தொலைபேசியில் மூன்று தலாக் கூறிய கணவரிடம் முறைப்படி விவகாரத்து வாங்கி தருமாறு வெளிவிவகார அமைச்சகத்திற்கு பெண் கடிதம் எழுதியுள்ளார். ஹைதராபாத்தை சேர்ந்த 23 வயது பெண் ஒருவர் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்கருக்கு புதன்கிழமை அன்று கடிதம் ஒன்றை எழுதி இரண்டு மாதங்களுக்கு முன்பு அமெரிக்காவில் இருந்து தனது 40 வயதான கணவர் போன் வழியாக மூன்று தலாக் கூறி விவகாரத்து செய்ததாக அறிவித்திதாகவும் , அவரிடமிருந்து தனக்கு அதிகாரப்பூர்வமான விவாகரத்து வாங்கி தருமாறும் கூறியுள்ளார் . […]
நீண்ட விவாதத்திற்கு பிறகு நேற்று மாநிலங்களவையில் நிறைவேறியது முத்தலாக் தடுப்பு மசோதா. முத்தலாக் மசோதாவிற்கு ஆதரவாக 99 வாக்குகளும், எதிராக 84 வாக்குகளும் பதிவாகியது. இந்த நிலையில் முத்தலாக் மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியது குறித்து பிரதமர் நரேந்திர மோடி கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில், முத்தலாக் மசோதா நிறைவேற்றப்பட்டதன் மூலம் இந்தியா மகிழ்ச்சி அடைகிறது. இஸ்லாமிய பெண்களின் வளர்ச்சிக்கும், கண்ணியத்திற்கும் முத்தலாக் தடை சட்டம் உதவும். முத்தலாக்கினால் பாதிக்கப்பட்ட இஸ்லாமிய பெண்களின் வலிமைக்கு தலை வணங்குகிறேன் .முத்தலாக் தடை […]
முத்தலாக் மசோதா மாநிலங்களவையில் இன்று நிறைவேறும் போது அதிமுக அரசு மசோதாக்கு எதிராக வாக்களிக்காமல் அவையில் இருந்து வெளிநடப்பு செய்ததால் தான் மசோதா நிறைவேறியுள்ளது என்று மக்களவை உறுப்பினர் கனிமொழி குற்றம் சாட்டியுள்ளார். மக்களவையில் கடந்த 25 ம் தேதி முத்தலாக் மசோதா நிறைவேற்றப்பட்ட சூழலில், இன்று மாநிலங்களவையில் அந்த மசோதாவை மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தாக்கல் செய்தார். மக்களவையில் ஆதரவு தெரிவித்த அதிமுக இன்று மாநிலங்களவையில் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வெளியேறியது. இதே போல, […]
நீண்ட நேர இழுப்பறிகளுக்கு பின்னர் மாநிலங்களவையில் முத்தலாக் தடுப்பு மசோதா நிறைவேறியது. வாக்கு சீட்டு அடிப்படையில் நடந்த வாக்கெடுப்பில் பெரும்பான்மையினர் ஆதரவு தெரிவித்தனர். மக்களவையில் கடந்த வாரம் 25ம் தேதி நிறைவேற்றப்பட்ட முத்தலாக் தடுப்பு மசோதா இன்று மாநிலங்களைவையில் நிறைவேறியது. முத்தலாக் மசோதாவை மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் மாநிலங்களவையில் தாக்கல் செய்தார் . பின்னர் நடந்த வாக்கெடுப்பில், முத்தலாக் மசோதாவுக்கு ஆதரவாக 99 வாக்குகளும் , எதிராக 84 வாக்குகளும் கிடைத்தது.இதன் மூலம், பெரும்பான்மை அடிப்படையில் […]
முத்தலாக் விவகாரம் குறித்த அதிமுக எம்.பி ரவீந்திரநாத் குமார் மக்களவையில் “டங் ஸ்லிப்” ஆகி பேசிவிட்டார் என்று அதிமுக முன்னாள் எம்.பி யான அன்வர் ராஜா தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் கடந்த 24ம் தேதி முத்தலாக் தடுப்பு மசோதா மீதான வாக்கெடுப்பு நடைபெற்றது. அதில், அதிமுக எம்.பி யாக இருக்கும் ரவீந்திரநாத் குமார் அதிமுக முத்தலாக் தடுப்பு மசோதாவை முழுதாக வரவேற்பதாக பேசி இருந்தார். அவர்,அதிமுக தலைமையிடம் முத்தலாக் விவகாரம் குறித்து விவாதித்து பேசவில்லை என்று பலரும் கூறி […]
முத்தலாக் தடுப்பு மசோதாவை அதிமுக ஆதரிப்பதாக தேனி நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் ஓ.பி ரவீந்திரநாத் குமார் தெரித்துள்ள கருத்து அதிமுக கட்சியில் புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது. கடந்த 25 ம் தேதி நாடாளுமன்றத்தில் நடந்த முத்தலாக் தடுப்பு மசோதா வாக்கெடுப்பில் அதிமுக இதனை ஆதரிப்பதாக கூறி இருந்தார் ஓ.பி ரவீந்திரநாத். இந்த நிலையில், அதிமுக முத்தலாக் மசோதாவை எதிர்ப்பதாக தமிழகத்தில் அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர். இதனால், அதிமுக தலைமையில் ஆலோசனை நடத்தி பின்னர் முடிவு எடுக்கப்படவில்லை என்பது […]
நாடாளுமன்றம் மக்களவையில் முத்தலாக் தடுப்பு மசோதா சட்டம் நிறைவேறியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அவையில் இருந்து வெளியேறினர். நாடாளுமன்றம் மக்களவையில் இஸ்லாமியர்களின் முத்தலாக் தடுப்பு மசோதா ஆவணத்தை மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தாக்கல் செய்தார். இந்த சட்டத்தின் படி, இஸ்லாமிய ஆண்கள் தங்கள் முறைப்படி பெண்களை மூன்று முறை தலாக் என்று கூறி விவாகரத்து செய்து கொள்ளலாம். முத்தலாக் சட்டம் மீதான விவாதத்தில் மக்களவை எதிர்கட்சிகளான திமுக மற்றும் […]
நாடாளுமன்றத்தின் மக்களவையில் முத்தலாக் முறையை தடை செய்யும் சட்டமசோதாவை தாக்கல் செய்தார் மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் மக்களைவையில் தாக்கல் செய்த மசோதாவில் மூன்று முறை தலாக் எனக் கூறி முஸ்லிம் பெண்களை விவகாரத்து செய்தால் 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்க வகை செய்ய சட்டத்திருத்தம் செய்யப்படவுள்ளது.