நாளை மறுநாள் நடத்துவதாக அறிவிக்கப்பட்டிருந்த டிராக்டர் பேரணியை ஒத்திவைக்க முடிவு செய்யப்பட்டது. மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களுக்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஓராண்டாக டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விவசாயிகளின் போராட்டத்தைத்தொடர்ந்து, வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவதாக பிரதமர் மோடி கார்த்திகை தீப திருநாள் அன்று அறிவித்தார். வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறப்படும் என்ற அறிவிப்பை பல அரசியல் தலைவர்களும், விவசாயிகள் வரவேற்றனர். மேலும், சில கோரிக்கைகளை முன் விவசாயிகள் அதில், விவசாய […]
டிராக்டர் பேரணியில் நடந்த வன்முறை குறித்து தவறான கருத்து விட்டதாக குற்றம் சாட்டப்பட்டவர்களை கைது செய்ய தடை. கடந்த மாதம் 26 ஆம் தேதி டெல்லியில் நடந்த டிராக்டர் பேரணியின் போது நடந்த வன்முறையில் ஒரு விவசாயி உயிரிழந்தார். விவசாயி போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் தான் உயிரிழந்ததாக சசிதரூர், ராஜ்தீப் சர்தேசாய் ஆகியோர் தெரிவித்தனர். இதனால் சசிதரூர், ராஜ்தீப் சர்தேசாய் ஆகியோர் மீது டெல்லி, நொய்டா போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இவர்கள் குடியரசு தினத்தன்று நடந்த […]
டெல்லி போலீசார் , தீப் சித்து பற்றிய தகவல் அளித்தால் ரூ.1 லட்சம் பரிசும், மற்ற நான்கு பேர் குறித்து தகவல் அளித்தால் ரூ 50,000 பரிசும் வழங்கப்படும் என அறிவித்துள்ளனர். தலைநகர் டெல்லியில் வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் கடந்த இரண்டு மாதங்களாக போராட்டம் நடத்தி வருகிற நிலையில், இதற்கு எந்த முடிவும் எட்டப்படவில்லை. இந்நிலையில் குடியரசு தினத்தன்று விவசாயிகள் டிராக்டர் பேரணியை நடத்தினர். இந்த பேரணியில் வன்முறை வெடித்தது. இதில் தீப் சித்து என்பவரும் […]
டெல்லியில் நேற்று முன்தினம் விவசாயிகள் டிராக்டர் பேரணி நடைபெற்றது. அனுமதித்த நேரத்திற்கு முன்பே பேரணியை தொடங்கியதால் விவசாயிகளை கலைக்க காவல்துறை கண்ணீர் புகைக்குண்டு வீசினர். இதனால் விவசாயிகளுக்கு, போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதை தொடர்ந்து வன்முறையாக மாறியது. பின்னர், விவசாயிகள் செங்கோட்டையை முற்றிகையிட்டனர். இந்த வன்முறையில் ஒரு விவசாயி உயிரிழந்தார். மேலும், டெல்லியில் ஏற்பட்ட வன்முறையால் 394 போலீஸ் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர் என போலீஸ் கமிஷனர் எஸ்.என்.ஸ்ரீவாஸ்தவா தெரிவித்தார். இந்நிலையில், டெல்லியில் விவசாயிகளின் டிராக்டர் […]
டெல்லி விவசாயிகள் டிராக்டர் பேரணியில் நடைபெற்ற வன்முறை தொடர்பாக FIRல் இடம் பெற்றவர்களுக்கு டெல்லி காவல்துறை லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது. எஃப் ஐ ஆர்-இல் பெயர் உள்ளவர்கள் வெளிநாட்டிற்கு தப்பிச் செல்வதை தடுக்க டெல்லி காவல்துறை இந்த நடவடிக்கை எடுத்துள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் பாஸ்போர்ட்டுகளை பறிமுதல் செய்யவும் டெல்லி காவல்துறை திட்டம். டெல்லியில் நேற்று முன்தினம் விவசாயிகள் டிராக்டர் பேரணி நடைபெற்றது. அனுமதித்த நேரத்திற்கு முன்பே தொடங்கியதால் விவசாயிகளை கலைக்க காவல்துறை கண்ணீர் புகைக்குண்டு வீசினர். […]
வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி டெல்லியில் 2 மாதத்திற்கு மேலாக விவசாயிகள போராட்டத்தை நடத்தி வருகின்றனர். அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து தோல்வியை சந்தித்த நிலையில், குடியரசு தினத்தன்று டெல்லிக்குள் டிராக்டர் பேரணியை நடத்துவதாக விவசாயிகள் அறிவித்தனர். அதன்படி குடியரசு தினத்தன்று விவசாயிகள் டிராக்டர் பேரணியை நடத்தினர். ஆனால், ஒருதரப்பு விவசாயிகள் அனுமதி கொடுத்த நேரத்திற்கு முன்னதாகவே டிராக்டர் பேரணியை தொடங்கியதால், போலீசார் விவசாயிகளை தடுத்து நிறுத்தனர். அப்போது, போலீசாருக்கும், விவசாயிகளுக்கும் இடையே தள்ளு முள்ளு […]
வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி டெல்லியில் 2 மாதத்திற்கு மேலாக போராட்டத்தை நடத்தி வருகின்றனர். அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து தோல்வியை சந்தித்த நிலையில், நேற்று குடியரசு தினத்தன்று டெல்லிக்குள் டிராக்டர் பேரணியை நடத்துவதாக விவசாயிகள் அறிவித்தனர். இதற்கு போலீசார் முதலில் அனுமதி மறுக்க, பின்னர் 12 மணிக்கு பிறகு பேரணியை நடத்த அனுமதி வழங்கினார். இந்நிலையில், போலீசாரின் அனுமதியை விவசாயிகளில் ஒரு தரப்பினர் ஏற்று கொள்ள, மற்றொரு தரப்பினர் காலை 9 மணிஅளவில் தடுப்புகளை […]
டெல்லி:விவசாயிகளின் டிராக்டர் பேரணி வன்முறையாக மாறியதை அடுத்து டெல்லியில் கூடுதலாக துணை ராணுவ வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். ராணுவ வீரர்கள் நிறுத்திவைப்பு: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் நடைபெற்ற உயர்மட்டக் கூட்டத்தில் மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா, டெல்லி காவல் ஆணையர் எஸ்.என்.ஸ்ரீவாஸ்தவா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஏறக்குறைய 90 நிமிடங்கள் நீடித்த இந்த கூட்டத்தில், விவசாயிகளின் டிராக்டர் பேரணி வன்முறையாக மாறியதை அடுத்து,அமைதியை மீட்டெடுப்பதற்கும் சட்டம் ஒழுங்கை நிலைநிறுத்துவதற்கும் டெல்லியில் கூடுதலாக துணை […]
மத்திய அரசு புதிதாக கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் 62-வது நாளான இன்று டிராக்டர் பேரணியை முன்னெடுத்து வருகின்றனர். சிங்கு, டிக்ரி எல்லை வழியாக போலீசாரின் தடுப்புகளை உடைத்துக் கொண்டு டெல்லிக்கு நுழைய முயன்றனர். அப்போது அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு முன் டெல்லிக்குள் நுழைந்ததாகக் கூறி விவசாயிகளை கலைக்க காவல்துறை கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். இதனால் அப்பகுதிகளில் பரபரப்பு நிலவியது. டிராக்டர் பேரணியில் ஈடுபட்ட விவசாயிகள் தற்போது தலைநகர் டெல்லிக்குள் நுழைந்து செங்கோட்டையை முற்றுகையிட்டுள்ளனர். […]
மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக்கோரி டெல்லியை நோக்கி டிராக்டர் பேரணியை விவசாயிகள் தொடங்கினார். டெல்லி- ஹரியானா எல்லையான சிங்குவில் சாலையில் அமைக்கப்பட்ட தடுப்புகளை அப்புறப்படுத்திவிட்டு டெல்லியை நோக்கி ஏராளமான விவசாயிகள் டிராக்டர் பேரணியை தொடங்கினர். சமீபத்தில் மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி டெல்லியில் விவசாயிகள் 60 நாட்களுக்கு மேலாக போராடி வருகின்றனர். இதுவரை 11 கட்டமாக நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. இதனால், குடியரசு தினமான […]
வேளாண் சட்டங்களை ரத்து செய்வது தொடர்பாக மத்திய அரசுடன் 7 ஆம் கட்ட பேச்சுவார்த்தையில் தீர்வு எட்டப்படாவிட்டால், குடியரசு தினத்தன்று டெல்லியில் டிராக்டர் பேரணி நடத்த விவசாய அமைப்புகள் திட்டமிட்டுள்ளனர். அண்மையில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி ஹரியானா, குஜராத், பஞ்சாப், உத்தரப்பிரதேம் உள்ளிட்ட பல மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் ஆயிரக்கணக்கானோர், இன்று 39 ஆம் நாளாக டெல்லி எல்லையில் போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும், வேளாண் சட்டங்களை திரும்பபெறக்கோரி எதிர்க்கட்சிகள் உட்பட […]