மூன்றாம் பாலினத்தவர்களுக்கென்று கேரள அரசு பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை செய்து வருகிறது. அதில் ஒருபகுதியாக படிக்கும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு உணவுடன் கூடிய இலவச தங்கும் விடுதி வசதிகளை அமைத்துக்கொடுக்க இந்தியாவிலேயே முதல் முறையாக கேரள அரசு முடிவு செய்துள்ளது. இது குறித்து தகவல்கள் தெரிவிக்கும் போது, மூன்றாம் பாலினத்தவர்களுக்கென்று ‘சமன்வாயா’ எனும் கல்வி திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது அம்மாநில அரசு. இந்த திட்டத்தில் பயிலும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு உணவுடன் கூடிய தங்கும் விடுதி வசதி அமைக்கப்பட உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் முதற்கட்டமாக திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா மற்றும் […]