சென்னை : இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் நெஞ்சுவலி காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவர்கள் அவரை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். அவரது உடல்நிலை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை அப்போலோ மருத்துவமனை சற்று நேரத்தில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, டிசம்பர் 10ஆம் தேதியுடன் அவரது ஆளுநர் பதவிக்காலம் நிறைவுபெறுவது குறிப்பிடத்தக்கது.
Ajith Kumar: மருத்துவ சிகிச்சை முடிந்து நடிகர் அஜித் நலமுடன் வீடு திரும்பியதாக அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா தகவல் தெரிவித்துள்ளார். நடிகர் அஜித் நேற்று காலை சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அஜித்திற்கு காதுக்கு அருகில் இருந்த வீக்கத்தை சரி செய்வதற்காக சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் இன்று அதிகாலை வீடு திரும்பியுள்ளதாக கூறப்படுகிறது. READ MORE – வித்தியாசமான கெட்டப்பில் தனுஷ்! மிரட்டலாக வெளியான ‘குபேரா’ பர்ஸ்ட் லுக்! நேற்றிலிருந்தே நடிகர் அஜித்குமார் விரைவில் குணமடைய […]
அமெரிக்காவில் 4 வயதான ரோனி லின், ஜூலை 6 ஆம் தேதி ரோஸ்ட்ராவர் டவுன்ஷிப்பில் உள்ள காடியோ டிரைவில் உள்ள தனது வீட்டில் தற்செயலாக கைத்துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக் கொண்டார். இதனையடுத்து அவர், மருத்துவமனைக்கு விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டார். இந்த நிலையில், சிறுவன் தொடர்ந்து மருத்துவ சிகிச்சை பெற்று வருவதாக வெஸ்ட்மோர்லேண்ட் கவுண்டி மாவட்ட வழக்கறிஞர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் உதவியுடன் ரோஸ்ட்ராவர் போலீஸார் கடந்த பல மாதங்களாக தீவிர விசாரணை […]
வியட்நாமை சேர்ந்த 35 வயதான நபர் ஒருவர் சுமார் ஐந்து மாதங்களாக கடுமையான தலைவலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனையடுத்து அவர், டோங் ஹோயின் கியூபா மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார். பின் மருத்துவர்கள் அவருக்கு சி.டி ஸ்கேன் செய்ததில், அந்த நபர் டென்ஷன் நியூமோசெபாலஸ் நோயால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. அடுத்தடுத்த பரிசோதனைகள் மனிதனின் அறிகுறிகளின் அசாதாரண நிலையை வெளிப்படுத்தியது. மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் இழுத்தடிப்பதற்காகவே ஆளுநர் முயற்சி.. சட்டத்துறை அமைச்சர் ரகுபதி விமர்சனம்! இதனையடுத்து, மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் ஒரு ஜோடி […]
சமந்தாவுக்கு நோயெதிர்ப்பு மண்டலத்தின் பாதிப்பால் உண்டாகக்கூடிய ‘மயோசிடிஸ்’ எனப்படும் ஆட்டோ இம்யூன் நோய் இருப்பது கண்டறியப்பட்டது. கடந்த ஆண்டு நவம்பரில் அவர் தனது உடல்நிலை குறித்து சமூக வலைத்தளங்களில் தெரிவித்தார். அப்போதிலிருந்து, அது தொடர்பான விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறார். முன்னதாக, மயோசிடிஸ் நோயிக்கு சிகிச்சை பெறுவதற்காக, நடிப்பில் இருந்து சற்று ஓய்வெடுத்த சமந்தா, சிகிச்சையை பொறுப்பெடுத்தாமல், அவர் நடித்திருந்த “யஷோதா” திரைப்படத்தின் ப்ரோமஷன் பணியில் கலந்து கொண்டார். அப்போது, அவருடைய உடல்நிலை குறித்து தகவலை பகிர்ந்து கொண்டார். […]
இரண்டாவது முறையாக முக அறுவை சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் சிறுமி டான்யா. இரண்டாம் கட்ட சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சிறுமி டான்யாவிடம் முதலமைச்சர் முக ஸ்டாலின் நலம் விசாரித்தார். சிறுமி டான்யாவை முதலமைச்சர் ஸ்டாலின் செல்போனில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார். முக சிதைவால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் தண்டலம் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்த நிலையில் 2ம் கட்ட சிகிச்சைக்காக தண்டலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சிறுமி டான்யாவிடம் முதலமைச்சர் ஸ்டாலின் […]
சோனியா காந்திக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் அறிக்கை. கடந்த சில நாட்களுக்கு முன்பு காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்திக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து, அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார் என காங்கிரஸ் தலைவர்கள் உறுதி செய்தனர். இதனைத்தொடர்ந்து கடந்த 12-ஆம் தேதி டெல்லி கங்கா ராம் மருத்துவமனையில் சோனியா காந்தி, கொரோனா பாதிப்பு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னரே சோனியா காந்தியின் […]
நான் இந்த நிலைக்கு நிற்கிறேன் என்றால் அதற்கு காரணம் எல்லாம் வல்ல இறைவன் தான் டி.ராஜேந்தர் பேட்டி. டி.ராஜேந்தர் அவர்கள் உயர் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்வதற்கு முன்னதாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், இந்த இடைப்பட்ட நாட்களில் நான் மருத்துவமனையில் இருந்த சமயத்தில் என்னை பற்றிய என் மகன் சம்பந்தப்பட்ட செய்திகளை வெளியிட்ட ஊடகங்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நான் இந்த நிலைக்கு நிற்கிறேன் என்றால் அதற்கு காரணம் எல்லாம் […]
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 47 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமாக பரவி வந்த நிலையில், இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இன்று 47 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, கொரோனாவால் பாதிக்கப்பட்டு எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை. 478 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னையில் 23 […]
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 480 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, கொரோனாவால் 2 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமாக பரவி வந்த நிலையில், இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 480 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, கொரோனாவால் 2 பேர் உயிரிழந்துள்ளனர். […]
உத்தரப்பிரதேச மாநிலம், ஆக்ராவில் உள்ள அரசு மருத்துவமனையில் கிருஷ்ணர் சிலைக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள். உத்தரப்பிரதேச மாநிலம், ஆக்ராவில் உள்ள அரசு மருத்துவமனைக்கு, கோவில் பூசாரி ஒருவர் கையில் ஒரு பெரிய துணிப்பையில் எதையோ சுருட்டி எடுத்துக் கொண்டு கதறி அழுது கொண்டே மருத்துவமனைக்கு நுழைந்துள்ளார். அதனை பார்த்த மருத்துவமனை ஊழியர்கள் என்ன ஆனது என்று பதறிப்போய் விசாரித்தபோது அவர் சொன்ன காரணம் மருத்துவர்களையே சற்று திகைக்க வைத்தது. அந்தப் பெரியவர் கூறுகையில், தான் தனது வீட்டில் உள்ள […]
தேமுதிக தலைவர் விஜயகாந்த் சிகிச்சை முடிந்து துபாயில் இருந்து இன்று சென்னை திரும்பினார். தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், சமீப காலமாக உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வருகிறார். கட்சி பணிகளை விஜயகாந்த் மனைவி பிரேமலதா அவர்கள் தான் கவனித்து வருகிறார். இந்நிலையில், ஆகஸ்ட் 30-ஆம் தேதி சென்னை விமான நிலையத்தில் இருந்து சிகிச்சைக்காக துபாய் சென்றார். அவருடன் இளைய மகன் சண்முக பாண்டியனும் சென்றிருந்தார். அவர் துபாயில் தங்கி சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவருக்கு மருத்துவர்கள் […]
சென்னையில் மழைநீர் சேகரிப்பு குழியில் விழுந்த 3 பேரில் இருவர் மீட்கப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள ஒருவரை மீட்கும் பணி தீவிரம். சென்னையில், வண்ணாரப்பேட்டையில் தாண்டவராயன் தெருவில் புதிதாக கண் மருத்துவமனை கட்டுவதற்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது .கட்டிடத்தின் பின்புறத்தில் மழைநீர் சேகரிப்புத் தொட்டி அமைக்க குழி தோண்டும் பணியில் 5 பேர் ஈடுபட்டனர். அப்போது திடீரென்று மண் சரிந்ததில் விழுப்புரத்தை சேர்ந்த வீரப்பன், ஆகாஷ் மற்றும் சின்னத்துரை ஆகியோர் மண்ணுக்குள் சிக்கிக் கொண்டனர். இதனையடுத்து தகவலறிந்து […]
‘மக்களை தேடி மருத்துவம்’ திட்டத்தை இன்று தொடங்கி வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். இன்று பலரும் நீரழிவு, ரத்த அழுத்தம் போன்ற நாள்பட்ட நோயால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனைகளில் மாதந்தோறும் சிகிச்சை பெற்று வருவதோடு, மாத்திரைகளும் சாப்பிட்டு வருகின்றனர். மேலும் சிறுநீரக செயலிழப்பால் ஏராளமானோர் வாரத்துக்கு ஒரு முறையாவது டயாலிஸிஸ் செய்து வருகின்றனர். இந்த நோயாளிகளில் பலர் பல காரணங்களால் முறையாக தொடர்ச்சியான சிகிச்சை எடுத்துக் கொள்வதில்லை இதனால் ஆண்டுக்கு சராசரியாக 5 லட்சம் பேர் உயிரிழப்பதாக கூறப்படுகிறது. […]
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வந்த நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த மத்திய-மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், கொரோனாவின் தாக்குதலில் இருந்தே இன்னும் முழுமையாக வெளியே வராத நிலையில், கேரளா மாநிலத்தில் ‘ஜிகா வைரஸ்’ என்ற புதிய வகை வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜிகா வைரஸ் என்றால் என்ன? ஜிகா வைரஸானது பெரும்பாலும், ஏடிஸ் இன கொசுக்களால் தான் பரவுகிறது. இந்த கொசுக்கள், பகல் மற்றும் இரவு […]
மகாராஷ்டிரா மாநிலத்தில் 4,086 பேர் கருப்பு பூஞ்சை தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா இரண்டாம் அலையால் இந்தியாவில் பல பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், நாட்டில் பூஞ்சை தொற்று பாதிப்பும் அதிகரித்து வருகிறது. அதன்படி, மகாராஷ்டிரா மாநிலத்தில் கருப்பு பூஞ்சை பாதிப்பில் 4,086 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், இந்த கருப்பு பூஞ்சை பாதிப்பால் இதுவரை 828 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் கருப்பு பூஞ்சை தொற்றில் அதிகபட்சமாக நாக்பூரில் 1,395 பேருக்கும், புனே […]
தண்ணீரில் கலந்து குடிக்கும் 2DG கொரோனா மருந்தை யாரெல்லாம் பயன்படுத்தக் கூடாது என பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது. இந்தியா முழுவதும் கொரோனா வைரசின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்த வைரசால் பாதிக்கப்படுவோரை மீட்டெடுக்க பல்வேறு தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது. மருந்து பாதுகாப்பு துறையின், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு சார்பில், தண்ணீரில் கலந்து […]
ஒரு கொரோனா நோயாளி எதிர்மறையாக தொற்று பரிசோதிக்கப்பட்ட பின்னும் நோயாளி பொது வார்டில் அனுமதிக்கப்பட்டால் அவர்களுக்கு இலவசமாக சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என உத்திரப்பிரதேச அரசு தெரிவித்துள்ளது. இன்று கொரோனா தொற்றில் இருந்து மீண்ட பின்னும், பலருக்கு உடலசம்பந்தமான பலவிதமான சிக்கல்கள் ஏற்படுகிறது. இந்நிலையில் உத்தரபிரதேசத்தில் கொரோனா தொற்றிற்கு பின் ஏற்படக்கூடிய சிக்கலால் ஒரு நோயாளி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால் அவருக்கு இலவச சிகிச்சை வழங்க வேண்டுமா? வேண்டாமா? என்பது குறித்து பல மருத்துவ நிறுவனங்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். […]
இனிமேல் கொரோனாவிற்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்க தேவையில்லை என மத்திய அரசு அறிவிப்பு. இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், இந்த வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க பல்வேறு முறைகள் கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், கொரோனா சிகிச்சை முறைகளில் ஒன்றாக பிளாஸ்மா சிகிச்சை இருந்து வந்தது. பிளாஸ்மா சிகிச்சை என்பது கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களிடம் இருந்து, பிளாஸ்மாவை தானமாகப் பெற்று கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு செலுத்தப்படுவதாகும். இந்நிலையில் இது தொடர்பாக, இந்த சிகிச்சை […]
ராஜஸ்தானில், பார்மரில் உள்ள மருத்துவமனையில், படுக்கை பற்றாக்குறை காரணமாக, ஒரே படுக்கையில், 2-3 நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கப்படுகிறது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், இந்தியாவில் கொரோனா வைரசின் இரண்டாவது அலை மிக தீவிரமாக கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது. இந்நிலையில் இந்த வைரஸ் பாதிப்பால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில், 3.66 லட்சம் பேர் கொரோனாவா பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 3,754 […]