி செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராகிங்கைத் தடுக்க உயர்கல்வி நிறுவன வளாகங்கள், விடுதிகளில் சிசிடிவி கேமராக்களை பொருத்த வேண்டும் என UGC உத்தரவு. ராகிங்கைத் தடுக்க அனைத்து கல்லூரிகள், பல்கலைக்கழகங்களிலும் சிசிடிவி கேமராக்கள் கட்டாயம் பொருத்த வேண்டும் என்று UGC உத்தரவிட்டுள்ளது. ராகிங்கைத் தடுக்க உயர்கல்வி நிறுவன வளாகங்கள், வகுப்பறைகள், விடுதிகள் மற்றும் உணவகங்கள் உள்ளிட்ட இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும் என்றும் எச்சரிக்கை மணியையும் முக்கிய இடங்களில் பொருத்த வேண்டும் எனவும் பல்கலைக்கழக மானியக்குழு (UGC) உத்தரவிட்டுள்ளது. ராகிங்கிற்கு எதிரான […]
மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலை படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வு முடிவுகள் இன்றிரவு வெளியீடு என அறிவிப்பு. CUET – UG தேர்வு முடிவுகள் இன்று இரவு 10 மணிக்கு வெளியிடப்படும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. 2022-23 கல்வியாண்டு முதல் மத்திய பல்கலைக்கழகங்களில் CUET என்ற பொது நுழைவுத் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று முடிவு செய்யப்பட்டது. அதன்படி, மத்திய பல்கலைக்கழங்களில் இளநிலை படிப்பில் சேருவதற்கான பொது நுழைவுத் தேர்வு ஆறு கட்டங்களில் […]
UGC-ஆல் அங்கீகரிக்கப்படும் ஆன்லைன் & தொலைதூரக்கல்வி படிப்புகள் பல்கலைக்கழகங்களில் வழங்கப்படும் படிப்புகளுக்கு இணையானவை என யுஜிசி அறிக்கை. UGC-ஆல் அங்கீகரிக்கப்படும் ஆன்லைன் & தொலைதூரக்கல்வி படிப்புகள், பல்கலைக்கழகங்களில் வழங்கப்படும் படிப்புகளுக்கு இணையானவை என பல்கலைக்கழக மானியக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, இளங்கலை மற்றும் முதுகலை மட்டத்தில் பட்டங்கள், ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட உயர் கல்வி நிறுவனங்களால், வழக்கமான முறையில் வழங்கப்படும் இளங்கலை மற்றும் முதுகலை நிலை மற்றும் முதுகலை பட்டயப் படிப்புகளின் தொடர்புடைய விருதுகளுக்குச் சமமாக கருதப்படும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
CUET யூ.ஜி. தேர்வு முடிவுகள் செப்டம்பர் 15ம் தேதிக்கு முன்னதாக வெளியாகும் என அறிவிப்பு. மத்திய பல்கலைக்கழகங்கள் & இணைப்புக் கல்லூரிகள், ஒருசில தனியார் & மாநில பல்கலைக்கழகங்களில் UG படிப்புகளில் சேர நடத்தப்பட்ட CUET – UG தேர்வை 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதியுள்ளனர். இந்த நிலையில், CUET யூ.ஜி. தேர்வு முடிவுகள் செப்டம்பர் 15ம் தேதிக்கு முன்னதாக வெளியாகும் என UGC & AICTE தலைவர் ஜெகதீஷ் குமார் அறிவித்துள்ளார். அனைத்துப் பல்கலைக்கழகங்களும் மாணவர்கள் […]
75-வது சுதந்திர தினவிழா முன்னிட்டு, உயர்கல்வி நிறுவனங்களுக்கு UGC புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. வரும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி 75-வது சுதந்திர தினவிழா கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில், 75-வது சுதந்திர தினவிழா முன்னிட்டு, உயர்கல்வி நிறுவனங்களுக்கு UGC புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அதன்படி,75-வது சுதந்திர தின அமுதப் பெருவிழாவை முன்னிட்டு, தேசப்பற்றை வெளிப்படுத்தும் விதமாக #harghartiranga ஹேஷ்டேகில் பதிவுகள் இட வேண்டும் மாணவர்கள், பேராசிரியர்களுக்கு உரிய அறிவுறுத்தல் வழங்கிட நாடு முழுவதும் உள்ள உயர்கல்வி நிறுவனங்களுக்கு […]
சேர்க்கையை ரத்து செய்வதற்கு தனியாக கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று UGC உத்தரவு. கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் ஏற்கனவே சேர்ந்துள்ள மாணவர்கள் அக்டோபர் 31-ம் தேதிக்குள் பாதியிலேயே வெளியேறும் பட்சத்தில், அவர்கள் செலுத்திய முழு கட்டணத்தையும் திருப்பித்தர வேண்டும் என்று நாடு முழுவதும் உள்ள உயர்கல்வி நிறுவனங்களுக்கு, UGC உத்தரவிட்டது. சேர்க்கையை ரத்து செய்தால் அவர்கள் செலுத்திய அனைத்து கட்டணத்தையும், முழுவதுமாக திருப்பியளிக்க வேண்டும் என்றும் சேர்க்கையை ரத்து செய்வதற்கு தனியாக கட்டணம் வசூலிக்கக் கூடாது எனவும் கூறியுள்ளது. […]
முதுநிலை படிப்புக்கான CUET தேர்வு அடுத்த மாதம் நடைபெறும் என யுஜிசி தலைவர் அறிவிப்பு. இரண்டாம் கட்ட CUET – UG தேர்வுக்கான ஹால் டிக்கெட் https://cuet.samarth.ac.in இணையதளத்தில் வெளியிடப்பட்டது. வரும் 4,5,6 தேதிகளில் CUET – UG 2-ம் கட்ட தேர்வு நடைபெற உள்ள நிலையில், 6.80 லட்சம் பேர் தேர்வு எழுத உள்ளனர். மேலும், முதுநிலை படிப்புக்கான CUET தேர்வு அடுத்த மாதம் நடைபெறும் என யுஜிசி தலைவர் ஜெகதீஷ்குமார் அறிவித்துள்ளார். பொதுப் பல்கலைக்கழக […]
CUET-UG 2022 தேர்வைத் தவறவிட்ட மாணவர்களுக்கு மறுதேர்வு இல்லை என்று UGC தெரிவித்துள்ளது. வெள்ளிக்கிழமை அன்று மத்தியப் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வில் (CUET) தேர்வு நடத்தப்பட்டது. அதில் தேர்வு மையங்களுக்கு தாமதமாக வந்து அடைந்ததால், தேர்வு எழுத தவறிய மாணவர்களுக்கு மறுதேர்வு நடத்தப்பட மாட்டாது என்று பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) தெரிவித்துள்ளது. யுஜிசியின் திட்டவட்டமான கூற்று என்னவென்றால், “தேர்வுக்கு ஒரு நாள் முன்னதாக டெல்லியில் ஒன்று உட்பட சுமார் 15 மையங்களை மாற்றுவதற்கான தேசிய தேர்வு […]
CBSE பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாக மேலும் ஒரு மாத காலம் ஆகும் என்று பல்கலைக்கழக துணைவேந்தர்களுக்கு UGC கடிதம் எழுதியுள்ளது. நாடு முழுவதும் +2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகி பல்கலைக்கழகங்கள்,கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.ஆனால்,சிபிஎஸ்இ +2 தேர்வு முடிவுகள் மட்டும் இன்னும் வெளியாகவில்லை.இதனால்,கல்லூரிகளில் மாணவர்கள் சேருவதற்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில்,சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியாகும் முன்னரே மாணவர் சேர்க்கையை முடித்து கொள்ளக்கூடாது என பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அறிவித்துள்ளது.அதன்படி,சிபிஎஸ்இ +2 தேர்வு முடிவுகள் வெளியாகாத […]
நாடு முழுவதும் +2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகி பல்கலைக்கழகங்கள்,கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.ஆனால்,சிபிஎஸ்இ +2 தேர்வு முடிவுகள் மட்டும் இன்னும் வெளியாகவில்லை.இதனால்,கல்லூரிகளில் மாணவர்கள் சேருவதற்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில்,சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியாகும் முன்னரே மாணவர் சேர்க்கையை முடித்து கொள்ளக்கூடாது என பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அறிவித்துள்ளது.அதன்படி,சிபிஎஸ்இ +2 தேர்வு முடிவுகள் வெளியாகாத நிலையில்,நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளுக்கு இவ்வாறு யுஜிசி அறிவுறுத்தியுள்ளது.மேலும், பல்கலைக்கழகங்கள்,கல்லூரிகளில் சேர சிபிஎஸ்இ மாணவர்களுக்கு உரிய கால அவகாசம் […]
சமீபகாலமாக கல்வி நிறுவனங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் தொடர்பான புகார்கள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில்,பாலியல் புகார்கள் குறித்து விசாரிக்க உயர்மட்ட கமிட்டியை உடனடியாக அமைக்க வேண்டும் என்று அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளுக்கு பல்கலைக்கழக மானியக்குழு(யுஜிசி) உத்தரவு பிறப்பித்துள்ளது.மேலும்,பேராசிரியைகள், மாணவியருக்கு எதிரான வன்முறைகளை தடுக்க வேண்டும் எனவும் யுஜிசி வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக,அனைத்து பல்கலைக்கழகங்களுக்கு யுஜிசி பிறப்பித்துள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது: “அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் பாலின அடிப்படையிலான வன்முறை பிரச்சினையை கையாள்வதற்கு உயர்மட்ட கமிட்டியை […]
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் தொலைதூர பட்டப் படிப்புகள் செல்லாது என பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) அறிவிப்பு விடுத்துள்ளது. மேலும்,பெரியார் பல்கலைக்கழக தொலைதூர படிப்புகளில் மாணவர்கள் யாரும் சேர வேண்டாம் எனவும் யுஜிசி அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. அதே சமயம்,முன் அனுமதி பெறாமல் தொலைதூரக் கல்வி,ஆன்லைன் வகுப்புகள் நடத்துவது குறித்து பெரியார் பல்கலைக்கழகத்திடம் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழக ஆளுநர், உயர்கல்வித்துறை செயலர் ஆகியோருக்கு யுஜிசி பரிந்துரைத்துள்ளது.