வேலை நிறுத்தம் திட்டமிட்டபடி நடைபெறும் என்று போக்குவரத்துக்கு தொழிற்சங்கத்தினர் திட்டவட்டம். நாளை அறிவித்துள்ள வேலை நிறுத்தத்தில் போக்குவரத்துக்கு ஊழியர்கள் பங்கேற்றால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து கழகத்துக்கு தமிழக அரசு எச்சரிக்கை விடுத்திருந்தது. இதையடுத்து சென்னை பல்லவன் இல்லத்தில் அரசு போக்குவரத்து கழக சங்க தொழிற்சங்க கூட்டமைப்பினர் ஆலோசனை மேற்கொண்டனர். நாளை முதல் வேலை நிறுத்த போராட்டம் அறிவித்த நிலையில், தொழிற்சங்கத்தினர் ஆலோசனை நடத்தினர். இதன்பின் பேசிய போக்குவரத்து தொழிலாளர் தொழிலாளர் முன்னேற்ற சங்கத் தலைவர் […]
தீபாவளி போனஸ் 20 சதவீதம் கேட்டு போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பைபாஸ் ரோட்டிலுள்ள மண்டல அலுவலகத்தை 1000 க்கும் மேற்பட்ட டிரைவர் மற்றும் கண்டக்டர்கள் முற்றுகையிட்டனர். அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கு கடந்த 13 ஆண்டுகளாக 20 சதவீதம் போனஸ் வழங்கப்பட்டு வந்த நிலையில், இந்த ஆண்டு கொரோனா காரணமாக 10 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, கோவமடைந்த போக்குவரத்து தொழிலாளர்கள், வழக்கம் போல் 20 சதவீத போனஸ் தொகையை வழங்கக் கோரி, மதுரை போக்குவரத்து தலைமையகம் […]
போக்குவரத்து ஊழியர்களுக்கு 10% மட்டுமே தீபாவளி போனஸ் வழங்க முடியும் என்று அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது குறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், நவம்பர் 11ஆம் தேதி முதல், சென்னையில் உள்ள 5 இடங்களில் இருந்து 14,757 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், “தற்போதைய நிதிநிலையில் போக்குவரத்து ஊழியர்களுக்கு 10% மட்டுமே தீபாவளி போனஸ் வழங்க முடியும் என்று தெரிவித்ததோடு […]