ஸ்டெர்லைட் ஆலையால் தூத்துக்குடியில் மிகக்குறைந்த அளவில் மட்டுமே பாதிப்பு உள்ளதாக வேதாந்தா தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கக்கோரி வேதாந்தா நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. இன்று நடந்த விசாரணையில் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் விதிமுறைகளை முறையாக பின்பற்றிய போதும் தமிழக அரசு ஆலையை முடியுள்ளதாக வேதாந்தா தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், தூத்துக்குடியில் ஆலையால் ஏற்படும் பாதிப்பு மிக ககுறைவு என்று நீதிபதிகளிடம் வாதிட்டனர். தமிழக […]
தூத்துக்குடியில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் காப்பர் ஆலையை திறக்கக் கோரி வேதாந்த நிறுவனம் தொடுத்த வழக்கு விசாரணையை ஜூலை 4 ம் தேதிக்கு ஒத்திவைத்தது சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வேதாந்தா குழுமம் சார்பில் தூத்துக்குடியில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த ஆண்டு தூத்துக்குடியில் பெரும் போராட்டம் நடைபெற்றது. அப்போது காவலர்கள் இடையில் புகுந்து 13 பேரை சுட்டுக் கொன்றனர். உடனடியாக, தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டது. இந்நிலையில், […]
தூத்துக்குடி ஸ்ரீகாமாஷி வித்யாலயம் பள்ளி 12ஆம் வகுப்பு மாணவன் A.தினேஷ் தமிழக டேக்வாண்டோ அணிக்கு தேர்வாகியுள்ளார்… இந்திய பள்ளி விளையாட்டு குழுமத்தால் நடத்தப்படும் தேசிய அளவிலான டேக்வாண்டோ போட்டி இந்த மாதம் 10ஆம் தேதி தருமபுரி மாவட்ட உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.இதில் தமிழகம் முழுவதும் உள்ள பல்லை மாணவர்கள் என மொத்தம் 500 பேர் பங்கேற்றனர். இதில் தூத்துக்குடி ஸ்ரீகாமாஷி வித்யாலயம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் இருந்து 4 மாணவர்கள் பங்கேற்றனர்.அதில் 12ஆம் வகுப்பு மாணவன் A.தினேஷ் 78கிகி மேற்பட்டோருக்கான எடை பிரிவில் முதலாம் […]
தூத்துக்குடி AVM மருத்துவமனை முன்பு உயிருக்கு சேதம் விளைவிக்கும் வகையில் உள்ள மின்கடத்தி (டிரான்ஸ்பார்ம்) பெட்டியை அப்புறப்படுத்த வேண்டி மார்க்சிஸ்ட் கட்சி கோரிக்கை தூத்துக்குடி , திருநெல்வேலி சாலையில் உள்ள AVM மருத்துவமனை எதிர்புறம் உள்ள மின்கடத்தி(டிரான்ஸ்பார்ம்) பெட்டி மழை நீரில் சேதமடைந்து மிதக்கிறது.இதனால் சாலையில் நடந்து செல்லும் மக்களுக்கு உயிர் சேதம் ஏற்பட வாய்ப்புள்ளது எனவே அதை உடனே சரி செய்ய மின்சார வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகர செயலாளர் தா.ராஜா […]
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான பதிவு செய்யப்பட்டுள்ள 178 வழக்குகளின் விசாரணையை சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து அனைத்து வழக்குகள் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் வரும் 7-ம் தேதி சென்னையில் சி.பி.ஐ அதிகாரிகளிடம் ஒப்படைக்க உள்ளதாக சி.பி.சி.ஐ.டி போலீஸார் தெரிவித்துள்ளனர்.தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடிட வலியுறுத்தி கடந்த மே 22-ம் தேதி பொதுமக்கள் ஆட்சியர் அலுவலகம் நோக்கி முற்றுகைப் போராட்டம் நடத்தினர்.அப்போது போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையால் காவல்துறை தடியடியும் துப்பாக்கிச்சூடும் நடத்தியது. இதில், 2 பெண்கள் உட்பட 13 பேர் […]
தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த வேதாந்தா குழுமத்துக்கு சொந்தமான ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சூழல், உடல்நல பாதிப்பு ஏற்படுவதாகக் கூறி அப்பகுதி மக்கள் தொடர்ந்து பல் வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர். கடந்த மே மாதம் 22-ம் தேதி ஏற்பட்ட கலவரத்தைத் தொடர்ந்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பலியானார்கள். இதன் தொடர்ச்சியாக ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடத் தமிழக அரசு உத்தரவிட்டது.இந்த உத்தரவை எதிர்த்து ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம், டெல்லியில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு […]
தூத்துக்குடி , டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைகழக மாணவர் பேரவை தேர்தலில் இடதுசாரி மாணவர் அமைப்புகள் வெற்றி பெற்றதை கொண்டாடும் விதமாகவும் வெற்றி பெற்ற நிர்வாகிகளை வாழ்த்தும் விதமாக இந்திய மாணவர் சங்கம் தூத்துக்குடி மாவட்டக்குழு சார்பில் பழைய பேருந்து நிலையம் முன்பு பட்டாசுகள் வெடித்து இனிப்புகள் வழங்கப்பட்டது .டெல்லி பல்கலைக்கழகத்தில் மாணவர் பேரவைத் தேர்தல் சமீபத்தில் நடைபெற்றது. இதில் தலைவர், துணை தலைவர், செயலாளர், இணை செயலாளர் ஆகிய நான்கு பதவிகளுக்கு நடந்த தேர்தலில் பலத்த […]
தூத்துக்குடி , தூத்துக்குடி அரசு மருத்துவமனையை பல்வேறு கட்டமைப்பு வசதிகள் செய்தாலும் பராமரிப்பு நிர்வாகபணியானது நோயாளிகள் மற்றும் பலரை விமர்சனம் செய்யவைத்துள்ளது. தூத்துக்குடி அரசு மருத்துவமனை ஆயிரக்கணக்கான உள் நோயாளிகள் சிகிசைப்பெற்று வருவது உட்பட ஆயிரக்கணக்கன நோயாளிகள் என தினமும் சிகிசைக்கு வந்து செல்கிற்றனர்.இந்நிலையில் அரசு மருத்துவமனை நிர்வாகம் சார்பில் மருத்துவமனை நிர்வாகத்தின் ஒப்புதலுடன் ஒரு உணவகம் சமீபத்தில் தொடங்கப்பட்டது.அரசு மருத்துவமனையின் பின்புற வளாகத்தில் பிணவறை அருகே தொடங்கப்பட்ட இந்த உணவுக் கூட்டத்தை நோயாளிகள் உட்பட பலரும் பிணவறையை […]
கடையை மூடச் சொன்ன காங்கிரஸ் கட்சியினரை அரிவாளைக் காட்டி மிரட்டிய கடையின் உரிமையாளர்… கோவில்பட்டி , இன்று இந்திய முழுவதும் பெட்ரோல் , டீசல் விலை உயர்வை கண்டித்து பாரத் பந்த் தை காங்கிரஸ் கட்சி அறிவித்தது.இதில் தமிழகத்தில் அதிமுக , பிஜேபி தவிர அனைத்து கட்சிகள் , தொழிற்சங்கம் , வணிகர் சங்கம் என பெரும் பகுதி அதரவு அளித்தனர்.அந்த வகையில் இன்று தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் முழு அடைப்பு போராட்டத்தையொட்டி கடையை மூட வேண்டும் […]
ஸ்டெர்லைட் ஆலையின் உரிமத்தைப் புதுப்பிக்க மறுத்து ஆணை பிறப்பித்தப் பின்னர், மத்திய நீர்வளததுறை திடீரென்று ஆய்வு நடத்தி பொய்யான, ஆதாரமற்ற அறிக்கையை அளித்து, தமிழக அரசுக்கும் அதை அனுப்பி, ஸ்டெர்லைட் நிறுவனத்துக்கு ஆதரவான நிலைப்பாட்டை மேற்கொண்டதை பொறுத்துக்கொள்ள முடியாது என்று மதிமுக பொதுச்செயலர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: தூத்துக்குடி ஸ்டெர்லைட் நச்சு ஆலையை மூடக்கோரி மக்கள் கொந்தளிப்பு ஏற்பட்டு போராட்டங்கள் வெடித்தன. போராடிய மக்கள் மீது காவல்துறை நடத்திய […]
மத்திய பாஜக அரசும் – மாநில அதிமுக அரசும் ஸ்டெர்லைட் ஆலையைத் திறப்பதற்கு கைகோர்த்து செயல்படுவது கடும் கண்டனத்துக்குரியது எனவும் மத்திய அரசின் “நீர் ஆய்வு” அறிக்கையை எதிர்த்து தமிழக அரசு உடனடியாக வழக்குத் தொடர வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். “தூத்துக்குடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசுக்கு ஸ்டெர்லைட் ஆலை மட்டுமே காரணமில்லை” என்று மத்திய நீர்வளத்துறை ஆய்வு அறிக்கையை வெளியிட்டு இருப்பது கடும் கண்டனத்துக்குரியது என அவர் தெரிவித்துள்ளார். […]
தூத்துக்குடி மாநகராட்சி பகுதிக்குட்பட்ட பிரையன்ட் நகர் 4 ஆவது தெரு , மேற்கு பகுதியில் குடிநீர் பைப் உடைந்து குடிநீர் வெளியே வீணாக செல்கின்றது.இது குறித்து அந்த பகுதி மக்களிடம் கேட்டபோது இரண்டு மாதங்களாக தண்ணீர் வீணாக போய் கொண்டுதான் இருக்கிறது என்றனர்.மாநகராட்சி நிர்வாகம் வீணாகும் குடிநீரை பற்றி அக்கறை எடுக்கவில்லை எனவே இதை கண்டுக் கொள்ளாமல் மாநகராட்சி நிர்வாகம் விட்டு விட்டது என்றனர். இந்நிலையில் குடிநீர் குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை சரி செய்து குடிநீர் வீணாவதை […]
தூத்துக்குடி , மாநிலவிளையாட்டு துறை சார்பில் மாவட்ட வாரியாக வட்டு எறிதல் போட்டி நடத்தி மாநில அளவில் விளையாட வீரர்களை தேர்வு செய்து வருகின்றனர்.அந்தவகையில் திருச்செந்தூர் சிவந்தி ஆதித்தனார் அகாடமியில் மாணவர்கள் தேர்வு நடைபெற்றது.இதில் பல்லவேறு பள்ளி , கல்லூரி மாணவர்கள் பங்கேற்றனர். பள்ளி மாணவர்களுக்கான மாநில அளவிலான தேர்வு நடைபெற்ற போது அதில் கலந்து கொண்ட தூத்துக்குடி காமாட்சி வித்யாலயம் பள்ளி மாணவன் ஆ.தினேஷ் என்ற மாணவன் வட்டு எரித்தலில் இரண்டாம் இடம் பிடித்து மாநில […]
வ.உ.சி என்றழைக்கப்படும் வ.உ.சிதம்பரனார் பிறந்தநாளான இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அனுசரிக்கப்பட்டது. தூத்துக்குடி வி.பி சிந்தன் படிப்பகத்தில் 14 மற்றும் 15 வது வார்ட் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வ.உ.சிதம்பரனாரின் 146 வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.இந்த நிகழ்வுக்கு அழகுபாண்டியன் தலைமை தாங்கினர். கண்ணன் ,சேதுராமன் , பூவலிங்கம் , உலக நாதன் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் மாவட்ட செயலாளர் MS.முத்து , மாநகரக்குழு உறுப்பினர்கள் காஸ்ட்ரோ , அருண் மற்றும் பலர் பங்கேற்றனர். இதில் சுதந்திர போராட்ட […]
தூத்துக்குடி , நெல்லையில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு விமானத்தில் வருகை தந்த தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் தமிழிசையை விமானத்தில் வைத்து அவருக்கு எதிராக பாசிச பாஜக ஆட்சி ஒழிக என்று கோஷமிட்டார் சோபியா என்ற பெண்மணி எனவே சோபியா மீது நடவடிக்கை எடுக்க கோரி விமான நிலைய போலீசாரிடம் பாஜக தலைவர் தமிழிசைசவுந்தராஜன் மனு அளித்தார்.இதனையடுத்து, சோபியாவை கைது செய்த போலீசார், நீதிபதி முன்பு ஆஜர்படுத்தினர். விசாரித்த தூத்துக்குடி நீதிமன்றம் தமிழிசை முன் […]
தூத்துக்குடி மாவட்டம் விசைப்படகுகளின் அத்துமீறல்களில் இருந்து பாரம்பரிய நாட்டுப்படகு மீனவர்களை பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர் நாட்டுப்படகு மீனவர்கள்.அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் வேம்பார் முதல் பெரியதாழை வரையிலும் உள்ள நாட்டுப்படகு மீனவர்கள் நேற்று கடலுக்கு மீன் புடிக்க செல்லவில்லை.. நாட்டுப்படகு மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் நோக்குடன் 1983-ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட சட்டத்தை முழுவதும் அமல்படுத்த வேண்டும்.பதிவு செய்யப்படாத விசைப்படகுகளை கடலில் மீன்பிடிக்க அனுமதிக்க கூடாது. […]
கயத்தாறு, தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு தாலுகாவில் உள்ள கடம்பூர் அரசு ஆஸ்பத்திரியில் பெண்ணுக்கு குழந்தை இறந்து பிறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பணியில் டாக்டர் இல்லாததே காரணம் என அந்த பெண்ணின் உறவினர்கள் புகார் தெரிவித்தனர். கடம்பூர் மேல ரத வீதியைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். கூலி தொழிலாளி. இவருடைய மனைவி செல்வராணி (வயது 23). கர்ப்பமாக இருந்த இவர் கடம்பூர் அரசு ஆஸ்பத்திரியில் தொடர் சிகிச்சை பெற்று வந்தார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த செல்வராணிக்கு நேற்று குழந்தை பிறக்கும் என்று […]
ஊரக வேலை உறுதி திட்டத்தில் பணி கேட்டு புதூர் யூனியன் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை விளாத்திகுளம் தாலுகா புதூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட நம்பிபுரம் பஞ்சாயத்தில் ஊரக வேலை உறுதி திட்டத்தில் அனைவருக்கும் பணி அளிக்கப்படவில்லை. வீட்டில் கழிப்பறை கட்டினால் தான், வேலை உறுதி திட்டத்தில் பணி வழங்கப்படும் என பஞ்சாயத்து நிர்வாகம் தெரிவித்துள்ளது. இத்திட்டத்தில் ஒரு நாளுக்கு ரூ.224 சம்பளம். ஆனால் இங்குள்ள தொழிலாளர்களுக்கு அதிகபட்சமாக ரூ.160 மட்டுமே சம்பளம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், முதியோர் ஓய்வூதியம் […]
தூத்துக்குடி மாவட்டம் , வைகுண்டம் தாலுகாவில் உள்ள சந்தையடிதெரு, குருசு கோயில்தெரு, ஓடைப்பகுதியில் வசிக்கும் பொது மக்கள் சார்பாக தூத்துக்குடி மாவட்ட கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.அதில் , எங்கள் பகுதியில் 22 குடும்பங்கள் 40 ஆண்டுகளாக குடியிருந்து வருகிறோம். தற்போது புதிதாக வந்த வட்டாட்சியர், ஓடைபுறம்போக்கில் வீடு கட்டியுள்ளீர்கள். உடனே காலி செய்யுங்கள் என எங்களை வற்புறுத்தி வருகிறார்.நாங்கள் இந்த இடத்தை காலி செய்து விட்டால் மாற்று இடத்துக்கு எங்கே போவோம் எனவே எங்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும். […]
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை,ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி, முற்றுகையிட முயன்ற கல்லூரி மாணவர்களுக்கும், போலீசாருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி, தூத்துக்குடியில் உள்ள கல்லூரி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டங்களில் ஈடுபட்டனர்.இந்திய மாணவர் சங்கம் சார்பில் வ.உ.சி. கல்லூரி, காமராஜர் கல்லூரி, போப் கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்களும், அரசு ஐ.டி.ஐ. மாணவர்களும் இன்று வகுப்புகளைப் புறக்கணித்தனர். இவர்கள் அனைவரும் நெல்லை பைபாஸ் சாலையில் ஒன்று திரண்டு, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை […]