டன்சோ டெலிவரி பாய் பார்சலை வழங்குவதற்க்காக நகரும் ரயிலின் பின்னால் ஓடும் வீடியோ வைரலாகிறது. ரயிலின் வாசலில் நிற்கும் பயணிக்கு ஆர்டர் செய்த பார்சலை வழங்குவதற்காக ஓடும் ரயிலின் பின்னால் ஓடும் டன்சோ டெலிவரி பாயின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், பார்சலை வழங்குவதற்காக டெலிவரி பாய் ஓடுவதையும், அதனை வெற்றிகரமாகப் பெற்ற பிறகு வாடிக்கையாளர் கொண்டாடுவதைக் காணலாம். சமூக ஊடக பயனர்கள் இந்த சம்பவத்தை தில்வாலே துல்ஹனியா லே ஜாயங்கேயின்(DDLJ 2) கிளைமாக்ஸ் […]
தெற்கு ரயில்வே மண்டலத்திலிருந்து பீகார், கிழக்கு உத்தரப்பிரதேச பகுதிகளுக்கு செல்லும் அனைத்து ரயில்களும் அக்னிபாத் போராட்டங்களால் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு. இந்திய பாதுகாப்புத் துறையில் அக்னி வீர் என்ற புதிய வேலைவாய்ப்பு துறையை உருவாக்கி உள்ளது மத்திய அரசு. முப்படைகளில் இளைஞா்கள் தற்காலிகமாகப் பணி செய்வதற்கு ‘அக்னிபத்’ என்ற புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் ராணுவத்தின் மூன்று படை பிரிவுகளிலும் 4 வருட ஒப்பந்தத்தில் “அக்னி வீர் ” எனப்படும் […]
மத்திய அரசு கொண்டுவந்துள்ள ஒப்பந்த அடிப்படையில் ஆள் சேர்க்கும் ‘அக்னிபத்’ திட்டத்துக்கு எதிராக வலுக்கும் போராட்டம். இந்திய பாதுகாப்புத் துறையில் அக்னி வீர் என்ற புதிய வேலைவாய்ப்பு துறையை உருவாக்கி உள்ளது மத்திய அரசு. அதன்படி, முப்படைகளில் இளைஞா்கள் தற்காலிகமாகப் பணி செய்வதற்கு ‘அக்னிபத்’ என்ற புதிய திட்டத்தை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் அறிமுகம் செய்திருந்தார். இந்த திட்டத்தின் மூலம் ராணுவத்தின் மூன்று படை பிரிவுகளிலும் 4 வருட ஒப்பந்தத்தில் “அக்னி வீர் […]
இரயில்வே அமைச்சர் சென்னையில் பேசியது அத்தனையும் பொய்யா? என சு.வெங்கடேசன் எம்.பி ட்வீட். தனியார் ரயிலை தமிழகத்தில் இருந்து இயக்குவது வன்மையான கண்டனத்துக்குரியது என சு.வெங்கடேசன் எம்.பி அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், ஜூன் 14 ஆம் தேதி மாலை 6 மணிக்கு வட கோவையில் இருந்து சீரடிக்கு முதல் தனியார் ரயில் இயங்க ரயில்வே அனுமதித்துள்ளது. கோவையைச் சேர்ந்த எம் என் சி பிராப்பர்ட்டி டெவலப்பர்ஸ் என்ற நிறுவனம் இதனை இயக்கவுள்ளது. ரயில் வண்டி ரயில்வேக்கு சொந்தம் […]
ஜெர்மனியில் பவேரியாவில் பிராந்திய பயணிகள் ரயில் தடம் புரண்டதில் 4 பேர் உயிரிழப்பு, 30க்கும் மேற்பட்டோர் காயம். தெற்கு ஜெர்மனியில் ஆல்ப்ஸ் மலையில் நேற்று நடந்த கோர ரயில் விபத்தில் சுமார் 4 பேர் உயிரிழந்ததாகவும், பலர் காயமடைந்துள்ளனர் என்றும் கூறப்படுகிறது. அதாவது, தெற்கு ஜெர்மனியில் ஆல்ப்ஸ் மலையில் அதிகளவிலான மாணவர்களுடன் முனிச் நோக்கிச் சென்ற பிராந்திய ரயில் பர்கிரேனில் சிறிது நேரத்திற்குப் பிறகு தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியது. கார்மிஷ்- பார்டென்கிர்சென் என்ற ரிசார்ட் நகரத்திற்கு வெளியே […]
ரயில்களில் பயணிகள் அதிகமாக எடுத்து செல்லும் உடமைகளுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு. ரயில்களில் பயணிகள் அதிகமாக எடுத்து செல்லும் உடமைகளுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதன்படி, ஏசி முதல் வகுப்பில் 70 கிலோ, ஏசி2-டயர் படுக்கை, முதல் வகுப்பில் 50 கிலோ, ஏசி3-டயர் படுக்கை, ஏசி இருக்கை 40 கிலோ, இரண்டாம் வகுப்பில் 40 கிலோ வரையும் உடைமைகளை எடுத்துச் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பொது […]
மதுரை கோட்டத்திற்கு உட்பட்ட 6 இரயில்களில் ஏசி பெட்டிகளில் படுக்கை விரிப்புகள் வழங்கும் சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதற்கு சு.வெங்கடேசன் எம்.பி வரவேற்பு தெரிவித்து ட்வீட். மதுரை கோட்டத்திற்கு உட்பட்ட 6 இரயில்களில் ஏசி பெட்டிகளில் படுக்கை விரிப்புகள் வழங்கும் சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ள்ளது. இதுகுறித்து. சு.வெங்கடேசன் எம்.பி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘தாமதமெனினும் வரவேற்கிறோம் ! மதுரை கோட்டத்திற்கு உட்பட்ட 6 இரயில்களில் ஏசி பெட்டிகளில் படுக்கை விரிப்புகள் வழங்கும் சேவை மீண்டும் […]
ரயில் ஒன்று மிக வேகமாக தண்டவாளத்தை கடந்து செல்லும் பொழுது பெண் ஒருவர் தொலைபேசியில் பேசியவாறு தண்டவாளத்தில் படுத்து கிடக்கிறார். ரயில் கடந்து சென்றதும் அப்பெண் சாதாரணமாக எதுவும் நடக்காதது போல தொலைபேசியில் பேசியவாறே அந்த இடத்தை கடந்து செல்கிறார். இது தொடர்பான வீடியோ ஒன்றும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை ஐபிஎஸ் அதிகாரி திபென்சு கப்ரா தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளளர். இதோ அந்த வீடியோ, फ़ोन पर gossip, ज़्यादा ज़रूरी […]
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ரஷித்புரா எனும் பகுதியில் உள்ள ரயில் தண்டவாளத்தில் இளம் ஜோடிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இது தொடர்பாக அப்பகுதி வழியே சென்ற மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்நிலையில் உயிரிழந்தவர்களின் மொபைல் போனை கைப்பற்றிய போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாகவும், அவர்கள் யார் என இன்னும் சரியாக அடையாளம் கண்டு பிடிக்கப் படவில்லை எனவும் […]
ரயில்களில் பயணம் செய்யும் போது சத்தமாக பேசினாலோ அல்லது மொபைல் போனில் சத்தமாக பாட்டு கேட்டாலோ அபராதம் வசூலிக்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்தியாவை பொறுத்தவரை பொதுவாக ரயில் பயணம் என்பது அனைவருக்கும் பிடித்தமான ஒன்றாகவே உள்ளது.ஏனெனில்,குடும்பத்துடன் அல்லது நண்பர்களுடன் பயணம் செய்யும்போது பாட்டு பாடுவது,சத்தமாக பேசி மகிழ்வது , அரட்டை அடிப்பது என அனைத்திற்கும் ஏதுவாக இருக்கும்.எனினும்,அதே சமயம் சிலர் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும் நடந்து கொள்வதும் வழக்கமான ஒன்று. இந்நிலையில்,ரயில்களில் பயணம் […]
சென்னை:ஜன.10 ஆம் தேதி முதல் புறநகர் மின் ரயில்களில் பயணிக்க இரண்டு தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தியிருப்பது கட்டாயம் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை புறநகர் மின் ரயில்களில் பயணிப்பதற்கான புதிய கட்டுப்பாடுகளை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.அதன்படி,புறநகர் மின் ரயில்களில் பயணிக்க 2 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தியிருப்பது கட்டாயம் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. மேலும்,ரயில் நிலையத்தில் அல்லது பயணம் செய்யும்போது முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும் எனவும் ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. […]
ரயில் மேம்பாலம் பணிகள் நிறைவடைத்தை அடுத்து இன்று முதல் வழக்கம் போல் ரயில்கள் இயங்கும் என்று தெற்கு ரயில்வே அறிவிப்பு. வேலூர் காட்பாடி அருகே திருவலம் ரயில்வே மேம்பாலம் சீரமைக்கப்பட்டதால் மீண்டும் ரயில் சேவை தொடங்கியது. தூண்களில் ஏற்பட்ட விரிசல் சீரமைக்கப்பட்டதை அடுத்து, 3 நாட்களுக்கு பிறகு மேம்பாலத்தில் ரயில் ஓட தொடங்கியது. இன்ஜின், சரக்கு ரயிலை தொடர்ந்து முதல் பயணிகள் ரயிலாக சென்னை – திருவனந்தபுரம் ரயில் புறப்பட்டு சென்றது. விரிசல் ஏற்பட்டு சீரமைக்கப்பட்ட மேம்பாலம் […]
ரயில்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில், முன்பதிவு கட்டணங்கள் திருப்பி வழங்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவிப்பு. வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே திருவலத்தில் உள்ள ரயில்வே மேம்பாலத்தில் ஏற்பட்ட விரிசல் காரணமாக இன்று 23 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்திருந்தது. ஜோலார்பேட்டை, சென்னை, வேலூர், பெங்களூரு, மைசூரு, மங்களூரு, கோவை, ரேணிகுண்டா, அரக்கோணம் உள்ளிட்ட ரயில்கள் ரத்து செய்யப்பட்டது. ஏற்கனவே, புறப்பட்டு சென்ற ரயில்கள் மற்றொரு வழித்தடத்தில் தாமதமாக இயக்கப்பட்டு வருகின்றன. பொன்னையாற்றில் […]
சென்னை:காட்பாடி அருகே ரயில்வே மேம்பாலத்தில் ஏற்பட்டுள்ள விரிசல் காரணமாக இன்று 23 ரயில்கள் ரத்து செய்யப்பதுவதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே திருவலத்தில் உள்ள ரயில்வே மேம்பாலத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது.இதன் காரணமாக,இன்று 23 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக சென்னை தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி,ஜோலார்பேட்டை,சென்னை,வேலூர்,பெங்களூரு,மைசூரு,மங்களூரு,கோவை,ரேணிகுண்டா,அரக்கோணம் உள்ளிட்ட ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி வெளியூர்களுக்கு செல்ல இருந்த பயணிகள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.எனினும்,ஏற்கனவே புறப்பட்டு சென்ற ரயில்கள் மற்றொரு […]
அரக்கோணம் மற்றும் மோசூர் பகுதி இடையே, சரக்கு ரயில் ஒன்று திடீரென தடம்புரண்டு விபத்துக்குள்ளானதால், சென்னை மற்றும் அரக்கோணம் இடையே ரயில் போக்குவரத்து பாதிப்பு. அரக்கோணம் மற்றும் மோசூர் பகுதி இடையே சென்னையில் இருந்து ரேணிகுண்டா செல்லும் 22 பெட்டிகளை கொண்ட சரக்கு ரயில் ஒன்று திடீரென தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. இதனையடுத்து சென்னை மற்றும் அரக்கோணம் இடையே ரயில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகி உள்ளனர். இன்று சென்னை- அரக்கோணம் இடையே செல்லும் மின்சார […]
ஆங்கிலமே திணற அடிக்கும் போது அறவே புரியாத மொழியை எல்லாம் திணிப்பதை கைவிடுங்கள் என சு.வெங்கடேசன் எம்.பி ட்வீட். ஐ.ஆர்.சி.டி.சி ரயில் பயணச் சீட்டு முன் பதிவில் சம்ஸ்கிருத வார்த்தை இருப்பதாகவும், ரயில் டிக்கெட் எடுக்க சமஸ்கிருதம் தெரிய வேண்டுமா? என்றும் சு.வெங்கடேசன் எம்.பி அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில், ‘ ஐ.ஆர்.சி.டி.சி ரயில் பயணச் சீட்டு முன் பதிவுக்குள் போனால் ஜெனரல், லேடீஸ், லோயர் பெர்த்/ சீனியர் […]
கோவையில் ரயில் மோதி 2 குட்டி யானைகள் உட்பட மூன்று யானைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளன. கோவை மதுக்கரை அருகே உள்ள தண்டவாளத்தை கடக்க யானைகள் முயற்சித்துள்ளன. அப்பொழுது கேரளாவில் இருந்து வந்த ரயில் ஒன்று யானைகள் மீது மோதி உள்ளது. இதில் 2 குட்டி யானைகள் உட்பட 3 யானைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளது.
ரயில் நிலைய நடைமேடை கட்டணம் 10 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு தமிழகத்தில் அதிக அளவில் பரவி நேரம், மக்கள் அதிகளவில் ரயில் நிலையத்தில் கூடுவதை தவிர்க்கும் விதமாக ரயில் நிலைய நடைமேடை கட்டணம் ரூபாய் 50 ஆக உயர்த்தப்பட்டது. இதன்படி சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம் ஆகிய ரயில் நிலையங்களில் நடைமேடை கட்டணம் ஐந்து மடங்காக உயர்த்தப்பட்டது. இதனால் ரயில் நிலைய நடைமேடை கட்டணம் 50 ரூபாய் வசூலிக்கப்பட்டது. தற்பொழுது சென்னை ரயில்வே கோட்டத்திற்குட்பட்ட ரயில் […]
குமரியில் ஏற்பட்ட மண் சரிவு காரணமாக 4 ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. நாகர்கோவில் – திருவனந்தபுரம் இடையே ரயில் பாதையில் மண் சரிவு ஏற்பட்டுள்ளதால் பாதை சீரமைக்கும் பணி நடந்து வருவதால் 4 ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி கொல்லம்-திருவனந்தபுரம் தினசரி விரைவுரயில் (06425) சேவை இன்று முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. நாகர்கோவில் -திருவனந்தபுரம் விரைவுரயில்(06426) சேவை இன்று முழுமையாக ரத்து செய்கிறது. அதே போல திருவனந்தபுரம் – […]
கொரோனா பாதிப்பு குறைந்து ரயில் சேவை இயல்புக்கு வந்ததையடுத்து,கூடுதல் கட்டணத்தை திருப்பித் தர வேண்டும் என்று மத்திய ரயில்வே துறைக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை. நாட்டில் தற்போது நடைமுறைக்கு வந்துள்ள புதிய ரயில் கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் செலுத்தி பயணச் சீட்டு முன்பதிவு செய்த அனைவருக்கும் கூடுதல் கட்டணத்தை திருப்பித் தருவதற்கு மத்திய ரயில்வே துறை முன்வர வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.மேலும்,இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: […]