புனிதத் தலங்களான குருதுவாராவில் ஹோலிப் பண்டிகையை முன்னிட்டு சீக்கியர்களின் ஹோலா மொஹலா பண்டிகை கொண்டாடப்பட்டது. சீக்கியர்களின் பத்தாவது மதகுருவான குரு கோபிந்த் சிங், 18ம் நூற்றாண்டில் வண்ணங்கள் வீசும் ஹோலி நாளில்தான் , அவுரங்கசீப் உள்ளிட்டோரின் இஸ்லாமியர் படைகளை முறியடிக்க தனக்கான சீக்கியர்களின் ராணுவப் படையை அமைத்தார் என்று கூறப்படுகிறது. சீக்கியர்களின் புத்தாண்டும் இந்த நாளிலிருந்துதான் தொடங்குகிறது. இந்தப் புனித நாளை முன்னிட்டு வண்ண மயமான ஆடைகளுடன் ஏராளமான சீக்கியர்கள் அமிர்தசரஸ் நகரில் உள்ள பொற்கோவிலுக்குத் திரண்டனர். […]
ஆயிரக்கணக்கான விதவைப் பெண்கள் உத்தரப்பிரதேச மாநிலம் பிருந்தாவனம் பகுதியில் தங்கள் வெள்ளையாடையின் மீது வண்ணங்களைப் பூசிக் கொள்ளத் துணிந்தனர். வண்ணங்களின் விழாவான ஹோலிப் பண்டிகையை உற்சாகமாகக் கொண்டாடிய அவர்கள் சுற்றுலாப் பயணிகளுடன் சேர்ந்து தங்கள் வெள்ளைப் புடைவைகளை வண்ணமயமாக்கினர். ஆடல் பாடல் கொண்டாட்டம் என்று வடமாநிலங்களில் ஹோலிப் பண்டிகை களைகட்டத் தொடங்கி விட்டது. நாடு முழுவதும் நாளைய தினம் ஹோலி கொண்டாடப்படுகிறது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.