புதுடெல்லி : பொதுவாக ரயிலில் பயணம் செய்யவேண்டும் என்றால், ஒரு மாதங்களுக்கு முன்பாகவோ அல்லது அதற்கு கூடுதல் நாட்களுக்கு முன்னதாகவே டிக்கெட் முன்பதிவு செய்தால் மட்டுமே டிக்கெட் கிடைக்கும். தற்போது ரயில்களில் நான்கு மாதங்களுக்கு முன்பே டிக்கெட் முன்பதிவு செய்யும் விதி மாறியுள்ளது. ஆம், ரயில்களில் டிக்கெட் முன்பதிவு தொடர்பான புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. இதற்கான அறிவிப்பை ரயில்வே அமைச்சகம் வியாழக்கிழமை வெளியிட்டது. அதன்படி,விரைவு, அதிவிரைவு ரயில் உள்பட பல்வேறு ரயில்களில் பயணிக்க டிக்கெட்டை முன்கூட்டியே […]
நீங்கள் சமீபத்தில் ஏதேனும் ஹோட்டல் அறை, ரயில் டிக்கெட் அல்லது பொழுதுபோக்கு நிகழ்ச்சியை முன்பதிவு செய்து, இப்போது அதை ரத்து செய்து பணத்தைத் திரும்பப் பெற திட்டமிட்டுள்ளீர்களா? இதோ உங்களுக்காக ஒரு செய்தி. ரத்து செய்வது சேவைகளுடன் தொடர்புடையது என்பதால், ரத்து கட்டணம் இனி ஜிஎஸ்டியை ஈர்க்கும் என்று நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. நிதி அமைச்சகத்தின் வரி ஆராய்ச்சி பிரிவு பல விதிகளை விளக்கும் 3 சுற்றறிக்கைகளை வெளியிட்டுள்ளது. அவற்றில் ஒன்று ரத்து கட்டணம் மற்றும் ஜிஎஸ்டி […]
கடந்தாண்டு கொரோனவால் மார்ச் முதல் ஜூலை வரை முன்பதிவு செய்த ரயில் டிக்கெட்டுகளை ரத்து செய்யப்பட்டது. அதற்கான கட்டணத்தை திரும்ப பெறுவதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது. கொரோனாவும், ஊரடங்கும்: உலகளவில் கொரோனா பரவத்தொடங்கிய நிலையில், பல நாடுகளில் யாரும் எதிர்பார்த்திடாத ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் போக்குவரத்துக்கு முற்றிலுமாக முடங்கியது. இந்தியாவிலும் கொரோனாவின் பரவல் விட்டுவைக்கவில்லை, இதனால் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனைதொடர்ந்து, பேருந்து, ரயில் சேவைகள் […]
இன்று முதல் சென்னை கோட்டத்திற்குட்பட்ட 19 முன்பதிவு மையங்கள் திறக்கப்படவுள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. ஊரடங்கு காரணமாக ஜூன் 30 ஆம் தேதி வரை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆனால் தற்போது இந்த 4 மற்றும் 5 ஆம் கட்ட ஊரடங்கில் குறிப்பிட்ட இடங்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் நேரடியாக சென்று டிக்கெட் முன்பதிவு செய்தவர்கள் ரத்து கட்டணத்தை முன்பதிவு மையங்களில் மூலம் திருப்பி அளிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், […]
ரயில்களில் முன்பதிவு டிக்கெட் ரத்து செய்யப்பட்டதற்கு பயணிகளுக்காக ரூ.1,885 கோடி திருப்பி தரப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பாதிப்பால் மார்ச் 25 ஆம் தேதி முதல் 5 கட்டங்களாக பொதுமுடக்கம் அமலில் உள்ளது. இதனால் பஸ், ரயில், விமானம் போன்ற பொதுப்போக்குவரத்து சேவை நிறுத்தப்பட்டது. இதையடுத்து இந்த 4 மற்றும் 5 ஆம் கட்ட ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளதால், சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. அதுவும் குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது அதற்கு மத்திய […]
நாகர்கோவிலில் போலி ஐ.டிக்கள் மூலம் ரயில் டிக்கெட் விற்பனை செய்தவரை ரயல்வே பாதுகாப்பு படையினர் கைது செய்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில், போலி ஐ.டிக்கள் மூலமாக, அதிகளவில் ஆன் லைன் டிக்கெட் விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்தது. அதனடிப்படையில், ரயில்வே போலீசார் ரகசியமாக கண்காணித்து வந்தனர். இந்நிலையில், நாகர்கோவிலை சேர்ந்த பிரகாஷ் என்பவர், 15 க்கும் மேற்பட்ட போலி ஐ.டிக்கள் உருவாக்கி, ரயில் டிக்கட் விற்பனை செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைதொடர்ந்து, அவரை கைது செய்த ரயில்வே […]