மருத்துவமனை ஒன்றில் தீப்பிடித்த காட்சிகள் துருக்கியில் வெளியாகியுள்ளன. இஸ்தான்புலில் உள்ள மருத்துவமனையில் திடீரென புகை வருவதைக் கண்ட ஊழியர்கள் உடனடியாக அங்கிருந்து நோயாளிகளைப் பிரதான வாயில் வழியாக உயிர்காக்கும் உபகரணங்களுடன் வெளியேற்றினர். கரும்புகையைக் கக்கியபடி தீயானது கொழுந்துவிட்டு எரிந்தது. மொட்டை மாடியில் மட்டுமே தீப்பிடித்ததாகவும், கட்டிடத்தின் வெளியில் பற்றிய தீ, உள்ளே பாதிப்பு ஏற்படுத்தவில்லை எனவும் மேயர் ஹாசன் தெரிவித்துள்ளார். கட்டிடத்துக்குள் புகை புகுந்தாலும், யாருக்கு உயிரிழப்பு ஏற்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் […]