இந்தி மொழிக்கு நாங்கள் எதிரி அல்ல என்றும், அப்படி இந்தி மொழியை நாங்கள் எதிரியாக கருதி இருந்தால் தமிழகத்தில் ஹிந்தி பிரச்சார சபா தமிழகத்தில் இருக்காது என்று திமுக நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா கூறி இருக்கிறார். தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் 4 லட்சம் பேர் ஹிந்தி பிரச்சார சபா வில் படித்து தேர்ச்சி பெறுகிறார்கள் . இந்தி மொழியை அவர் அவர்கள் விரும்பி கற்பதை நாங்கள் எப்பொழுதும் எதிர்த்து இல்லை என்றும் மத்திய அரசு […]
தமிழகத்தில் இருந்து அனுப்பப்பட்ட நீட் தேர்வுக்கு எதிரான இரு மசோதாக்களை மத்திய அரசு நிராகரித்தது ஏன் என்று கேட்டு மக்களவை மற்றும் மாநிலங்களவைகளில் திமுக எம்.பிக்கள் அனைவரும் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் 2017 ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழக சட்டசபையில் இரு மசோதாக்கள் இயற்றி மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தனர். 25 மாதங்களில் ஆகியும் மசோதா மீது எந்த நடவடிக்கையும் இல்லை என்று நீதி […]
மாநிலங்களவையில் எம்.பி திருச்சி சிவா பேசினார்.அப்பொழுது அவர் பேசுகையில், தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான பணிகளை மத்திய அரசு உடனடியாக நிறுத்தவேண்டும் .2 ஆயிரம் அடியில் துளையிட்டு ஹைட்ரோ கார்பன் எடுப்பதால் சுற்றுச்சூழலுக்கும் மட்டுமல்ல, மனித உயிருக்கும் கேடு விளைவிக்கும் . இந்தியா எண்ணெய் உற்பத்தியில் தன்னிறைவு பெற வேண்டியது அவசியம்தான், அதற்காக உயிர்நாடியான விவசாயத்தை அழிக்க வேண்டாம்.ஹைட்ரோ கார்பன் திட்டத்தை பாலைவனம் போன்ற ஓரிடத்தில் செயல்படுத்துங்கள் என்று எம்.பி திருச்சி சிவா பேசினார்.
விவசாய வாகனப் பிரிவில் இருந்து டிராக்டர் நீக்கப்படாது என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். ஸ்டாலின் எழுதிய கடிதத்தை திமுக எம்.பி. திருச்சி சிவா ஒப்படைத்தபோது அமைச்சர் நிதின் கட்கரி உறுதிபட தெரிவித்துள்ளார். முன்னதாக டெல்லியில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரியுடன் திமுக எம்பிக்கள் சந்திப்பு மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது. கடந்த அக்டோபர் மாதம் தான் டிராக்டர் விவசாய பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது .இதனால் கடும் எதிர்ப்பு இருந்த நிலையில் தற்போது அதை சேர்ப்பதாக நிதின் தெரிவித்துள்ளார் […]