தூத்துக்குடி : உலகம் முழுவதும் உள்ள ஹிந்துக்களால் கொண்டாடப்படும் ஒரு பண்டியாகத் தீபாவளி கருதப்படுகிறது. இந்த தீபாவளி திருநாளில், வெடி வெடிப்பதுடன், புத்தாடை, பலகாரங்கள் என அந்நாள் முழுவதுமே களைக்கட்டும் ஒரு விழாவாகவே தமிழகம் முழுவதுமே கொண்டாடப்பட்டுகிறது. அப்படி தீபாவளியில் முக்கிய பங்காகப் பார்க்கப்படுவது இனிப்புகளும், பலகாரங்களும் தான். அதிலும், பலர் இந்த இனிப்புகள், பலகாரங்கள் என அனைத்தையும் பிரபல பரிட்சியமான கடைகளில் வாங்குவார்கள். உணவில் கலப்படம், தரமற்ற உணவு என இப்படி ஒரு சில காரணங்களுக்காகச் […]
சென்னை : வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாநிலங்களில் மழை பெய்து வருகிறது. இதன் விளைவாக, தற்போது மதுரையில் தரையிரங்க வேண்டிய 2 விமானம் வானில் வெகு நேரமாக வட்டமடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, பெங்களுருவில் மற்றும் சென்னையிலிருந்து மதுரைக்கு வந்த 2 இண்டிகோ விமானங்கள் தரையிறங் வேண்டிய நிலையில் கனமழை அங்கு பெய்து வருவதால் பாதுக்காப்பு காரணமாக வானில் வெகு நேரமாக வட்டமடித்து வருகிறது என தகவல் தெரியவந்துள்ளது. […]
ரயில் சேவை : தூத்துக்குடியில் இதற்கு முன்னர் இருந்து கோவைக்கும் மற்றும் பகல் நேரத்தில் சென்னைக்கும் இயக்கப்பட்டு வந்த இணைப்பு ரெயில்கள் கொரோனா காலத்தின் போது நிறுத்தப்பட்டது. அதன் பின் அந்த ரயில் சேவையானது தொடங்கவில்லை. இதனால் பல்வேறு நகரங்களுக்கு ரெயில் சேவை வழங்க வேண்டும் என்று ரெயில் பயணிகள், வர்த்தக சங்கத்தினர் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இதனால், தூத்துக்குடியில் இருந்து கோவை வழியாக மேட்டுப்பாளையத்துக்கு வாரத்தில் 2 நாட்கள் செல்லும் புதிய ரெயில் இயக்க […]
மக்களவை தேர்தல் : தூத்துக்குடி தொகுதியில் திமுகவின் நட்சத்திர வேட்பாளரும் தற்போதைய எம்.பி-யுமான கனிமொழி, 4,50,580 வாக்குகளை பெற்று 3,23,355 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தொகுதியில் அவருக்கு எதிராக போட்டியிட்ட, அதிமுக வேட்பாளர் சிவசாமி வேலுமணி 1,27,225 வாக்குகளுடன் 2ஆவது இடத்திலும், பாஜக கூட்டணி வேட்பாளர் விஜயசீலனை பின்னுக்கு தள்ளி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ரோவெனா ரூத் ஜேன் 1,04,542 வாக்குகளுடன் 3ஆவது இடத்தையும் பிடித்துள்ளனர். தூத்துக்குடியில் கடந்த […]
PM Modi : இரண்டு நாட்கள் பயணமாக நேற்று தமிழகம் வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடி, இன்று தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்தில் ரூ.17,300 கோடி மதிப்பிலான உட்கட்டமைப்பு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். இதுபோன்று பல்வேறு முடிவுற்ற திட்டங்களையும் காணொலி மூலம் திறந்து வைத்தார் பிரதமர், தூத்துக்குடியில் உள்ள குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளத்துக்கும் அடிக்கல் நாட்டி வைத்தார். Read More – குலசை ராக்கெட் ஏவுதளத்திற்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் மோடி..! அதேசமயத்தில், தூத்துக்குடியில் நடைபெறும் நிகழ்ச்சியில் […]
Narendra modi : மதுரையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் தூத்துக்குடி வந்தடைந்தார் பிரதமர் நரேந்திர மோடி. பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக 2 நாள் பயணமாக நேற்று பிரதமர் மோடி திருப்பூர் மாவட்டம் பல்லடக்கத்துக்கு வந்தார். அங்கு நடைபெற்ற என் மண் என் மக்கள் யாத்திரையின் நிறைவு விழா பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற பின் மதுரை சென்ற பிரதமர், கருத்தரங்கு ஒன்றில் கலந்துகொண்டு, மீனாட்சி அம்மனை தரிசனம் செய்தார். நேற்று இரவு மதுரை பசுமலையில் உள்ள தாஜ் ஹோட்டலில் தங்கிய […]
நடிகர் விஜய் விரைவில் அரசியலுக்கு என்ட்ரி கொடுப்பார் என நீண்ட காலமாக பேசப்பட்டு வந்த நிலையில், பிப்.2-ம் தேதி ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற புதிய கட்சியை தொடங்கி அரசியல் வட்டாரத்தில் பேசும்பொருளாக மாறியது. நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கம் மூலம் பல்வேறு உதவிகளை செய்து வந்த நிலையில், இதனை அடுத்தகட்டத்துக்கு எடுத்து செல்ல அரசியல் பலம் தேவை என்பதற்க்காக கட்சி தொடங்குவதாக விஜய் தெரிவித்தார். ஆனால், வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியும் இல்லை, யாருக்கும் ஆதரவும் […]
தூத்துக்குடி விமான நிலையத்திற்கு சிவந்தி ஆதித்தனார் பெயரை வைக்க வேண்டும் என திமுக நாடாளுமன்ற தேர்தல் அறிக்கை குழுவிடம் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பரிந்துரை செய்துள்ளார். இதோடு தூத்துக்குடி விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெறவுள்ளது. இதையடுத்து திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு மக்களிடம் கருத்துக்களை கேட்டு வருகிறது. இதில், திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி தலைமையிலான […]
தூத்துக்குடியில் நாட்டுப் படகு மற்றும் விசைப்படகு மீனவர்கள் இன்று கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல மீன்வளத்துறை தடைவிதித்துள்ளது. வானிலை அறிவிக்கையின் படி, கேரள கடலோரப்பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. பூமத்தியரேகையை ஒட்டிய இந்தியப்பெருங்கடலின் கிழக்கு பகுதிகளில், இலங்கைக்கு தெற்கே, ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மாலத்தீவு பகுதிகள், இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள், தெற்கு […]
சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் முதல்வர் ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார். இந்த உலக முதலீட்டாளர் மாநாட்டை தொடர்ந்து பல்வேறு வகையான முதலீடுகள் தமிழகத்திற்கு வந்து கொண்டிருக்கிறது. இந்த மாநாட்டின் மூலம் 5 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்க்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி வியட்நாம் நாட்டின் முன்னணி மின்சார வாகன உற்பத்தியாளரான வின்ஃபாஸ்ட் நிறுவனம் தூத்துக்குடியில் தனது ஒருங்கிணைந்த மின்சார வாகன உற்பத்தி தளத்தை அமைக்க முடிவு செய்துள்ளது. இந்த மின்சார […]
கடந்த 2018ல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக, சிபிசிஐடி விசாரித்து வந்த நிலையில், பின் சிபிஐ விசாரணைக்கு மாற்றி உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. இதையடுத்து, இந்த வழக்கை சிபிஐ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கு தொடர்பாக ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான விசாரணை ஆணையம் விசாரணை மேற்கொண்டது. இதன்பின் இந்த ஆணையம், தனது விசாரணை […]
தூத்துக்குடியில் 135 கிலோ குட்காவை கடத்த முயன்ற 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களின் கண்டெய்னர் லாரி மற்றும் இருசக்கர வாகனங்களும் கைது செய்யப்பட்டுள்ளது. குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் அரசால் தடைசெய்யப்பட்டுள்ளது. இருந்தும் அவை தமிழகத்தில் பல்வேறு கடைகளில் சட்டவிரோதமாக விறக்கப்பட்டு தான் வருகிறது. அதனை தடுக்க அரசு பல அதிரடி நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. அவ்வப்போது காவல்துறையினர் அதிரடி சோதனை செய்து சட்டவிரோதமாக கடத்தப்படும் குட்கா பொருட்களை பறிமுதல் செய்து வருகிறது. அப்படி தான், […]
மாண்டஸ் புயல் எதிரொலியாக ஏற்கனவே 24 மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கரூர் மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி கல்வி மாவட்டத்திற்க்கு உட்பட்ட கிருஷ்ணகிரி, பர்கூர்,காவேரிப்பட்டினம்,மத்தூர்,ஊத்தங்கரை ஆகிய பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மாண்டஸ் புயல் எதிரொலியாக ஏற்கனவே 24 மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, […]
உயிரிழந்த தூத்துக்குடி போராளிகளுக்கு வீரவணக்கம் என கனிமொழி எம்.பி ட்வீட். தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக,கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் 22-ம் தேதி தூத்துக்குடி மக்கள் நடத்திய போராட்டத்தில் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில், 13 பேர் பரிதாமாக கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இந்நிலையில்,தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு இன்று 4-ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதுகுறித்து அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘தூத்துக்குடியில் தங்கள் மண்ணுக்காகவும், […]
தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தின் மூலம் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் இன்று காலை 10.30 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடக்கிறது. முகாமில் 10-ம் வகுப்பு,12-ம் வகுப்பு, பட்டப்படிப்பு,டிப்ளமோ,ஐ.டி.ஐ மற்றும் கம்ப்யூட்டர் பயிற்சி முடித்த பதிவுதாரர்கள் கலந்து கொள்ளலாம். தனியார் துறையில் பணிபுரிய விருப்பம் உள்ளவர்கள் தங்களது பயோடேட்டா,மற்றும் கல்வி சான்றுகளுடன் முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தனியார் துறை நிறுவனங்களில் பணி நியமனம் செய்யப்படும்போது,வேலைவாய்ப்பு அலுவலக பதிவு […]
10 ஆண்டுகளுக்கு பின் கிடைத்த மின் இணைப்பு கிடைத்தால், பட்டாசு வெடித்து கொண்டாடிய கிராம மக்கள். தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் பகுதியில் உள்ள மாமுநயினார் கிராமத்தில், கிழக்கு பகுதியில் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பே, 10 குடும்பங்கள் குடியேறினர். இந்நிலையில், அந்த பகுதிக்கு செல்லும் பாதை, தனிநபரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதால், அங்கு மின் இணைப்பு பெறுவதில் சிக்கல் நீடித்து வந்தது. இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் போராட்டத்தால், ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டதையடுத்து, முதல் கட்டமாக 2 வீடுகளுக்கு மிசாரம் வழங்கப்பட்டது. […]
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகில் உள்ள திட்டங்குளத்தைச் சேர்ந்த கருப்பசாமி என்ற ராணுவ வீரர் கடந்த 19-ம்தேதி காஷ்மீர் லடாக் பகுதியில் வாகனத்தில் வெடிபொருட்களை ஏற்றிச் சென்றபோது ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து, கருப்பசாமி உடல் டெல்லியில் இருந்து இன்று தூத்துக்குடி விமான நிலையத்துக்கு கொண்டு வரப்படுகிறது.விமான நிலையத்தில் மதுரை மாவட்ட ஆட்சியர், எஸ்.பி. மாநகராட்சி ஆணையர், மற்றும் ராணுவத்தினர் மலரஞ்சலி செலுத்தினர். இதனைத் தொடர்ந்து, கருப்பசாமியின் சொந்த ஊருக்கு உடல் கொண்டு செல்லப்பட்டது. அங்கு அமைச்சர் கடம்பூர் […]
முதல்வர் பழனிசாமி இன்று தூத்துக்குடி வருகை. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்து மாவட்டங்கள் தோறும் சென்று ஆய்வு செய்து வருகிறார். மேலும், மாவட்டத்தில் நிறைவேற்றப்பட்ட திட்டப்பணிகளை தொடங்கி வைத்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி வருகிறார். இந்நிலையில், நேற்று கன்னியாகுமரியில், ஆய்வு கூட்டத்தில் கலந்து கொண்ட நிலையில், இன்று தூத்துக்குடியில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள உள்ளார்.
தூத்துக்குடி வருகை தந்த முதல்வருக்கு விமான நிலையத்தில் வரவேற்பு. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்து மாவட்டங்கள் தோறும் சென்று ஆய்வு செய்து வருகிறார். மேலும், மாவட்டத்தில் நிறைவேற்றப்பட்ட திட்டப்பணிகளை தொடங்கி வைத்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். இந்நிலையில், தூத்துக்குடியிலும் கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து, முதல்வர் ஆய்வு கூட்டத்தில் பங்கேற்க உள்ளார். இதனையடுத்து, தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வந்த […]
தூத்துக்குடியில் உள்ள நீர்வரத்து ஓடையில் கிராம மக்களே நிதி திரட்டி தூர்வாரும் பணிகளை தொடங்கியுள்ளனர். தூத்துக்குடியில் கோவில்பட்டிக்கு அருகே உள்ள அய்யனேரி கிராமத்துக்கு உட்பட்ட செவல்குளம் கண்மாயில் சுமார் 30 ஆண்டுகளுக்கு மேலாக தண்ணீர் வராமல் உள்ளது.சுமார் 130 ஏக்கர் பரப்புடைய இந்த கண்மாய் ஓடை தூர் வாராமல் உள்ள காரணத்தால் நீர்வரத்து நின்றதாகவும், எனவே பெரிய ஓடைகளை தூர் வாரி , கரைகளை பலப்படுத்துமாறு மக்கள் கோரிக்கை விடுத்தனர். தற்போது தூத்துக்குடியில் அய்யனேரி, பிள்ளையார்நத்தம், வெங்கடாசலபுரம் […]