காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகே வயல்வெளியில் அறுந்து கிடந்த மின்சாரக் கம்பியை மிதித்த இரண்டு பசு மாடுகள் பலியாகின. வன்னியர்பேட்டை பகுதியைச் சேர்ந்த செல்லன் என்பவர், தனது இரண்டு கறவை மாடுகளை மேய்ச்சலுக்காக ஓட்டிச் சென்றுள்ளார். அப்போது, பலத்த காற்று வீசியதில் அறுந்து கிடந்த மின்கம்பிகளை மிதித்த இரண்டு மாடுகளும், சம்பவ இடத்திலேயே மின்சாரம் தாக்கி பலியாகின. காற்றில் அறுந்து விழுந்த மின்சாரக் கம்பியை, மின்வாரியத்துறையினர் உடனடியாக சரிசெய்யாததே மாடுகள் உயிரிழக்கக் காரணம் என பொதுமக்கள் குற்றம் […]