தமிழகத்தின் பல பகுதிகளிலும் யானைகள் ரயிலில் மோதி உயிரிழக்கும் சம்பவமும் தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக கோவையில் உள்ள உயர் நீதிமன்ற நீதிபதிகள் தாமாகவே வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அது மட்டுமில்லாமல், கோவை பாலக்காடு ரயில்வே சாலையில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சுப்ரமணியன், இளந்திரையன் மற்றும் சதீஷ்குமார் ஆகிய மூன்று நீதிபதிகள் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளனர்.
மொபைலில் பப்ஜி விளையாடிக்கொண்டிருந்த 2 சிறுவர்கள் சரக்கு ரயில் மோதி உயிரிழந்துள்ளனர். உத்திரபிரதேசத்தில் உள்ள ஆக்ரா எனும் பகுதியில் வசித்து வரும் கவுரவ் குமார் மற்றும் கபில் குமார் எனும் 14 வயதுடைய இரு சிறுவர்கள் பத்தாம் வகுப்பு படித்து வருகின்றனர். இந்த சிறுவர்கள் இருவரும் ஆன்லைன் விளையாட்டாகிய பப்ஜி விளையாடிக் கொண்டே வெளியில் சென்றிருந்த பொழுது சரக்கு ரயில் மீது மோதி பரிதாபமாக இருவரும் உடல் நசுங்கி உயிரிழந்துள்ளனர். மதுராவிலிருந்து லட்சுமி நகர் செல்லும் தண்டவாள […]