திருச்சி மைய பகுதியில் அமைந்துள்ள உச்சிப்பிள்ளையார் கோவில் மிகவும் பிரபலமானது. இந்த உச்சி பிள்ளையார் கோவில் மூன்று பாகங்களாக பிரிக்கப்பட்டு கீழ்பகுதியில் மாணிக்கவிநாயகரும், உச்சியில் உச்சிப்பிள்ளையாரும், நடுப்பகுதியில் சிவன் தாயுமானவராகவும் தரிசனம் தருகின்றனர். இந்த கோவில் பல்லவர் காலத்தில் கட்டப்பட்டது. பல்லவர் காலத்து குடைவரை கோயில்கள் தற்போதும் கம்பீரமாக நிற்கின்றது. இந்த கோவில்தான் தெற்கு கைலாயம் என்று அழைக்கப்படுகிறது. மேலும், விபீஷணர், ராமர் பட்டாபிஷேகத்தில் கலந்துகொண்டு அங்கிருந்து ரங்கநாதர் சிலையை கையில் எடுத்துக்கொண்டு இலங்கை நோக்கி தனது […]