குஜராத், பாஜக பிரமுகர் சலீம் நூர் முகமது வோரா, அவர் மனைவிக்கு போனில் முத்தலாக் வழங்கியதாக கூறி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இஸ்லாமிய முறையின் படி தலாக் (விவாகரத்து) என மூன்று முறை கூறினால் கணவன் – மனைவி பிரிந்துவிட்டதாக அர்த்தம் என கூறப்பட்டு வந்தது. இந்த முத்தலாக் இஸ்லாமிய முறைக்கு தடை விதித்து உச்சநீதிமன்றம் 2017ஆம் ஆண்டே தீர்ப்பு வழங்கியுள்ளது. அண்மையில், குஜராத் மாநிலம் மெஹ்சானாவைச் சேர்ந்த பாஜக பிரமுகர் சலீம் நூர் முகமது […]
இன்று மன் கி பாத்தில் பேசிய பிரதமர் மோடி, சட்டம் நிறைவேற்றப்பட்ட பிறகு முத்தலாக் 80% குறைந்துள்ளது என தெரிவித்தார். இன்று அகில இந்திய வானொலியில் தனது மன் கி பாத் நிகழ்ச்சியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய மோடி, பெண்கள் பல்வேறு துறைகளில் புதிய உயரங்களை எட்டுவதாகவும் கூறினார். நாட்டின் அனைத்து துறைகளிலும் முன்னணியில் உள்ள பெண்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி இன்று பாராட்டினார். மார்ச் 8 ஆம் தேதி நாடு முழுவதும் சர்வதேச மகளிர் […]
10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகிய பின்னர் திருமணம் செய்து விட்டு தற்போது 3 முறை தலாக் கொடுத்து விட்டு பெற்றோரிடம் விட்டு சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேசத்தில் புதனா காவல் நிலையத்தின் அருகிலுள்ள கிராமத்தில் குழந்தை பராமரிப்பு ஹெல்ப்லைனை சேர்ந்த குழு ஒன்று 10 வயது சிறுமியை ஆலோசனைக்காக பார்வையிட்ட போது திடுக்கிடும் தகவல்கள் வெளிச்சத்துக்கு வந்தது. 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், அதனையடுத்து அவரது சகோதரியின் மைத்துனரை பிப்ரவரி […]
கேரளாவை சேர்ந்த நூர்பினா ரஷீத் (Noorbina Rasheed) உச்சநீதிமன்றத்தில் முத்தலாக் தடை சட்டத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளார். கடந்த 2017-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பு ஒன்றை அளித்தது.அதாவது முஸ்லீம் பெண்களிடம் அவர்களது கணவர்கள் தலாக் என்று மூன்று முறை தொடர்ந்து கூறி விவாகரத்து செய்யும் நடைமுறை செல்லாது என்று தீர்ப்பில் தெரிவித்தது.ஆனால் இதனை தொடர்ந்தும் நாட்டில் பல இடங்களிலும் முத்தலாக் மூலமாக விவாகரத்து செய்வது இருந்து வந்தது. இதனையடுத்து தான் மத்திய அரசு முதலாக தடை சட்டத்தை […]