சென்னை : ரயில் கட்டண உயர்வு நாளை அமலுக்கு வருவதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. புறநகர் ரயில்கள், 500 கி.மீக்கும் குறைவான 2ம் வகுப்பு பயணத்திற்கு கட்டண உயர்வு இல்லை. 500 கிலோமீட்டருக்கு மேல் பயணிக்கும் பயணிகளுக்கு ஒரு கிலோமீட்டருக்கு 0.5 பைசா உயர்த்தட்பட்டுள்ளது. இது பல ஆண்டுகளுக்குப் பிறகு பயணிகள் ரயில் கட்டணத்தில் உயர்த்தப்படும் முதல் முறை உயர்வாகும். ரயில்வேயின் இயக்க செலவுகள், எரிபொருள் செலவுகள், மற்றும் பராமரிப்பு செலவுகள் உயர்ந்து வருவதால், இந்த கட்டண […]
கொரோனா பாதிப்பு குறைந்து ரயில் சேவை இயல்புக்கு வந்ததையடுத்து,கூடுதல் கட்டணத்தை திருப்பித் தர வேண்டும் என்று மத்திய ரயில்வே துறைக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை. நாட்டில் தற்போது நடைமுறைக்கு வந்துள்ள புதிய ரயில் கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் செலுத்தி பயணச் சீட்டு முன்பதிவு செய்த அனைவருக்கும் கூடுதல் கட்டணத்தை திருப்பித் தருவதற்கு மத்திய ரயில்வே துறை முன்வர வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.மேலும்,இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: […]
புலம்பெயர் தொழிலாளர்களுக்கான ரயில் பயண கட்டணத்தை வசூலிக்கக்கூடாது. அவர்களுக்கான உணவுகளை சம்மந்தப்பட்ட மாநில அரசுகள் கொடுக்க வேண்டும். கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக கடந்த மார்ச் மாதம் 25 ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், வெளிமாநில தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இதனால், பலர் தங்கள் சொந்த மாநிலத்துக்கு திரும்ப முடியாமல் தவித்தனர். புலம் பெயர்ந்த தொழிலாளர்களை அவர்களுடைய சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைப்பதற்காக கடந்த 1 ஆம் தேதி முதல் ரெயில்வே அமைச்சகம் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சிறப்பு […]