அடிஸ் அபாபா : எதியோப்பியா நாட்டின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள தெற்கு சிடமா மாநிலத்தில் உள்ள போனோ பகுதியில் (தலைநகர் அடிஸ் அபாபாவில் இருந்து 300கிமீ தொலைவில்) உள்ள ஆற்று பாலத்தில் நேற்று ஒரு கோர விபத்து ஏற்பட்டு 66 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர் என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. போனோ பகுதியில் நடைபெற இருந்த ஒரு திருமண நிகழ்ச்சிக்காக திருமண வீட்டார், ஒரு டிரக்கில் (லாரி) சென்றுகொண்டிருந்தனர். அப்போது, கெலன் பாலத்தில் டிரக் கட்டுப்பாட்டை […]
ரஷ்யப் படைகளின் கட்டுப்பாட்டில் உள்ள கிழக்கு உக்ரைன் பிராந்தியமான டொனெட்ஸ்கில் நடந்த சாலை விபத்தில் 16 பேர் உயிரிழந்துள்ளனர். உக்ரைனின் கிழக்குப் பகுதியான டொனெட்ஸ்கில் ரஷ்ய வீரர்களை ஏற்றிச் சென்ற டிரக் ஒன்று மினிபஸ் மீது மோதியதில் 16 பேர் உயிரிழந்ததாக ரஷ்யாவால் நியமிக்கப்பட்ட டொனெட்ஸ்க் தலைவர் டெனிஸ் புஷிலின் தெரிவித்தார். ஆக்கிரமிக்கப்பட்ட நகரங்களான ஷக்தார்ஸ்க் மற்றும் டொனெட்ஸ்க் ஒப்லாஸ்டில் உள்ள டோரெஸ் ஆகிய நகரங்களுக்கு இடையே இந்த விபத்து நடந்துள்ளது.