திமுக ஆட்சியை, அதிமுக உட்பட அனைத்து கட்சிகளும் பாராட்டுவதாக திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை அருகே கோவில்பட்டியில் மாற்று கட்சியை சேர்ந்தவர்கள் திமுகவில் இணையும் விழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய திமுக இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம் எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலின், தமிழக சட்டமன்றத்தில் ஒவ்வொரு நாளும் விதி எண் 110-ன் கீழ் முத்தான அறிவுப்புகளை முதலமைச்சர் முக ஸ்டாலின் வெளியிட்டு வருகிறார். ஒட்டுமொத்த தமிழக மக்களும் மகிழ்ச்சியடையும்படி பல்வேறு அறிவிப்புகளை முதல்வர் […]
இந்திய அளவில் கால்பந்து போட்டிக்கு தேர்வான எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின் அவர்களின் மகன் இன்பநிதி ஸ்டாலின். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அபார வெற்றி பெற்று ஆட்சியை சிறப்பாக செய்து வருபவர் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இவரது மகன் உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ. ஆக அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். மேலும், எம்.எல்.ஏ. மற்றும் நடிகருமான உதயநிதி ஸ்டாலின் அவர்களின் மகன் இன்பநிதி ஸ்டாலின் தற்போது இந்திய அளவு கால்பந்து போட்டியில் தேர்வாகியுள்ளார். […]
முதல்வரின் பொது நிவாரண நிதிக்காக நடிகர் சூரி 10.25 லட்சம் நிவாரண நிதியை உதயநிதி ஸ்டாலின் அவர்களிடம் நேரில் சென்று வழங்கியுள்ளார். தமிழகம் முழுவதிலும் கொரோனா பரவல் தினமும் பரவி வரும் நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார். இந்நிலையில் முதல்வரின் பொது நிவாரண நிதிக்காக பொதுமக்கள் தங்களால் முடிந்த அளவிற்கு நிதி அளிக்க வேண்டுமென முதல்வர் கோரிக்கை விடுத்திருந்தார். இதனையடுத்து பல்வேறு திரையுலக பிரபலங்கள் ,அரசியல் […]
தமிழகத்தின் அடுத்த முதல்வராக வாய்ப்பு.தான் வெற்றி பெற்ற சேப்பாக்கம் தொகுதியில் அதிரடி காட்டும் எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின். தமிழக சட்டமன்ற தேர்தலானது கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற்றது.இதனைத் தொடர்ந்து,வாக்கு எண்ணும் பணிகள் கடந்த மே 2ஆம் தேதி நடந்து முடிந்தது.வாக்கு எண்ணிக்கை தொடக்கத்திலேயே திமுக முன்னிலை வகித்து வந்தது.அதிமுக பின்னடைவையே சந்தித்தது.திமுக முன்னிலை வகித்து வந்த நிலையில் 158 இடங்களில் வெற்றி பெற்றது.அதனையடுத்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக முதல்வராக பொறுப்பேற்றார். அதன்பின்னர்,தமிழக முதல்வராக […]
உதயநிதி ஸ்டாலினுக்கு ஆதரவாக திமுக தலைவர் மு.க ஸ்டாலின் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். தமிழகத்தில் நாளை மறுநாள் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதைத் தொடர்ந்து இன்று இரவு 7 மணி வரை தேர்தல் பிரச்சாரம் நடத்த தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. இந்நிலையில் இன்று பிரச்சாரம் செய்ய கடைசி நாள் என்பதால் திமுக தலைவர் ஸ்டாலின் சென்னையில் உள்ள 9 தொகுதிகளில் இறுதிக்கட்டப் பரப்புரையில் ஈடுபட உள்ளார். தற்போது சென்னை சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிடும் திமுக […]