தமிழகத்தில் 15 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் புதிய முதல்வராக பொறுப்பேற்றுள்ள முக ஸ்டாலின் தலைமையிலான அரசு, தொடர்ந்து பல்வேறு துறையை சேர்ந்த அதிகாரிகளை இடம் மாற்றம் செய்தும், புதிய அதிகாரிகளை நியமித்தும் வருகிறது. அந்த வகையில் தற்போது, தமிழகத்தில் உள்ள 15 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழக காவல் துறையில் காத்திருப்பு பட்டியலில் இருந்த 12 அதிகாரிகளுக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. […]