முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ்,தனியார் மருத்துவமனைகளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் கட்டணத்தை நிர்ணயித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை தீவிரமடைந்துள்ள நிலையில்,கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் பலரும் அரசு மருத்துவமனைகள் மட்டுமின்றி தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்றுவரும் நிலையில்,பொது மக்களின் நலன் கருதி கொரோனா சிகிச்சைக்கான மருத்துவமனை கட்டணத்தை மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் தமிழக அரசே ஏற்கும் என்று சமீபத்தில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி,கொரோனா தொற்றினால் […]