மியான்மரில் செயற்கைகோள் தொலைகாட்சிக்கு தடை. இணையம் மற்றும் ஊடகங்களுக்கு கட்டுப்பாடு. மியான்மரில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பொதுத்தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் முறைகேடுகள் நடைபெற்றதாக கூறி, கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு கலைக்கப்பட்டு, பின் ராணுவ ஆட்சி அமல்படுத்தப்பட்டது. இதற்கு எதிராக மக்கள் போர்க்கொடி தூக்கி வரும் நிலையில், அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. போராட்டத்தில் ஈடுபடும் மக்கள் பலர் கொல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில் மியான்மரில் உள்ள ஜனநாயக குரல் பர்மா […]