மகாராஷ்டிராவில் நீண்ட இழுபறிக்கு பிறகு முடிவுக்கு வந்தது தொகுதி பங்கீடு!

india alliance

Maharashtra: மகாராஷ்டிராவில் இந்தியா கூட்டணி கட்சிகளின் தொகுதி பங்கீடு இறுதியானது. நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ள நிலையில் அதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில், 48 மக்களவை தொகுதிகளை கொண்ட மகாராஷ்டிரா மாநிலத்தில் 5 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, வரும் 19-ம் தேதி முதல் மே 20ம் தேதி வரை மகாராஷ்டிராவில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. மகாராஷ்டிரா அரசியல் … Read more

ஏக்நாத் ஷிண்டேவை நீக்க உத்தவ் தாக்கரேவுக்கு அதிகாரமில்லை.! மகாராஷ்டிரா சபாநாயகர் அறிவிப்பு.!

Eknath Shinde - Uddhav Thackeray

மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் சிவசேனா கட்சி, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சியை கைப்பற்றின. இதில் உத்தவ் தாக்கரே முதல்வராக பொறுப்பேற்றார். இரண்டரை ஆண்டுகள் கடந்த இந்த ஆட்சியில், அடுத்ததாக ஏக்நாத் ஷிண்டே தலைமையில் பெரும்பான்மை எம்.எல்.ஏக்கள் உத்தவ் தாக்கரேவுக்கு வழங்கிய தங்கள் ஆதரவை வாபஸ் பெற்றனர். இதனை அடுத்து உத்தவ் தாக்கரே தனது பதவியை ராஜினாமா செய்யும் சூழல் ஏற்பட்டது. இந்த அரசியல் … Read more

இரண்டாக பிரிந்த சிவசேனா.! முதல்வர் ஏக்நாத் ஷிண்டே சூரியன், வாள், அரசமரம் ஆகிய சின்னத்திற்கு விருப்பம்.!

மகாராஷ்டிரா இடைத்தேர்தலுக்காக, முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையான அணியினர் தேர்தல் சின்னமாக அரசமரம், வாள், சூரியன் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுக்க விருப்பம் தெரிவித்துள்ளனர்.  சிவசேனா ஆட்சிபுரியும் மகாராஷ்டிரா மாநிலத்தில் உத்தவ் தாக்கரே தலைமையிலான ஆட்சி நடைபெற்று வந்த வேளையில், உள்கட்சி பிரச்சனை காரணமாக ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான எம்.எல்.ஏக்கள் ஒன்றிணைந்து பாஜகவுடன் கூட்டணி அமைத்து ஆட்சியை கைப்பற்றினர். ஏக்நாத் ஷிண்டே முதல்வராக மாறினார். தற்போது அந்தேரி கிழக்கு பகுதியில் நவம்பர் 3ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற … Read more

மஹாராஷ்டிராவில் புதிய அமைச்சரவை… புதிய முதல்வர்.. 18 அமைச்சர்கள் பதவியேற்பு.!

மஹாராஷ்டிராவில் புதிய முதல்வர் ஏக்நாத் ஷிண்டேதலைமையில் 18 எம்.எல்.ஏக்கள் புதிய அமைச்சர்களாக பொறுப்பேற்கின்றனர். மஹாராஷ்டிராவில் தற்போது ஏகப்பட்ட அரசியல் அதிரடி நகர்வுகள் சினிமாவை மிஞ்சும் அளவுக்கு நடைபெற்று சற்று ஓய்ந்துள்ளது என்றே கூறவேண்டும். சிவ சேனா கட்சி இரண்டாக பிரிந்து இதற்கு முன்னர் முதல்வராக இருந்த உத்தவ் தாக்கரே மற்றும், ஏக்நாத் ஷிண்டே என அணிகளாக மாறியது. இதில் ஏக்நாத் ஷிண்டே தனது ஆதரவாளர்களுடன், பாஜக எம்.எல்.ஏக்களுடன் கூட்டணி அமைந்து மஹாராஷ்டிராவில் ஆட்சியை கைப்பற்றினார். மஹாராஷ்டிரா புதிய … Read more

ஏக்நாத் ஷிண்டேவை சிவசேனா கட்சியில் இருந்து நீக்கம்..! உத்தவ் தாக்கரே அதிரடி..!

உத்தவ் தாக்கரே, ஏக்நாத் ஷிண்டேவை சிவசேனா கட்சியில் இருந்து நீக்கி உத்தரவிட்டுள்ளார். உத்தவ் தாக்கரேவின் ராஜினாமாவை தொடர்ந்து,  உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய அதிருப்தி சிவசேனா தலைவர் ஏக்நாத் ஷிண்டேவை பாஜக முதலமைச்சராக அறிவித்தது. அதன்படி ,நேற்று முன்தினம் மராட்டியத்தில் சிவசேனா மூத்த தலைவர் ஏக்நாத் ஷிண்டே தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் பாஜக ஆதரவுடன் ஆட்சியமைத்துள்ளார். மேலும், துணை முதல்வராக பாஜக-வின் தேவேந்திரபட்னாவிஸ் பொறுப்பேற்றுள்ளார். இந்த நிலையில், உத்தவ் தாக்கரே, ஏக்நாத் ஷிண்டேவை சிவசேனா கட்சியில் … Read more

ரஃபேல் ஜெட் வேகத்தையே மிஞ்சிவிட்டார் மகாராஷ்டிரா ஆளுநர் – எம்பி சஞ்சய் ராவத்.!

மகாராஷ்டிரா மாநிலத்தில் அடுத்தடுத்து நிலவி வரும் அரசியல் மாற்றங்கள் ஆளும் சிவசேனாவுக்கு பெரிய தலைவலியாக மாறியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக அமைச்சர் ஏக்நாத் சிண்டே உள்ளிட்ட 35-க்கும் மேற்பட்ட அதிருப்தி எம்எல்ஏக்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.இதனைத் தொடர்ந்து, மகாராஷ்டிராவில் சிவசேனா தலைமையிலான கூட்டணி அரசுக்கு அளித்து வந்த ஆதரவையும் வாபஸ் பெறுவதாக அதிருப்தி எம்எல்ஏக்கள் அறிவித்தனர். இதனால்,மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே நாளை மாலை 5 மணிக்குள் சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க அம்மாநில ஆளுநர் … Read more

மகாராஷ்டிரா: ஏப்ரல் 11 ஆம் தேதி நடைபெற இருந்த MPSC- தேர்வுகள் ஒத்திவைப்பு…!

மகாராஷ்டிராவில், ஏப்ரல் 11 ஆம் தேதி நடைபெற இருந்த 2021-ம் ஆண்டிற்க்கான ‘மகாராஷ்டிரா பப்ளிக் சர்வீஸ் கமிஷன்(MPSC) தேர்வுகள் கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மஹாராஷ்டிராவில் அதிகரித்து வரும் கொரோனா காரணமாக ஏப்ரல் 11 ஆம் தேதி நடைபெறவுள்ள “மகாராஷ்டிரா பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (MPSC)” தேர்வுகள் தொடர்பாக மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தக்காரேயுடன்,MPSC தேர்வாணைய நிர்வாகம் ஒரு கூட்டம் நடத்தியது, அதைத் தொடர்ந்து MPSC தேர்வுகளை தள்ளி வைக்க முடிவு செய்துள்ளது. COVID-19 தொற்றுகளின் எண்ணிக்கை அதிகரித்து … Read more

கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்றாவிட்டால் ஊரடங்கு தான் – உத்தவ் தாக்கரே

மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே ஞாயிற்றுக்கிழமை மூத்த சுகாதார அதிகாரிகள் மற்றும் கோவிட் -19 பணிக்குழுவுடன் நடந்த கூட்டத்தில், மக்கள் தொடர்ந்து கோவிட் தொடர்பான விதிகளை மீறினால் ஊரடங்கு போன்ற கட்டுப்பாடுகளுக்குத் தயாராகுமாறு அறிவுறுத்தியுள்ளார். மக்கள் கொரோனா வழிகாட்டுதல்களை தீவிரமாக பின்பற்றாததால் கோவிட் -19 தொற்று அதிகரித்து வருகின்றன என்று அவர் கூறினார். ஊரடங்கு போன்ற கடுமையான நடவடிக்கைகளை பரிசீலிக்க வேண்டியது அவசியம் என்று அவர் எச்சரித்துள்ளார். கடந்த ஆண்டின் புள்ளிவிவரங்களுடன் ஒப்பிடுகையில், 2020 செப்டம்பரில் மாநிலத்தில் … Read more

மகாராஷ்ராவில் நுழைய தடை..தாக்கரே தடால்!

மஹாராஷ்டிராவில் சி.பி.ஐ நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது மாநிலத்தின் குறிப்பிட்ட சில முக்கிய வழக்குகளை விசாரிக்க மகாராஷ்டிரா அரசு மத்திய புலனாய்வு சபை எனப்படும் (சிபிஐ)க்கு அளித்த ஒப்புதலை வாபஸ் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மகாராஷ்டிரா அரசு கடந்த புதன்கிழமை மத்திய புலனாய்வுப்பிரிவுக்கு (சிபிஐ)க்கு அளித்த பொது ஒப்புதலை வாபஸ் பெற்றது.இதனால் சிபிஜ மாநில அரசின் அனுமதியின்றி நுழைய முடியாது. சிபிஐ நுழைய தடை விதிக்கும் நடவடிக்கையை மேற்கு வங்கம் மற்றும் ராஜஸ்தானுக்கு அடுத்தபடியாக எடுத்த … Read more

“இன்று எனது வீடு இடிக்கப்பட்டுள்ளது.. நாளை உங்களின் ஆவணமே நொறுங்கும்!”- கங்கனா ரனாவத்

இன்று தனது வீடு இடிக்கப்பட்டது போல, நாளை மகாராஷ்டிரா மாநில முதல்வர் உத்தவ் தாக்கரேயின் ஆணவமே நொறுங்கும் என கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார். மும்பையை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் என பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் கூறியது சர்ச்சையானதையடுத்து, சிவசேனா கட்சிக்கும், கங்கனா ரனாவதுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, மகாராஷ்டிரா மாநில அரசுடன் மோதலில் ஈடுபட்டுள்ள அவருக்கும் அம்மாநில அரசு தொடர்ந்து நெருக்கடிகளை கொடுத்து வருகிறது. இதன்காரணமாக, பாந்திராவில் உள்ள கங்கனா ரனாவத்தின் பங்களாவுடன் உள்ள … Read more