மாநகர் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் பயணம் மேற்கொள்ளும் பள்ளி மாணவர்கள் மற்றும் பயணிகளின் பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில், பேருந்துகளை பாதுகாப்பாக இயக்கிட ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, படியில் தொங்கிகொண்டு பயணம் செய்வதை தடுக்கும் வகையில், முதற்கட்டமாக 200 பேருந்துகளுக்கு தானியங்கி கதவுகள் பொருத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாநகர போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் ஆல்பி ஜான் வர்கீஸ் தகவல் தெரிவித்துள்ளார். மேலும், ஜன்னல் கம்பிகளை பிடித்து தொங்குவதை தவிர்க்க படிக்கட்டுகளின் […]
பொங்கல் திருநாளை முன்னிட்டு 1,19,161 போக்குவரத்துக் கழகப் பணியாளர்களுக்கு ரூ.7.1 கோடி “சாதனை ஊக்கத்தொகை” வழங்கப்படும் என தமிழக போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது. பொங்கல் திருநாளை முன்னிட்டு ஒரு இலட்சத்து 19,161 போக்குவரத்துக் கழகப் பணியாளர்களுக்கு மொத்தம் 7 கோடியே 1 இலட்சம் ரூபாய் ‘சாதனை ஊக்கத்தொகை’ வழங்கப்படும் என போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.இது தொடர்பாக,வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: “தமிழ்நாட்டில் சிறப்பான மற்றும் திறமையான போக்குவரத்து சேவையை பொதுமக்களுக்கு அளிப்பதில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் முக்கியப் […]