புதுச்சேரி : பல மொழிகளில் ஹிட் பாடல்களை பாடி ரசிகர்களுக்கு பிடித்த பாடகர்களில் ஒருவராக இருக்கும் பாடகர் உதித் நாராயணன் ரசிகர்களை முகம் சுழிக்க வைக்கும் வகையில் செய்த செயல் சர்ச்சையாகவும் வெடித்துள்ளது. அப்படி அவர் என்ன செய்தார் என்றால், தன்னுடன் செல்பி எடுக்க வந்த பெண்களுக்கு கன்னத்தில் முத்தம் கொடுத்தது தான். புதுச்சேரியில் அவருடைய இசை நிகழ்ச்சி கடந்த ஜனவரி 30-ஆம் தேதி நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பல பாடல்களை பாடி ரசிகர்களை மகிழ்வித்துக்கொண்டிருந்த உதித் […]