ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து வெளிவரும் புகையால் தூத்துக்குடி நகரம் பெரும் மாசுபாடு அடைந்துள்ளதாக தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. தமிழக அரசு சார்பில் தூத்துக்குடியில் இருக்கும் ஸ்டெர்லைட் ஆலை கடந்த வருடம் மூடப்பட்டது. இதை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு இருந்தது. வழக்கு விசாரணையில் தூத்துக்குடியில் மாசுபாடு ஏற்படுவதற்கு ஸ்டெர்லைட் ஆலை காரணமில்லை என்றும் அனல் மின் நிலையங்களே காரணம் என்று வேதாந்தா தரப்பு தெரிவித்து இருந்தது. இந்நிலையில், இன்று […]
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடியதற்கு துப்பாக்கி சூடு காரணமல்ல என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கக்கோரி வேதாந்தா நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. ஸ்டெர்லைட் ஆலையினால் தூத்துக்குடியில் எவ்வித மாசும் ஏற்படவில்லை என்று வேதாந்தா தரப்பு கூறி இருந்தது. மேலும், ஸ்டெர்லைட் ஆலையை மூட அரசு எவ்வித கொள்கை முடிவும் எடுக்காமல் மக்களை சமாதான படுத்தவே மூடியுள்ளதாக வாதிட்டனர். இந்நிலையில், அந்த வழக்கு இன்று […]
தூத்துக்குடி மாவட்டம் குலையன்கரிசல் பகுதியை சேர்ந்த திமுக பிரமுகர் ஒருவர் வெட்டி படுகொலை இன்று மாலை செய்யப்பட்டுள்ளார். திராவிட முன்னேற்ற கழகத்தின் மாநில பொதுக்குழுவில் உறுப்பினராக இருப்பவர். வி.எஸ். கருணாகரன். தூத்துக்குடி ஒன்றியத்தில் திமுக முன்னாள் தலைவராகவும் இருந்துள்ளார். இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம் குலையன்கரிசல் பகுதியில் இன்று மாலை வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். இவர் எதற்க்காக படுகொலை செய்யப்பட்டார் , யார் படுகொலை செய்தது என்று காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.