அமெரிக்காவிலுள்ள தென் கரோலினா பகுதியிலுள்ள கடற்கரையோரத்தில் கண்டறியப்பட்ட ஆமையின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அமெரிக்காவில் உள்ள தென் கரோலினா கடற்கரைப் பகுதியில் உள்ள எடிஸ்டோ பீச் ஸ்டேட் பூங்காவின் மணலில் கடலாமைகள் முட்டை இடுவது வழக்கம். இந்த பகுதியில் ஆமையின் முட்டைகளிலிருந்து குஞ்சுகள் வெளி வராமல் எங்கேயும் புதைந்து கிடக்கிறதா என்பதை ஆராய்வதற்காக எடிஸ்டோ பீச் ஸ்டேட் பூங்காவின் ரோந்து படை மற்றும் தன்னார்வலர்கள் அப்பகுதியில் சோதனை செய்துள்ளனர். அப்போது மூன்று முட்டைகள் பொரிக்கப்படாத நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. […]