சென்னை,பிராட்வே பகுதியில் உள்ள சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிடவேண்டும் என கோரி மறைந்த டிராபிக் ராமசாமி முன்னதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார் இதனைத் தொடர்ந்து,இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவு பிறப்பித்தது.ஆனால்,ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை என கடந்த 2016 ஆம் ஆண்டு நீதிமன்ற அவமதிப்பு வழக்கை டிராபிக் ராமசாமி தொடர்ந்திருந்தார்.இதனை விசாரித்த உயர்நீதிமன்றம் ஆக்கிரமிப்பாளர்களுக்கு மாற்று இடம் வழங்க உத்தரவிட்டது. இந்நிலையில்,இது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில்,மாற்று இடம் […]
சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி, வயது மூப்பு காரணமாக உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி (83), வயது மூப்பு காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு, கடந்த சில வாரங்களுக்கு முன் சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமத்திக்கப்பட்டார். இந்நிலையில், ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் டிராபிக் ராமசாமி உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. தமிழக அரசியல் கட்சி […]
ஜெயலலிதா இல்லத்தை நினைவில்லமாக மாற்ற தடைக்கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டது. சமீபத்தில் ஜெயலலிதாவின் வேதா நிலையம் இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற தடை கோரி சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவில், ஜெயலலிதா சட்டவிரோதமாக சொத்து சேர்த்ததாக கூறப்பட்ட காலகட்டத்தில் தான் போயஸ் இல்லத்தின் ஒரு பகுதி வாங்கப்பட்டதாக உச்ச நீதிமன்றம் ஏற்கனவே தெரிவித்துள்ள நிலையில், தற்போது வீட்டை நினைவு இல்லமாக மாற்றுவது என்பது நீதிமன்ற அவமதிப்பு செயல் […]
தமிழகத்தில் கடந்த சில நாள்களுக்கு முன் சுபஸ்ரீ என்ற இளம்பெண் பள்ளிக்கரணை அருகே சென்று கொண்டு இருந்த போது அதிமுக பிரமுகர் இல்ல திருமண விழாவிற்காக வைக்கப்பட்ட பேனர் சுபஸ்ரீ மேலே விழுந்ததில் நிலைதடுமாறி ரோட்டில் விழுந்தார்.அப்போது பின்னே வந்த லாரி சுபஸ்ரீ மீது ஏறியது.இதனால் சம்பவ இடத்திலே அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் தமிழகத்தில் அரசியல் கட்சியினர் விழாக்கள் , பொதுக்கூட்டங்கள் போன்ற நிகழ்ச்சிகளில் பேனர் வைக்க […]