இந்தியாவில் 2 லட்சத்துக்கும் அதிகமான எக்ஸ் தள கணக்குகள் நீக்கம்

இந்தியாவில் விதிமுறைகளை மீறி செயல்பட்டதால் 2 லட்சத்துக்கும் அதிகமான எக்ஸ் தள கணக்குகள் நீக்கப்பட்டுள்ளது. அதன்படி, கடந்த 2023 டிசம்பர் 26ஆம் தேதி முதல் 2024 ஜனவரி 25ஆம் தேதி வரையில் 2,31,215 எக்ஸ் கணக்குகள் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எலான் மஸ்க்கின் தலைமையின் கீழ் மைக்ரோ-பிளாக்கிங் தளமான எக்ஸ் தளம், பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் குற்றச்சாட்டில் இந்தியாவில் 1945 கணக்குகளை முடக்கியது. இதை சேர்க்காமல், நிர்வாணப் புகைப்படங்கள் மற்றும் சிறார் ஆபாசப் படங்கள் உள்ளிட்ட விதிமுறைகளை மீறிய விஷயங்களை … Read more

எனது தொலைபேசி எண்ணைத் துண்டிக்கப் போகிறேன்..! எலான் மஸ்க் அறிவிப்பு

இன்னும் சில மாதங்களில் தன்னுடைய தொலைபேசி எண்ணைத் துண்டிக்க இருப்பதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். டெஸ்லா நிறுவனத்தின் நிறுவனரான எலான் மஸ்க் உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருந்து வந்த நிலையில் அண்மையில் இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டார். எக்ஸ் தளத்தின் உரிமையாளராகவும் எலான் மஸ்க் உள்ளார். இந்த நிலையில் அவர் தனது எக்ஸ் பக்கத்தில் முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “இன்னும் சில மாதங்களில் என்னுடைய தொலைபேசி எண்ணைத் துண்டித்துவிட்டு, எக்ஸ் தளத்தை குறுஞ்செய்தி மற்றும் … Read more

டேட்டிங் மற்றும் பணபரிவர்த்தனை ஆப்ஸுக்கு ஆப்பு வைக்கும் எக்ஸ்.! எலான் மஸ்க் அதிரடி தகவல்..

Elon Musk

எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியதில் இருந்து, நிறுவனம் மட்டுமல்லாம் அதன் செயலியிலும் பல புதுப்புது மாற்றங்களை செய்து வருகிறார். அதன்படி, கடந்த ஜூலை மாதம் ட்விட்டரின் பெயர் மற்றும் லோகோவை எக்ஸ் என மாற்றம் செய்தார். அதோடு, ப்ளூடிக் சந்தா கட்டணம் கன்டென்ட் கிரியேட்டர்களுக்கு விளம்பர வருவாய் திட்டம் என பலத்திட்டங்களையும் கொண்டுவந்தார். தற்போது இன்னும் பல திட்டங்களை வெளியிட்டுள்ளார். அதன்படி, ட்விட்டரை வாங்கி ஓராண்டு நிறைவு பெற்றதை ஒட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வைட் எக்ஸ் … Read more

இனி எக்ஸில் (ட்விட்டர்) ஆடியோ மற்றும் வீடியோ கால் வசதி.! அறிமுகம் செய்து அசத்திய எலான் மஸ்க்.!

X

கடந்த ஜூலை மாதம் பிரபல சமூக வலைத்தளங்களில் ஒன்றான ட்விட்டரின் பெயர் மற்றும் லோகோவை எக்ஸ் என மாற்றம் செய்தார் எலான் மஸ்க். இதையடுத்து, பயனர்களுக்காக பல அதிரடியான மாற்றங்களை செய்து வருகிறார். அதன்படி,  ப்ளூடிக் சந்தா கட்டணம், கன்டென்ட் கிரியேட்டர்களுக்கு விளம்பர வருவாய் திட்டம் என பலத்திட்டங்களை கொண்டுவந்தார். அதே போல நாட்டில் நடைபெறும் நிகழ்வுகள், விளையாட்டுகள், பலரின் கருத்துக்கள் போன்ற தகவல்களை தெரிந்து கொள்வதற்கும், மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதற்கும் பயன்படுத்தி வருகின்ற இந்த எக்ஸில், … Read more