அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் முறைகேடாக ரூ.60 கோடி சொத்து சேர்த்ததற்கு ஆதாரம் இருக்கிறது என அமலாக்கத்துறை தூத்துக்குடி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. திமுக ஆட்சியின் போது வருமானத்துக்கு அதிகமாக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை கடந்த 2006ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தது. இந்த வழக்கு தூத்துக்குடி முதன்மை குற்றவியல் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இதையடுத்து, அனிதா ராதாகிருஷ்ணன் மீது மாநில லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்த […]