காங்கிரஸ் எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர் பாலு கண்டனம். மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியதில் இருந்தே நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநிலங்களவை கூட்டத்தில் எதிர்க்கட்சியினர் விலைவாசி உயர்வு உள்ளிட்ட பிரச்சனைகளை முன்னெழுப்பி அமளியில் ஈடுப்பட்டு வந்தனர். இதனால் கடந்த வாரம் முழுவதும் இரு அவைகளும் முடங்கியது. இன்று தொடங்கிய மக்களவையில் அதே சூழல் ஏற்பட்டது. எதிர்க்கட்சியினர் பதாகைகளை ஏந்தி வருவது, அவைத்தலைவர் இருக்கையை முற்றுகையிடுவது என தொடர் அமளியில் ஈடுபட்டனர். இதன் காரணமாக […]
திமுக எம்.பி டி.ஆர் பாலுக்கு கொரோனா தொற்று கொரோனா வைரஸ் காரணமாக அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் என பலர் பாதிக்கப்பட்டு வருகின்றன. இந்தியாவில் கடந்த சில நாட்களாகவே கொரோனா நோயின் பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில், திமுக எம்.பியும், திமுக பொருளாளருமான டி.ஆர் பாலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட டி.ஆர் பாலு சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமணையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
“விவசாயிகள் விரோத அதிமுக அரசு என்பதும், விவசாய விரோத முதல்வராக பழனிசாமி இருப்பதும் – பாஜக அரசின் வேளாண் மசோதாக்களுக்கு அளித்த ஆதரவின் மூலம் நிரூபணம் ஆகிவிட்டது” என்று திமுகவின் பொருளாளரும், எம்.பி.-யுமான டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாளை மறுதினம் – திராவிட முன்னேற்றக் கழகமும் – கூட்டணிக் கட்சிகளும் இணைந்து நடத்தும் விவசாயிகளுக்கு ஆதரவான போராட்ட அறிவிப்பு அதிமுக அரசைக் கதி கலங்க வைத்துள்ளது. ஊழலில் இருந்து தப்பிக்க – […]
இந்தியாவின் வருங்கால மருத்துவர்கள் தற்கொலை செய்வது வருத்தமளிக்கிறது என்று மக்களவையில் டி.ஆர்.பாலு பேசியுள்ளார். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கொரோனா மற்றும் ஊரடங்கு காரணமாக தள்ளிவைக்கப்பட்டது.இதனிடையே மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இந்த கூட்டத்தொடர் அக்டோபர் 1-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இன்று காலை 9 மணிக்கு தொடங்கப்பட்ட மழைக்கால கூட்டத்தொடரில் ஆளும் கட்சி, எதிர் கட்சி தலைவர்கள் மற்றும் எம்.பிக்கள் என அனைவரும் முகக்கவசம் அணிந்துகொண்டு பங்கேற்றனர். இந்நிலையில் தான் நீட் தேர்வுக்கு எதிராக நாடாளுமன்ற வளாகத்தில் […]
தி.மு.க பொதுக்குழு கூட்டத்தில் பொதுச்செயலாளர் துரைமுருகன் எனவும், பொருளாளர் டி.ஆர்.பாலு என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் திமுக பொதுச்செயலாளராக இருந்த க. அன்பழகன் காலமானார். இதனால், பொதுச்செயலாளர் பதவி காலியானது.பொதுச்செயலாளர் பதவிக்கு புதிய நபரை தேர்ந்தெடுக்கப்படும் நேரத்தில் கொரோனா, பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டது.இதனால், பொதுச்செயலாளர் பதவிக்கு புதிய நபரை காலதாமதம் ஆனது. இதையடுத்து, துரைமுருகன் வகித்து வந்த பொருளாளர் பதவியை ராஜினாமா செய்தார். இதன் காரணமாக இரு பதவியும் காலியானது. எனவே சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுகவின் […]
பொதுச்செயலாளர், பொருளாளர் பதவிகளுக்கு துரைமுருகன், டி.ஆர்.பாலு போட்டியின்றி தேர்வு செய்யப்படுகின்றனர். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் இன்னும் வர சில மாதங்களே உள்ள நிலையில், தேர்தலை எதிர்கொள்ள அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றது. சமீபத்தில் திமுக பொதுச்செயலாளராக இருந்த க. அன்பழகன் காலமானார். இதனால், பொதுச்செயலாளர் பதவி காலியானது. இதையடுத்து, துரைமுருகன் வகித்து வந்த பொருளாளர் பதவியை ராஜினாமா செய்தார். இதன்காரணமாக இரு பதவியும் காலியானது. இந்நிலையில், திமுக பொருளாளர், பொதுச்செயலாளர் பதவிக்கு இன்று காலை 10 மணி […]
தமிழகத்தில் அனைத்து நதிகளும் வற்றிவிட்டது என்று திமுக எம்.பி டி.ஆர் பாலு தெரிவித்துள்ளார். மக்களவையில் திமுக எம்.பி டி.ஆர் பாலு பேசினார்.அப்போது அவர் கூறுகையில், சென்னை மாநகரம் மிகக் கடுமையான குடிநீர் பற்றாக்குறையை சந்தித்து வருகிறது .தமிழகத்தில் அனைத்து நதிகளும் வற்றிவிட்டன. ரயில் மூலம் தண்ணீர் கொண்டுவர உடனடியாக மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் . தமிழகத்தில் 20-க்கும் மேற்பட்ட கடல்நீரை குடிநீராக்கும் நிலையங்களை மத்திய அரசு ஏற்படுத்த வேண்டும் என்று திமுக எம்.பி டி.ஆர் பாலு […]