துனிசியாவில் இரண்டு அகதிகள் படகுகள் மூழ்கியதில் சுமார் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அவ்வாறு இறந்தவர்களில் நான்கு பெண்கள் மற்றும் நான்கு குழந்தைகளும் அடங்குவர்.மேலும் 10 பேர் காணாமல் போனதாகவும்,சிலர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்திய மாதங்களில்,வறுமை காரணமாக துனிசியா மற்றும் லிபியாவிலிருந்து இத்தாலியை நோக்கி மக்கள் படையெடுக்கும் நிலையில் துனிசிய கடற்கரையில் நீரில் மூழ்கி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.இந்நிலையில்,படகுகள் மூழ்கியதில் சுமார் 13 பேர் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
துனிசியாவில் அரசை கலைத்து, நிர்வாகத்தை தானே கையில் எடுப்பதாக அந்நாட்டு அதிபர் கைஸ் சையத் அறிவித்துள்ளார். ஆப்ரிக்கா நாடான துனிசியாவில் அரசு கலைக்கப்படுவதாகவும், நாடாளுமன்றமும் கலைக்கப்படுவதாகவும் அந்நாட்டு அதிபர் கைஸ் சையத் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து நாட்டின் நிர்வாகத்தை தானே கையில் எடுத்துக்கொள்வதாகவும், தனக்கு உதவ பிரதமர் ஒருவரை நியமிக்க உள்ளதாகவும் துனிசியா அதிபர் கைஸ் சையத் அதிரடியாக தெரிவித்துள்ளார். ஆட்சிக்கலைப்பு முடிவை ஆதரிக்கும் வகையில் துனிசிய நகரங்களில் பொதுமக்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட நிலையில், இந்த கூட்டத்தை கட்டுப்படுத்த […]
லிபியாவில் கடத்தப்பட்ட 7 இந்தியர்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாக துனிசியா இந்திய தூதர் நேற்று தெரிவித்தார். ஆந்திரா, பீகார், குஜராத் மற்றும் உத்தரப்பிரதேச மாநிலங்களைச் சேர்ந்த ஏழு பேர் கடந்த செப்டம்பர் -14 ஆம் தேதி லிபியாவின் அஸ்வேரிப்பில் இருந்து கடத்தப்பட்டனர். துனிசியாவின் இந்திய தூதர் புனீத் ராய் குண்டால் விடுவிக்கப்பட்ட செய்தியை உறுதிப்படுத்தினர். தற்போது, லிபியாவில் இந்தியாவுக்கு தூதரகம் இல்லை. இதனால்,துனிசியாவில் உள்ள இந்திய பணி லிபியாவில் உள்ள இந்தியர்களின் நலனைக் கவனிக்கிறது. கடந்த மாதம் லிபியாவில் தனது […]
62 வயது பெண் பேஸ்புக்கில் 26 வயது இளைஞனுடன் நண்பரான நிலையில் பின்னர் அது காதலாக மாறி அவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். இங்கிலாந்தை சேர்ந்த Lsabell Dibble 62 வயது பெண் பேஸ்புக்கில் துனிசியா சேர்ந்த Bayram 26 வயது இளைஞனுடன் நண்பரான நிலையில் பின்னர் அது காதலாக மாறி அவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். இதில் Lsabell Dibble 62 வயது பெண் இவருக்கு மூன்று முறை திருமணம் ஆகிய நிலையில் மூவரும் உடல்நலக்குறைவால் […]
துனீசியாவில் IMFக்கு எதிரான மக்கள் எழுச்சி. நாட் கணக்காக தொடரும் ஆர்ப்பாட்டங்கள். பல நகரங்களில் அரச அலுவலகங்கள் தாக்கப் பட்டன. 200 பேர் கைது. ஆர்ப்பாட்டக்காரரை இடதுசாரிக் கட்சிகள் தூண்டி விடுவதாக துனீசிய அரசு குற்றம் சாட்டுகின்றது. துனீசியாவுக்கு கடன் வழங்கும் IMF அறிவுறுத்தல் காரணமாக, அத்தியாவசிய பொருட்களுக்கான அரசு மானியம் குறைக்கப் பட்டது. வரி உயர்த்தப் பட்டது. இதனால், ஜனவரி 1 தொடக்கம் பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளன. 2011 ம் ஆண்டு கிளர்ந்தெழுந்ததை விட, தற்போதைய […]