கலிபோர்னியா : அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து அங்குஅந்நாட்டு வானிலை ஆய்வு மையத்தால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு பின்னர் அது பின்வாங்கப்பட்டது. கலிபோர்னியா மாகாணத்தில் மேற்கு கடற்கரையோர பகுதியில் ரிகான் எல்லைக்கு அருகிலுள்ள ஹம்போல்ட் கவுண்டியின் கடலோர நகரமான ஃபெர்ண்டேலுக்கு மேற்கே வியாழன் அன்று உள்ளூர் நேரடி காலை 10.44 மணிக்கு இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக அந்நாட்டு ஐக்கிய அமெரிக்க நில அளவாய்வுத் துறை (USGS) தெரிவித்துள்ளது. கலிபோர்னியா மகானா […]
சுனாமி எச்சரிக்கை : தென் அமெரிக்க நாடான பெருவில், இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் பீதியில் உள்ளனர். யுனைடெட் ஸ்டேட்ஸ் புவியியல் மையத்தின்படி, ரிக்டர் அளவில் 7.2ஆக பதிவான நிலநடுக்கத்தால் வீடுகள், மிகப்பெரிய கட்டடங்கள் குலுங்கியது. இதனால், அச்சமடைந்த மக்கள், வீடுகளில் இருந்து வெளியேறி சாலையில் தஞ்சமடைந்தனர். இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பெருவியன் தலைநகர் லிமாவிற்கு தெற்கே சுமார் 600 கிமீ தொலைவில் உள்ள அட்டிகிபாவிற்கு […]
Earthquake : ஜப்பானில் போனின் தீவுகளில் 6.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஜப்பான் நாட்டில் போனின் தீவு பகுதியில் இன்று (ஏப்ரல் 27) 6.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கமானது பூமிக்கடியில் 503.2 கிமீ (312 மைல்) தூரம் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது. கடல் தீவு பகுதியில் ஏற்பட்டு இருந்தாலும், தற்போதைக்கு இந்த நிலநடுக்கம் குறித்து சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என கூறப்பட்டுள்ளது. […]
Indonesia: இந்தோனேசியாவில் 3 நாட்களில் 5 முறை எரிமலை வெடித்ததால் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இந்தோனேசியாவின் சுலவெசி தீவில் உள்ள ருவாங் என்ற எரிமலை கடந்த 3 நாட்களில் 5 முறை வெடித்து சிதறியதாக அந்நாட்டின் பேரிடர் கண்காணிப்பு மையம் கூறியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு சுலவெசி தீவில் நிலச்சரிவு ஏற்பட்டதாகவும், அதில் 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும் தகவல் வெளியாகி இருந்தது. இந்த சம்பவத்தை தொடர்ந்து சுலவெசி தீவில் உள்ள மவுண்ட் ருவாங் எரிமலை (Mount […]
சாலமன் தீவுகளின் தென்மேற்கில் உள்ள மலாங்கோவில் 7.0 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் சுனாமி எச்சரிக்கை விடுப்பு. இன்று காலை சாலமன் தீவுகளின் தென்மேற்கில் உள்ள மலாங்கோவில் 7.0 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் சுமார் 20 வினாடிகள் தொடர்ந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலநடுக்கத்தையடுத்து அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் அங்கு வசிக்கும் மக்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பயங்கரமான 7.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் அமெரிக்காவின் அலாஸ்காவைத் தாக்கியது என்பதால் சுனாமி எச்சரிக்கை வெளியிடப்பட்டது. இன்று அலாஸ்காவில் 7.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது என்று தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் உறுதிப்படுத்தியது. யு.எஸ்.ஜி.எஸ் படி, அலாஸ்காவின் பெர்ரிவில்லிலிருந்து 99 கி.மீ எஸ்.எஸ்.இ.யில் நிலநடுக்கம் தாக்கியது. இந்நிலையில் அடுத்த ஒரு மணி நேரத்திற்குள் அலாஸ்கன் கடற்கரையோரங்களில் சுனாமி நடவடிக்கை ஏற்படும் என்று அமெரிக்க சுனாமி எச்சரிக்கை அமைப்பு தெரிவித்துள்ளது இதற்கிடையில் பூகம்ப நடுக்கம் ஏற்பட்டவுடன் […]
ஜப்பானில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. ஜப்பானில் யமகட்டாவின் சுரோகாவில் ரிக்டர் அளவு கோலில் 6.4 -ஆக நிலநடுக்கம் பதிவானது.கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து யமகட்டா,நிகாட்டா, இஷிகாவா ஆகிய பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.இதனால் மக்கள் கடற்கரை பகுதிக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் அந்நாட்டு ஊடகங்கள் கடற்கரை பகுதிகளில், பெரிய அளவில் அலைகள் வரத்துவங்கிவிட்டதாக தெரிவித்துள்ளது. மேலும் பூகம்பத்தினால், ஏற்பட்ட சேதம், பாதிப்பு குறித்து தகவல் ஏதும் தெரிவிக்கப்படவில்லை. […]