ஏர்ஏசியா,ஜெட் ஏர்வேஸ்,ஸ்பைஸ்ஜெட் ஆகிய நிறுவனங்கள் உள்நாட்டு, வெளிநாட்டு வழித்தடங்களில் இயக்குவதற்காகப் புதிய விமானங்களை வாங்கத் திட்டமிட்டுள்ளன. கடந்த ஆண்டு ஜனவரியில் இந்தியாவில் உள்நாட்டு விமானப் பயணிகளின் எண்ணிக்கை இருந்ததைவிட இந்த ஆண்டில் 18விழுக்காடு அதிகரித்துள்ளது. கச்சா எண்ணெய் விலையும் ஒரு பீப்பாய் எண்பது டாலருக்குள் தொடர்ந்து இருப்பதால் இந்திய விமானப் போக்குவரத்து அடுத்த இருபது ஆண்டுகளுக்கு ஆண்டுக்கு 15விழுக்காடு அளவில் வளர்ச்சியடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஜெட் ஏர்வேஸ் கடந்த ஆண்டு 75 போயிங் 737வகை விமானங்களை வாங்க […]