சென்னை : ஸ்ரீபெரும்புதூரில் இயங்கும் சாம்சங் இந்தியா தொழிற்சாலை ஊழியர்கள் இன்றும் தங்கள் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் இயங்கி வரும் சாம்சங் தொழிற்சாலையில் பணிபுரியும் ஊழியர்கள் பலர் ஊதிய உயர்வு, தொழிற்சங்கம் அமைக்க அனுமதி, ஊக்கதொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 30 நாட்களுக்கு மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர். பேச்சுவார்த்தை : ஊழியர்களின் கோரிக்கைகள், போராட்டம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியதன் […]
சென்னை : காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் இயங்கி வரும் சாம்சங் இந்தியா தொழிற்சாலையில் பணிபுரியும் ஊழியர்கள், ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி கடந்த 25 நாட்களுக்கு மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்திற்கு தீர்வு காண்பதற்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த சனிக்கிழமையன்று, அமைச்சர்களுக்கு அறிவுறுத்தினார். இதனை அடுத்து, அமைச்சர்கள் டி.ஆர்.பி.ராஜா, தா.மோ.அன்பரசன், கணேசன் ஆகியோர் முதலில் சாம்சங் நிறுவன உயர் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதன் பிறகு நேற்று […]
சென்னை : காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் சாம்சங் இந்தியா எனும் தனியார் எலக்ட்ரானிக் உற்பத்தி தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் பணிபுரியும் 90 சதவீத ஊழியர்கள் செப்டம்பர் 9ஆம் தேதி முதல் காலவரையற்ற போராட்டத்தை நடத்தி வருகின்றனர். ஊதிய உயர்வு, தொழிலாளர்கள் தொழிற்சங்கத்திற்கு அங்கீகாரம், 9 மணி நேரத்திற்கும் அதிகமாக நீளும் பணிநேரத்தை குறைத்திட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்னிருத்தி கடந்த 25 நாட்களுக்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று குடும்பத்துடன் இந்த […]
கோவை : கடந்த நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் திமுக வாக்குறுதிகளில் கோவையில் முக்கிய வாக்குறுதியாக, அங்கு சர்வதேச தரத்திலான கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படும் என்பதாகும். இதற்கான நடவடிக்கையில் திமுக அரசு உடனடியாக களமிறங்கியது. நாடாளுமன்ற தேர்தல் முடிந்த பிறகு கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைப்பதற்கான இடம் உடனடியாக தேர்வு செய்யப்பட்டது. அதற்காக தேர்வு செய்யப்பட்ட இடங்களை தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் பார்வையிட்டார். கோவை ஒண்டிபுதூர், L&T நெடுஞ்சாலை, பாரதியார் பல்கலைக்கழகம் […]
சென்னை : தமிழ்நாட்டில் முதலீடுகளை ஈர்க்க, புதிய தொழில் தொடங்க, தொழில்களை விரிவுபடுத்த என பல்வேறு வகையில் தொழில்துறையை மேம்படுத்தும் நோக்கில் பன்னாட்டு நிறுவனங்களுக்கு அழைப்பு விடுப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா பயணம் மேற்கொண்டுள்ளார். 17 நாட்கள் பயணத்தில், தற்போது சிகாகோ சென்றுள்ள முதல்வர், அங்குள்ள தொழில் நிறுவன அதிகாரிகளை சந்தித்து வருகிறார். முன்னதாக சான் பிராசிஸ்கோ பயணம் மேற்கொண்டிருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்கு நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்துகொண்டார். அதன் பிறகு, தமிழ்நாட்டில் சுமார் 900 […]
சென்னை : தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்க அமெரிக்கா சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நேற்று முதல் நாளில் சான் பிராசிஸ்கோவில் நடைபெற்ற முதலீட்டளர்கள் மாநாட்டில் கலந்துகொண்டார். அந்த மாநாட்டில், பன்னாட்டு தொழிலதிபர்கள், தொழில் நிறுவன உயர் அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வு முடிந்து நேற்று முதல் நாளில் 6 முக்கிய நிறுவனங்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன. இதன் மூலம் ரூ.900 கோடி அளவில் தமிழகத்துக்கு முதலீடு கிடைத்துள்ளது என்றும், சுமார் 4000க்கும் […]
சென்னை : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சான் பிராசிஸ்கோவில் நடைபெற்ற தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றினார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 17 நாட்கள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். தமிழ்நாட்டிற்கு அதிகளவில் தொழில் முதலீடுகளை ஈர்க்க வழிவகை செய்யும் வகையில் இந்த 17 நாட்கள் பயணம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் முதற்படியாக இன்று நோக்கியா, பேபால் உள்ளிட்ட 6 பன்னாட்டு நிறுவனங்கள் 900 கோடி ரூபாய் அளவுக்கு தமிழ்நாட்டில் முதலீடு செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. சான் பிராசிஸ்கோவில் […]
சென்னை : தமிழ்நாடு முதலீட்டு மாநாடு 2024-ஐ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னையில் தொடங்கி வைக்கிறார். இன்று மொத்தம் 68,773 கோடி ரூபாய்க்கான திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட உள்ளன. தமிழகத்தில் தொழில்துறை வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும் நோக்கில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. முன்னதாக, கடந்த ஜனவரியில் சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தி அதில் பன்னாட்டு நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் தொடங்க புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இந்த மாநாட்டில் மொத்தமாக சுமார் 6 […]
ரூ.706 கோடி., இந்தியாவின் பிரமாண்ட பெண்கள் விடுதி.! அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பெருமிதம்.! காஞ்சிபுரம் : ஃபாக்ஸ்கான் நிறுவனத்தில் பணிபுரியும் பெண்களுக்கென 706 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள தங்கும் விடுதி வளாகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார். காஞ்சிபுரம் மாவட்டம் வல்லம் வடகால் பகுதியில் தமிழக அரசு சார்பில் கட்டப்பட்டுள்ள பிரம்மாண்ட பெண்கள் குடியிருப்பு வளாகத்தை இன்று மாலை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார். பெண் ஊழியர்கள் பயன்பெறும் வகையில் சுமார் 18,720 பெண்கள் தங்கும் வகையில் இந்த […]
சென்னை : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் 15 தொழில்துறை திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இன்று சென்னை, தலைமை செயலகத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, டி.ஆர்.பி.ராஜா, பொன்முடி, கே.என்.நேரு, பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், அன்பில் மகேஷ், சேகர் பாபு, அனிதா ராதாகிருஷ்ணன், துரைமுருகன் உள்ளிட்ட அமைச்சர்கள் கலந்துகொண்டனர். பாரிஸ் பயணம் மேற்கொண்டுள்ளதால் அமைச்சர் உதயநிதி இந்த அமைச்சரவை கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. அமெரிக்க பயணம் […]
சென்னை: போலீஸ் இருப்பாங்க ஹெல்மெட் போடுங்க என கூகுள் மேப்பில் குறிப்பிட்டுள்ளதை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தனது எக்ஸ் பக்கத்தில் நகைச்சுவையாக பதிவிட்டுள்ளார். பிரபல ஆன்லைன் இயங்குதளமான கூகுள் நிறுவனத்தின் முக்கியமான ஒரு பிரிவு கூகுள் மேப். இந்த கூகுள் மேப்பில் அவ்வப்போது புதுபுது அப்டேட்டை அந்நிறுவனம் வெளியிட்டு வருகிறது. முதலில் நாம் எங்கு போக வேண்டுமோ அதற்கான பாதையை மட்டுமே காண்பித்தது. தற்போது எந்த பகுதியில் டிராபிக் அதிகமாக இருக்கும், ஹோட்டல் , பெட்ரோல் பங்க் முதல் […]
சென்னை நந்தம்பாக்கத்தில் கடந்த 2 நாட்களாக உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் உலகளாவில் பல்வேறு நிறுவனங்கள் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தொழில் தொடங்க, தொழிற்சாலை அமைக்க, தொழிற்சாலை விரிவுபடுத்த என பல்வேறு விதமாக முதலீடு செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தங்களை கையெழுத்திட்டது. பல்வேறு புதிய திட்டங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். TNGIM2024 : புதிய நிறுவனங்கள்… புத்தம் புது வேலைவாய்ப்புகள்.. சின்ன லிஸ்ட் இதோ… இந்த இரண்டு நாள் மாநாட்டில் மொத்தமாக 6.64 லட்சம் […]
சென்னை நந்தம்பாக்கத்தில் இன்று (இரண்டாவது நாள்) உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் நிறைவு விழா நடைபெற்றது. கடந்த 2 நாள் மாநாட்டில் உலகளாவில் பல்வேறு நிறுவனங்கள் உடன் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தொழில் தொடங்க, தொழிற்சாலை அமைக்க, தொழிற்சாலை விரிவுபடுத்த என பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. பல்வேறு புதிய திட்டங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். இந்த விழாவில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், இரண்டு நாள் மாநாட்டில் இதுவரை பல்வேறு நிறுவனங்களுடன் 6.64 லட்சம் மதிப்பீட்டில் முதலீடுகள் […]
‘PeriAir’ என்ற பெயரில் தமிழ்நாடு அரசு ஏன் விமான சேவையை தொடங்கக்கூடாது? என டி.ஆர்.பி.ராஜா ட்வீட். ‘PeriAir’ என்ற பெயரில் தமிழக அரசு விமான சேவை ஏன் தொடங்கக்கூடாது என்று திமுக ஐடி- விங்கின் மாநில செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான டி.ஆர்.பி.ராஜா கேள்வி எழுப்பி தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அந்த பதிவில், தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு விமான டிக்கெட் விலை ரூ.17,800 முதல் ரூ.20,000 ஆயிரம் வரை விற்கப்படுகிறது. டிக்கெட் விலை உயர்வால் மாநில […]