இருசக்கர வாகனங்களுக்கு வேகக் கட்டுப்பாட்டு கருவி கட்டாயம் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இருசக்கர வாகனங்களுக்கு வேகக் கட்டுப்பாட்டு கருவி கட்டாயம் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இருசக்கர வாகனங்களை தயாரிக்கும்போதே வேகக் கட்டுப்பாட்டு கருவிகளை பொருத்த வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். பைக் உற்பத்தி நிறுவனங்களுக்கு அறிவுறுத்தும்படி, மத்திய மாநில அரசுகளுக்கு நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர். விபத்துகளில் உயிரிழப்பு அதிகரிக்க அதிவேக செல்வதே காரணம் என தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஊரடங்கு காரணமாக கடந்த நான்கு, ஐந்து மாதங்களாக தொழில் உற்பத்தி முடங்கி உள்ளது. இதன் காரணமாக ஜிஎஸ்டி வரியை செலுத்த முடியாமல் பல நிறுவனங்கள் உள்ளனர். இதனால், மாநில அரசுகளுக்கும் வரி இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், ஜிஎஸ்டி கவுன்சிலின் 41-ஆவது கூட்டம் இன்று நடைபெறுகிறது. மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தலைமையில் காணொலி மூலம் இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் மாநிலங்களுக்கு வரி வருவாய் இழப்பை சரிசெய்வதற்கான நிதி ஒதுக்குவது குறித்து ஆலோசிக்க உள்ளதாக அதிகாரிகள் […]