இஸ்ரேல் : காசா பகுதிகளில் வான்வழி தாக்குதலை தொடர்ந்து தரை வழி தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ள இஸ்ரேல் ராணுவம், கடந்த சில தினங்களுக்கு முன் வடக்கு காசாவில் இருந்து பாலஸ்தீனர்களை வெளியேறும்படி உத்தரவிட்டிருந்தது. இந்த போரின் தொடர்ச்சியாக ஹமாஸ் படையினரின் முக்கிய தலைவரான யாஹ்யா சின்வார் கடந்த வியாழக்கிழமை (17-ம் தேதி) இஸ்ரேல் ராணுவத்தால் சுட்டு கொல்லப்பட்டார். இதற்கு பழி வாங்கும் வித மாக கடந்த வெள்ளிக்கிழமை (18-ம் தேதி) இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் வீடு மீது, […]
சென்னையில் அரசு பேருந்து சுரங்கப்பாதையில் சிக்கிய நிலையில், பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் தலைநகர் சென்னையில் கனமழை தொடர்ச்சியாக பெய்து வருகிறது. அதிலும் நேற்று சென்னையில் பல்வேறு பகுதிகளிலும் அதிக கனமழை பெய்துள்ளது. இந்நிலையில் சாலைகளில் பல பகுதிகளில் மழைநீர் வெள்ளம் போல தேங்கி உள்ளது. மேலும் தண்ணீர் புகுந்ததால் பெரும்பாலான சுரங்கப் பாதைகளும் மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று பயணிகளுடன் போரூர் மந்தைவெளி மார்க்கமாக சென்ற அரசு மாநகர பேருந்து […]
9 கி.மீ நீளமுள்ள லே நெடுஞ்சாலை குகைவழிப்பாதையை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார். இமாச்சல பிரதேசம் மணாலி மலையில் அமைந்துள்ள நெடுஞ்சாலையில் ரோத்தங் கனவாய் பகுதியில் குகை வழிப்பாதையை குடைந்து தற்போது புதிதாக மலைவழிப்பதை அமைக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட ஒன்பது கிலோமீட்டர் நீளமுள்ள இந்த குகை வழி பாதையை பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இமாச்சல முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் ஆகியோர் நேற்று பார்வையிட்டு இருந்தனர். இந்நிலையில் இதற்கான திறப்பு விழா ஏற்பாடுகள் நேற்று நடைபெற்று […]
மேகாலயாவில், 20 நாட்களாக சுரங்கத்திற்குள் சிக்கித் தவித்து வரும் தொழிலாளர்களை மீட்பதற்காக சுரங்கத்தில் உள்ள நீரின் அளவை குறைக்கும் பணி மீண்டும் தொடங்கியுள்ளது. மேகாலயா மாநிலம் கிழக்கு ஜெயின்டியாவில் சட்டத்துக்கு புறம்பாக செயல்பட்டு வந்த நிலக்கரி சுரங்கத்திற்குள், 15 தொழிலாளர்கள் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்கும் பணியில் மீட்புக் குழுவினர் கடந்த 20 நாட்களாக ஈடுபட்டு வருகின்றனர். வெள்ளம் காரணமாக 370 அடி ஆழமுள்ள சுரங்கத்தில் நீர் புகுந்துள்ளதால் மீட்புப் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. தண்ணீரை வெளியேற்ற பயன்படும் […]