தூத்துக்குடியில் தந்தை-மகன் உயிரிழப்புக்கு பலரும் சமூகவலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், ட்விட்டரில் #JusticeForJeyarajAndFenix எனும் ஹேஸ்டேக், இந்தியளவில் 6-ம் இடத்திலும், இந்தியளவில் முதல் இடத்திலும் இடம்பெற்றது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் சேர்ந்த பென்னிஸ் மற்றும் அவரது தந்தை ஜெயராஜ் ஆகியோர் கோவில்பட்டி கிளைச் சிறையில் உயிரிழந்தனர். சிறையில் தந்தை மகன் உயிரிழந்த விவகாரம், தமிழகம் மட்டுமின்றி, இந்தியளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர், 2 எஸ்ஐகளை சஸ்பெண்ட் செய்துள்ளார். […]