தெலுங்கானா மற்றும் குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதியை சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மாற்ற கொலிஜியம் குழு பரிந்துரை. சென்னை உயர் நீதிமன்றம் பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜாவை ராஜஸ்தானுக்கு மாற்ற கொலிஜியம் குழு பரிந்துரை செய்துள்ளது. நீதிபதி முரளிதரனை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க மத்திய அரசு இன்னும் ஒப்புதல் தரவில்லை. மத்திய அரசு ஒப்புதல் அளிக்காததால் உயர்நீதிமன்றத்துக்கு மீண்டும் பொறுப்பு தலைமை நீதிபதியே நியமிக்க வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது. இந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றம் […]
பள்ளிக்கல்வித்துறையில் 98 மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு மாறுதல் வழங்கி ஆணையர் உத்தரவு. பள்ளிக்கல்வித்துறையில் 98 மாவட்டக் கல்வி அலுவலர்கள் பணியிட மாற்றம் செய்து ஆணையர் உத்தரவிட்டார். 152 DEO பணியிடங்கள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள நிலையில், 98 DEO-க்கள் புதிய அலுவலகங்களுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தொடக்கக் கல்வி, தனியார் பள்ளிகள் என்று தனித்தனியே DEO-க்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், இணை இயக்குநர்கள் உமா, சசிகலா, அமுதவல்லி ஆகியோர் நிர்வாக காரணங்களுக்காக பணியிட மாற்றம் செய்யப்படுவதாகவும் முதனமை செயலாளர் காகர்லா […]
தமிழ்நாடு முழுவதும் 56 துணை ஆட்சியர்களை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு. தமிழ்நாடு முழுவதும் 56 துணை ஆட்சியர்களை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசின் முதன்மை செயலாளர் குமார் ஜயந்த் உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாடு குடிமைப்பணியின் கீழ் பல்வேறு துறைகளில் துணை ஆணையர் அந்தஸ்தில் பணியாற்றி வரக்கூடிய 56 நபர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ஆதிதிராவிடர், பழங்குடியினர் அலுவலர், தமிழ்நாடு மாநில வாணிப கழகம், முத்திரைத்தாள் தனித்தனி ஆட்சியர், முகர்ப்போர் வாணிப கழகம், வருவாய் கோட்டாட்சியர் போன்ற […]
சரிவர பணி செய்யாத புகாரில் சென்னை அண்ணாநகர் சார் பதிவாளர் அலுவலக அதிகாரிகள் உள்பட 5 பேர் பணியிட மாற்றம். சென்னை நொளம்பூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி திடீர் ஆய்வு மேற்கொண்டார். 50க்கும் மேற்பட்டோர் காத்திருந்த நிலையில், மெத்தனமாக பணி செய்த பணியாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்து, நொளம்பூர் சார் பதிவாளரை பணியிட மாற்றம் செய்ய உத்தரவிட்டார். இதுபோன்று, சரிவர பணி செய்யாத புகாரில் சென்னை அண்ணாநகர் சார் பதிவாளர் அலுவலக அதிகாரிகள் உள்பட 5 […]
ஆவின் நிறுவனத்தில் முறைகேடு காரணமாக அந்நிறுவன 34 தலைமை அதிகாரிகள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஆட்சியில் ஆவின் நிறுவனத்தில் ஏராளமான முறைகேடு நடந்துள்ளதாக ஏற்பட்ட புகார் எழுந்தது.மேலும்,முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு நெருக்கமானவர்கள் உயர்பதவியில் அமர்த்தப்பட்டு முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக தற்போதைய பால்வளத்துறை அமைச்சர் நாசர் அவர்களிடம் பால் முகவர்கள் புகார் அளித்தனர். இதனால்,ராஜேந்திர பாலாஜி மீதான முறைகேடுகள் குறித்து விசாரணை அறிக்கை தயார் ஆகி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில்,ஆவினில் முறைகேடு காரணமாக அந்நிறுவனத்தின் 34 […]
கோவை மாவட்டம் ஆட்சியர், மாநகர காவல் ஆணையர் ஆகியோரை இடமாற்றம் செய்து புதிய அதிகாரிகளை நியமித்த தேர்தல் ஆணையம். கோவை மாவட்டம் ஆட்சியர் ராசாமணி, மாநகர காவல் ஆணையர் சுமித்சரண் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆட்சியர் ராசாமணி, ஆணையர் சுமித்சரணை தேர்தல் அல்லாத பணிக்கு மாற்றி தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆளும்கட்சியினருக்கு ஆதரவாக செயல்பட்டதாக எழுந்த புகாரில் மற்றும் தேர்தல் ஆணையத்திற்கு வந்த பல்வேறு தகவல்களின் அடிப்படையில் இருவரையும் தேர்தல் அல்லாத பணிக்கு இடமாற்றம் செய்ததாக தகவல் […]