“அதிமுக – பாஜக கூட்டணி பற்றி பேசவேயில்லை!” இபிஎஸ் திட்டவட்டம்!
டெல்லி : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, கே.பி.முனுசாமி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட மூத்த அதிமுக தலைவர்கள் நேற்று டெல்லியில் மத்திய அமைச்சரும் மூத்த பாஜக தலைவருமான அமித்ஷாவை சந்தித்து பேசியுள்ளனர். முதலில் டெல்லியில் கட்டப்பட்ட அதிமுக அலுவலகத்தை பார்வையிட செல்வதாக கூறிவிட்டு சென்ற எடப்பாடி பழனிச்சாமி, அமித்ஷாவை சந்தித்தது தமிழக அரசியலில் பேசுபொருளாக மாறியது. இந்த சந்திப்பை அடுத்து அமித்ஷா தனது சமூக வலைதள பக்கத்தில் , 2026-ல் தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக […]