யு சான்றிதழ் பெற்ற கென்னடி கிளப் திரைப்படம்!
இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில், உருவாகியுள்ள திரைப்படம் கென்னடி கிளப். இந்த படத்தில், இயக்குனர் பாரதிராஜா மற்றும் சசிகுமார் இருவரும் நடித்துள்ளனர். இப்படம் பெண்கள் கபடி குழுவை கதைக்களமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு, இசையமைப்பாளர் இம்மான் இசையமைக்கிறார். இந்த விளையாட்டில் கபடி விளையாட்டை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட பாடல் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது. இந்நிலையில், தணிக்கை குழு இப்படத்திற்கு ‘யு’ சான்றிதழ் வழங்கியுள்ளது.