அசாமின் 18 மாவட்டங்களில் 10.75 லட்சம் மக்களை பாதித்த வெள்ளத்தில் சனிக்கிழமை மேலும் இரண்டு பேர் உயிரிழந்ததாக அரசு அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒருவர் மோரிகானிலும், மற்றொருவர் டின்சுகியா மாவட்டத்திலும் இறந்தனர், இதில் மாநிலம் முழுவதும் 61 ஆக உயர்ந்துள்ளது. அவர்களில் 37 பேர் வெள்ளத்தில் உயிரிழந்தனர் மற்றும் 24 பேர் தொடர்ந்து பெய்த மழையால் ஏற்பட்ட நிலச்சரிவுகளால் இறந்தனர் என்று அசாம் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் அங்கு தேமாஜி, பிஸ்வநாத், சிராங், […]