தூத்துக்குடியில் ஏற்பட்டுள்ள காற்று மாசு பாட்டிற்கு ஸ்டெர்லைட் ஆலை எப்படி பொறுப்பாக முடியும் என்று வேதாந்தா தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வாதிடப்பட்டுள்ளது. ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கோரி நடந்து வரும் வழக்கின் விசாரணை இன்று வந்தது. அப்போது வாதிட்ட ஸ்டெர்லைட் தரப்பு வழக்கறிஞர்கள் தூத்துக்குடியில் மாசு ஏற்பட ஸ்டெர்லைட் தான் காரணம் என்பதற்கான எந்தவித ஆதாரமும் இதுவரை கிடைக்கவில்லை என்றும் இதனால் வீண் பலி சுமத்தப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தனர். மேலும், அதிக மாசுபாட்டிற்கு காரணம் தூத்துக்குடியில் இருக்கும் […]
அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக்கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக எழுந்த புகாரின்பேரில் கைது செய்யப்பட்டார். சாத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கடந்த 20-ந்தேதி காவலில் எடுத்தனர். 25-ந்தேதி பகல் 2 மணி வரை பேராசிரியை நிர்மலா தேவியிடம் விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு கோர்ட்டு அனுமதி வழங்கியது. அதன்படி விருதுநகர் சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் பேராசிரியை நிர்மலாதேவியிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. ஆனால் பேராசிரியை நிர்மலாதேவி இந்த விவகாரத்தில் உயர் அதிகாரிகளுக்கு தொடர்பு […]
தூத்துக்குடி மாவட்ட கூடைப்பந்து கழகம் மற்றும் தமிழ்நாடு கூடைப்பந்து கழகம் ஆகியவை இணைந்து நடத்தும் 18 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி வருகிற 26-ந்தேதி முதல் 29-ந்தேதி வரை நடக்கிறது. போட்டிகள் தருவை கூடைப்பந்து மைதானம், விகாசா பள்ளி, லசால் பள்ளி, கிரசண்ட் பள்ளி மைதானங்கள் ஆகிய 4 இடங்களில் காலை மற்றும் மாலை நேரங்களில் நடக்கிறது. போட்டி தொடக்க விழா வருகிற 26-ந்தேதி மாலை 6 மணிக்கு தருவை மைதானத்தில் நடக்கிறது. […]
கோவில்பட்டி புதுகிராமத்தைச் சேர்ந்தவர் கருப்பசாமி என்ற ரமேஷ் (வயது 42). தி.மு.க. வடக்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளரான இவர் முன்னாள் நகரசபை கவுன்சிலர் ஆவார். இவர் கோவில்பட்டி-கடலையூர் ரோட்டில் எலக்ட்ரிக்கல் கடையும், அதன் மாடியில் சர்வீஸ் மையமும் நடத்தி வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவில் வழக்கம்போல் தனது கடையை பூட்டி விட்டு சென்றார். பின்னர் நள்ளிரவில் அங்கு வந்த மர்மநபர்கள் கடையின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்தனர். அங்கு மேஜையில் இருந்த ரூ.3,200-ஐ திருடினர். […]
தூத்துக்குடியில் ஸ்டொ்லைட் ஆலைக்கு எதிராக ஏராளமான பொதுமக்கள் பதாகைகள் ஏந்தி பேரணியாக சென்று போராட்டம் நடத்தினா். பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்றும் அவா்கள் வழியுறுத்தி போராடி வருகின்றனா். இந்த பேரணியில் 15க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஒன்று இணைந்து சென்று மாசு கட்டுப்பட்டு மையத்தை முற்றுகையிட போவதாக முடிவு செய்துள்ளனா். இந்த போராட்டத்தில் ஏராளமான போராட்டகாரா்கள் கருப்பு சட்டைகள் அணிந்து கொண்டு மாசு கட்டுப்பட்டு மையத்தை நோக்கி பேரணியாக சென்றனா்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ 3-வது கட்டமாக நேற்று மாலையில் செய்துங்கநல்லூரில் இருந்து வாகன பிரசார பயணத்தை தொடங்கினார். அவர் திறந்தவேனில் நின்று பேசும்போது கூறியதாவது:- காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் மத்திய அரசு எடுக்கும் முடிவால் தஞ்சை மாவட்டம் பாலைவனமாகி விடும். கர்நாடக அரசு மேலும் 2 அணைகளை கட்டினால், நமது மாநிலத்துக்கு ஒரு சொட்டு தண்ணீர்கூட கிடைக்காத நிலை ஏற்படும். இதற்கு ஒரே தீர்வு, காவிரி மேலாண்மை வாரியம் […]
தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டம், ஆறுமுகநேரியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நேற்று மாலையில் நடந்தது. தெற்கு மாவட்ட தலைவர் ஜெயகுமார் தலைமை தாங்கினார். முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் டேனியல்ராஜ், சுடலையாண்டி, மாநில இளைஞர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஊர்வசி அமிர்தராஜ், வக்கீல்கள் மகேந்திரன், சந்திரசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார தலைவர் சற்குரு வரவேற்று பேசினார். தமிழகத்தில் 30 லட்சம் காங்கிரஸ் உறுப்பினர்கள் சேர்ந்து உள்ளனர். காமராஜர் பிறந்த […]
தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி அ.குமரெட்டியபுரம் மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்கள் இன்று 68–வது நாளாக போராட்டம் நடத்தினர். ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக் கோரி கோஷம் எழுப்பினர். தூத்துக்குடி பனிமயமாதா ஆலயம் அருகேயும் மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். சில்வர்புரம் பகுதியில் பாளையாபுரம், சுப்பிரமணியபுரம், சில்வர்புரம் ஆகிய பகுதிகளை சேர்ந்த மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்கள் காற்றில் மாசு கலந்து இருப்பதால், மக்கள் சுவாசிக்க முடியாத […]
உலக சுகாதார தினத்தை முன்னிட்டு குலையன்கரிசல் கிராமத்தில் சுகாதாரப்பணி மற்றும் மருத்துவ முகாம் நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ் தலைமை தாங்கி சுகாதாரப்பணி மற்றும் மருத்துவ முகாமை தொடங்கி வைத்து பேசினார். நோயினால் உடல் நலம் பாதிக்கப்படும் போது, ஒரு மனிதனின் ஆரோக்கியம் மற்றும் பொருளாதாரம் பாதிக்கப்படுகிறது. எனவே, பொது மக்கள் தங்களது பகுதியில் நடைபெறும் மருத்துவ முகாமில் கலந்து கொள்ள வேண்டும். மேலும், இந்த முகாமில் அரசு மருத்துவர்கள் வழங்கும் ஆலோசனையின்படி தூத்துக்குடி அரசு […]
அனைத்து கிராமங்களில் அடித்தட்டு மக்களுக்கு அதிக சேவை வழங்க தமிழக அரசால் அம்மா திட்ட முகாம் நடத்தப்படுகிறது. இந்த முகாம் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமைகளில் அந்தந்த தாசில்தார்கள் தலைமையில் நடக்கிறது. இந்த வாரத்துக்கான முகாம் இன்று(வெள்ளிக்கிழமை) நடக்கிறது. இந்த முகாம் தூத்துக்குடி தாலுகா மேலத்தட்டப்பாறையிலும், ஸ்ரீவைகுண்டம் தாலுகா பெருங்குளத்திலும், திருச்செந்தூர் தாலுகா தென்திருப்பேரையிலும், சாத்தான்குளம் தாலுகா பிடானேரியிலும், கோவில்பட்டி தாலுகா இடைசெவல் பகுதி–2 கிராமத்திலும், விளாத்திகுளம் தாலுகா புதூர் குளக்கட்டாக்குறிச்சியிலும், எட்டயபுரம் தாலுகா ஆத்திக்கிணறு மற்றும் தி.சண்முகபுரம் […]
தூத்துக்குடி மாவட்டத்தில் இயங்கி வரும், அடைக்கப்பட்ட குடிநீர் பாட்டில்கள் தயாரிக்கும் நிறுவனங்களில் தயாரிக்கப்பட்ட குடிநீரின் தரத்தை பொதுமக்கள் தாங்களாகவே தெரிந்து கொள்ள உணவுப் பாதுகாப்பு துறை ஏற்பாடு செய்துள்ளது. https:/safewataerfssai.gov.in/cleanwater/home என்ற இணையதளத்தில் உள்ள தரவினை பயன்படுத்தி குடிநீர் பாட்டில், பாக்கெட், கேனில் உள்ள ஐ.எஸ்.ஐ. எண் அல்லது உணவுப் பாதுகாப்பு உரிமம் திஷிஷிகிமி எண்ணை பயன்படுத்தி அந்த நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட குடிநீரின் 6 மாதம் மற்றும் ஒரு வருட பரிசோதனை அறிக்கை, ஐ.எஸ்.ஐ. தரம், உணவுப் […]
தூத்துக்குடி 3–வது மைல் பகுதியை சேர்ந்தவர் சேகர் என்ற குணசேகர்(வயது 47). கட்டிட தொழிலாளி. இவருடைய மனைவி லதா என்ற சகாயலதா(43). குணசேகரனுக்கு மதுப்பழக்கம் இருந்து வந்தது. இதனால் சரிவர வேலைக்கு செல்லாமல் மது குடித்து விட்டு, வீட்டில் தகராறு செய்து வந்தார். கடந்த 22–2–14 அன்று வீட்டில் வைத்து இருந்த ரூ.40 ஆயிரம் பணத்தை காணவில்லை. இதனை குணசேகரன் எடுத்து சென்றதாக கருதி, சகாயலதா மற்றும் அவருடைய 17 வயது மகன் ஆகியோர் அவரை சத்தம் […]
தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு மேலும் ஒரு தனியார் விமான சேவை ஜூன் மாதம் முதல் தொடங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தூத்துக்குடி தொழில் நகரமாக வளர்ச்சி பெற்று உள்ளது. இதனால் பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் தூத்துக்குடிக்கு வந்து செல்கின்றனர். இதன் காரணமாக தூத்துக்குடி விமான நிலையம் சுறுசுறுப்பாக இயங்கி வருகிறது. அதே நேரத்தில் தூத்துக்குடி விமான நிலையத்துக்கு ஏர்பஸ் உள்ளிட்ட பெரிய விமானங்கள் தரையிறங்கும் வகையில் விரிவாக்கம் செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கான நிலம் மாவட்ட […]
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக் கோரி, பல்வேறு கிராம மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் தூத்துக்குடி அருகே உள்ள சோரீஸ்புரம் கிராம மக்கள் நேற்று காலை அந்த பகுதியில் உள்ள சந்தனமாரியம்மன் கோவில் அருகே திரண்டு போராட்டத்தை தொடங்கினர். அங்கு மரத்தடியில் அமர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக் கோரி கோஷம் எழுப்பினர். பின்னர் கோரிக்கையை வலியுறுத்தி கிராம மக்கள் சிலர் கலெக்டர் அலுவலகத்துக்கு சென்று மனு கொடுத்தனர். அந்த மனுவில் […]
ஓட்டப்பிடாரம் அருகே திங்கள்கிழமை மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த ஐடிஐ மாணவர் உயிரிழந்தார். ஓட்டப்பிடாரம் அருகேயுள்ள மேலமீனாட்சிபுரம் கிராமத்தை சேர்ந்த ராமர் மகன் வேல்ராஜ் (18). ஐடிஐ படித்து வந்தார். இவர், மேலமீனாட்சிபுரத்தில் இருந்து கவர்னர்கிரி நோக்கி திங்கள்கிழமை மோட்டார் சைக்கிளில் சென்றாராம். அப்போது, எதிர்பாராதவிதமாக தவறி விழுந்ததில் வேல்ராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து ஓட்டப்பிடாரம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி திரேஸ்புரத்தைச் சேர்ந்த செய்யது உமர் காத்தான் என்பவருக்கு சொந்தமான நாட்டுப்படகில் சுனாமி காலனி யாசின் மகன் சம்சுகனி (37), மனோ (35) உள்பட 7 மீனவர்கள் தாளமுத்துநகர் கடற்கரையிலிருந்து சங்கு குளிக்க சென்றனர். திருச்செந்தூருக்கு தெற்கே 13 கி.மீ. கடல்மைல் தொலைவில் சங்கு குளித்து கொண்டிருந்தபோது, சம்சுகனி திடீரென நெஞ்சு வலிப்பதாக கூறியுள்ளார். இதையடுத்து, படகை உடனடியாக ஜீவாநகர் கடற்கரைக்கு திருப்பி, சம்சுகனியை திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். அங்கு சம்சுகனி இறந்துவிட்டதாக […]
ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி மதிமுக பொதுச்செயலர் வைகோ எட்டயபுரத்தில் பிரசாரம் செய்தார். எட்டயபுரம், புதூர், நாகலாபுரம், விளாத்திகுளம், சூரன்குடி, வைப்பார், குளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் வைகோ பிரசாரம் மேற்கொண்டார். எட்டயபுரத்தில் அவர் பேசியதாவது: ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி கொடுத்து, கொண்டுவந்தது ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு தான். தற்போது ஆலை விரிவாக்கத்துக்கு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி கொடுக்கவில்லை என தமிழக அரசு கூறுவது ஓர் ஏமாற்று வேலை. தமிழக அரசு மோடி சொல்வதை கேட்டு […]
பயிர் காப்பீட்டுக்கான இழப்பீடு தொகை சரிசெய்து இழப்பீட்டு தொகையை உடனடியாக வழங்க கோரி ரெகுராமபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தை வெளவால்தொத்தி கிராம விவசாயிகள் முற்றுகையிட்டனர். புதூர் ஊராட்சி ஒன்றியத்தில் ரெகுராமபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் செங்கோட்டை, ரெகுராமபுரம், வெளவால்தொத்தி, புதுப்பட்டி ஆகிய கிராமங்கள் உள்ளன. இக்கிராம விவசாயிகள் மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்களுக்கு பயிர் காப்பீடு செய்திருந்தனர். போதிய மழை இல்லாததால் விளைச்சல் இன்றி நஷ்டம் ஏற்பட்ட நிலையில் பயிர்காப்பீடு […]
தூத்துக்குடி மாவட்டம் பிரைன்ட் நகர் 7வது தெருவில் உள்ள சுந்தரவல்லி திருமண மண்டபத்தில் வைத்து சோமு செம்பு அறக்கட்டளை மற்றும் கோவில்பட்டி ஆர்த்தி மருத்துவமனை இணைந்து நடத்தும் இலவச மருத்துவ முகம் நடைபெற்றது. இம்முகாமிற்கு DYFI இரத்ததான கழகத்தின் தலைவர் கே.ஆறுமுகம் தலைமையில் நடைபெற்றது.இதற்கு சோமுவின் தந்தை சுப்பிரமணியன் மற்றும் செம்புவின் தாயார் ராஜாத்தி முன்னிலை வகித்தனர் . இதில் மருத்துவர்கள் பி. சிவனாகரன் பொது மருத்துவர் ,பால்சாமி குழந்தை மருத்துவர்,வசந்தகுமார் குழந்தை மருத்துவர் ,பாண்டியன் கண் […]
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெ.மகேந்திரன். கோவில்பட்டி கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரியின் 52ஆவது கல்லூரி ஆண்டு விழா நிகழ்ச்சியில் அவர் மேலும் பேசியது: காலதாமதம், மறதி, சோம்பல், தூக்கம் இந்த நான்கு விசயங்களை மாணவர்கள் தவிர்த்தால் அது உங்களுடைய கல்விக்கும், வளர்ச்சிக்கும் நன்றாக இருப்பது மட்டுமின்றி, உங்களால் எதையும் சாதிக்கவும் முடியும். கிடைத்த வாய்ப்பினை பயன்படுத்தினால் அது வெற்றி, தவறவிட்டால் அது தோல்வி. இதுதான் வெற்றிக்கும், தோல்விக்கும் உள்ள வித்தியாசம். மாணவர் பருவத்தில் கிடைக்கும் வாய்ப்புகளை சரியாகப் […]