போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு நவம்பர் முதல் உயர்த்தப்பட்ட அகவிலைப்படியை வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு. அரசு போக்குவரத்து கழகத்தில் ஓய்வுபெற்ற பணியாளர்களுக்கு நவம்பர் 1 முதல் உயர்த்தப்பட்ட அகவிலைப்படியை வழங்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அகவிலைப்படி வழங்கியது குறித்து நவம்பர் 25-ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் தமிழக அரசு, போக்குவரத்து கழக ஓய்வூதிய நிதி அறக்கட்டளைக்கு நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. போக்குவரத்து கழகத்தில் பணியாற்றி ஓய்வுபெற்றவர்களுக்கும் அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும் என சென்னை […]
பேருந்து பரிசோதனையில் செல்போன் பயன்படுத்தியது கண்டறியப்பட்டால் ஒழுங்கு நடவடிக்கை என எச்சரிக்கை. பேருந்துகளில் நடத்துனர்கள் செல்போன் பயன்படுத்தவும், முன் இருக்கையில் அமர்ந்து தூங்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நடத்துநர்கள் முன் இருக்கையில் அமர்ந்துகொண்டு செல்போன் பார்ப்பது, உறங்குவதாக பயணிகள் புகாரை தொடர்ந்து போக்குவரத்துக் கழகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. மேலும், பேருந்தின் இரண்டு படிக்கட்டுகளையும் பார்வையில் இருக்கும்படி நடத்துனர்கள் கண்காணிக்க வேண்டும் என்றும் செல்போனியில் நிகழ்வுகளை பார்ப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் எனவும் நடத்துனர்களுக்கு உத்தரவிட்டுள்ளது. பேருந்து பரிசோதனையில் செல்போன் […]
அகில இந்திய வேலை நிறுத்தம் காரணமாக தமிழகத்தில் 67% பேருந்துகள் ஓடவில்லை என்று போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் 2 நாள் பொது வேலை நிறுத்தப் போராட்டம் இன்று காலை முதல் நடைபெற்று வருகின்றது. காரணம்: விலைவாசி உயர்வு கட்டுப்பாடு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துதல்,பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதையும்,பெட்ரோலிய பொருட்கள் மீதான விலை உயர்வுக்கும் எதிர்ப்பு தெரிவித்து சிஐடியூ,ஏஐடியூசி,யூடியூசி உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் போராட்டம் நடத்தி வருகின்றன. மக்கள் அவதி: மேலும்,வங்கி,எல்.ஐ.சி. உள்ளிட்ட […]
வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை எச்சரிக்கை. போக்குவரத்து கழக ஊழியர்கள் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டால் சம்பளம் பிடித்தம் செய்யப்படுவதோடு, ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று போக்குவரத்துத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது பொதுமக்களுக்கு பாதகம் ஏற்படுத்தக் கூடிய செயலாகும். பணிக்கு வருகை தரவில்லை எனில் ‘ஆப்செண்ட்’ மார்க் செய்யப்பட்டு சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என்றும் போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது. மார்ச் 28, 29ல் தொழிற்சங்க ஸ்ட்ரைக்கில் ஈடுபட உள்ள நிலையில், ஊழியர்கள் விடுமுறை எடுக்க […]
ஆயிரம் ரூபாய்க்கான அரசு பஸ் பாஸ் ஜூலை 26ஆம் வரை செல்லும் தேதி வரை செல்லும் என மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநகரப் பேருந்துகளில் பயணம் செய்பவர்களுக்கு தமிழக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் ஆயிரம் ரூபாய் மாதாந்திர சலுகை பஸ் பாஸ் வழங்கப்படுகிறது. இதனை வைத்து மாநகர பேருந்துகள் முழுவதிலும் எங்கு வேண்டுமானாலும் பயணம் செய்து கொள்ளலாம். இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக பொது பேருந்து சேவைகள் நிறுத்தப்பட்டு இருந்த நிலையில் இந்த […]
பேருந்துகளில் பணியாற்றும் டிரைவர், கண்டக்டர்கள் தடுப்பூசி கட்டாயம் போடவேண்டும் என போக்குவரத்துக்கழக மேலாண் இயக்குநர் சுற்றறிக்கை. சென்னை மாநகர பேருந்துகளில் பணியாற்றும் ஓட்டுநர்கள், நடத்துநர்களுக்கு கொரோனா தடுப்பூசி கட்டாயம் என போக்குவரத்துக்கழக மேலாண் இயக்குநர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். 33 போக்குவரத்துக்கழக பணிமனை மேலாளர்களுக்கு மேலாண் இயக்குநர் (பொறுப்பு) இளங்கோவன் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். பொதுமக்களுடன் தொடர்பில் இருப்பதால் 45 வயதிற்கு மேற்பட்ட ஊழியர்கள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். சிறப்பு விடுப்பு அளிக்காத சூழல் […]