சென்னை : திராவிட முன்னேற்றக் கழகம் தோற்றுவிக்கப்பட்ட நாள், தந்தை பெரியார் பிறந்த தினம் , அறிஞர் அண்ணா பிறந்தநாள் என இன்று திமுக முப்பெரும் விழாவானது சென்னை ஒய்.எம்.சி.ஆர் மைதானத்தில் மிக பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. திமுக பொதுச்செயலாளர் அமைச்சர் துரைமுருகன் தலைமையில் இந்த முப்பெரும் விழா நடைபெற்று வருகிறது. இதில், மேடையில் இரண்டு பெரும் இருக்கைகள் அமைக்கப்பட்டு இருந்தன. ஒரு இருக்கையில் திமுக தலைவரும் , தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அமர்வார் என அனைவருக்கும் […]
சென்னை : தமிழகத்தில் நீண்ட வருடங்கள் கோலோச்சிய திராவிட முன்னேற்ற கழக அரசியல் கட்சியை கிட்டத்தட்ட 50 ஆண்டுகள் தலைமை ஏற்று வழிநடத்தியவரும் , தமிழக முதல்வராக 4 முறை பொறுப்பில் இருந்து தமிழக அரசியலில் தனி ஆளுமை கொண்டவருமான கலைஞர் கருணாநிதியின் 6ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று (ஆகஸ்ட் 7) அனுசரிக்கப்படுகிறது. கலைஞர் கருணாநிதியின் நினைவு தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதிலும் திமுகவினர் பல்வேறு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து செயல்படுத்தி வருகின்றனர். முன்னதாக திமுக […]
மக்களவை தேர்தல்: நாடு முழுவதும் உள்ள 543 தொகுதிகளுக்குமான மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு இன்றுடன் (7ஆம் கட்ட தேர்தல்) நிறைவுபெறுகிறது. வரும் ஜூன் 4ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளது. இந்த சமயத்தில் இன்று டெல்லியில் இந்தியா கூட்டணி தலைவர்கள் பங்கேற்கும் முக்கிய ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் திமுக சார்பாக முதலில் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் பங்கேற்பதாக இருந்தது. பின்னர் அவருக்கு பதிலாக டி.ஆர்.பாலு பங்கேற்பார் என கூறப்பட்டது. […]
டெல்லி: நாடாளுமன்ற தேர்தல் இன்று 57 தொகுதிகளுக்கான இறுதி கட்ட வாக்குப்பதிவுடன் முழுதாக நிறைவுபெறுகிறது. தேர்தல் இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில் அரசியல் கட்சியினர் தேர்தல் முடிவுகளை கணித்து அதற்கு ஏற்றவாறு தங்கள் அடுத்தகட்ட நகர்வுகளை மேற்கொள்ள உள்ளனர். காங்கிரஸ்,திமுக, திரிணாமுல் காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள், ஆம் ஆத்மி, ராஷ்டிரிய ஜனதா தளம், சமாஜ்வாடி, சிவசேனா(உத்தவ் தாக்கரே) உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் ஒன்றிணைந்துள்ள I.N.D.I.A கூட்டணி தலைவர்கள் இன்று டெல்லியில் முக்கிய ஆலோசனை கூட்டத்தை நடத்துகின்றனர். இன்று பிற்பகல் 3 […]
TR Balu: ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிடும் திமுக எம்பி தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் உள்ள தகவல்கள் வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் 7 கட்டங்களாக நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழகத்தில் ஏப்ரல் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த ஒரு வாரமாக நடைபெற்று நேற்று முன்தினம் நிறைவு பெற்றது. அப்போது, அரசியல் கட்சிகள் சார்பில் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டவர்கள் தங்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். இந்த வேட்புமனு […]
TR Baalu : பிரதமர் மோடி நேற்று முன்தினம் மற்றும் நேற்று (பிப்ரவரி 27 மற்றும் 28) என இரண்டு தினங்கள் சுற்றுப்பயணமாக தமிழகம் வந்திருந்தார். தமிழகத்தில் திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் “என் மண் என் மக்கள்” யாத்திரை நிறைவு விழா, மதுரையில் சிறுகுறு தொழில்முனைவோர்கள் கலந்து கொண்ட கருத்தரங்கம், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தரிசனம் என்ன பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நேற்று தூத்துக்குடி வந்திருந்தார். அங்கு 17,300 கோடி ரூபாய் நலத்திட்டங்களை தொடங்கி […]
கடந்த ஜனவரி 31ஆம் தேதி குடியரசுத் தலைவர் உரையுடன் நாடாளுமன்ற பட்ஜெட் இடைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது. பிப்ரவரி 1ஆம் தேதி 2024ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதற்கு அடுத்ததாக நாடாளுமன்ற வழக்கமான நிகழ்வுகளுக்காக கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. நவாஸ் ஷெரீப் அறிவுத்திறன் குறைந்த தலைவர்.! சிறையில் இருந்து இம்ரான் கான் பேச்சு.! நேற்றுடன் நிறைவு பெற்று விடும் என அறிவிக்கப்பட்ட கூட்டத்தொடரானது இன்று ஒரு நாள் கூடுதலாக நடைபெற்று வருகிறது. இந்த […]
திமுக எம்பியும், திமுக நாடாளுமன்ற குழு தலைவருமான டி.ஆர்.பாலு எழுதிய 4 நூல்களை இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். இந்த புத்தக வெளியீட்டு விழா சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமை அலுவலகம் அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் டி.ஆர்.பாலு பற்றிய பல்வேறு நினைவலைகளை பகிர்ந்துகொண்டார். அவர் கூறுகையில், 17 வயதில் கலைஞர் பேச்சை கேட்டு திமுகவில் இணைந்தவர் டி.ஆர்.பாலு. இப்போது அவருக்கு 80 வயது, எனக்கு 70 வயது இன்னும் […]
2023ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நேற்று முதல் துவங்கி இன்று இரண்டாவது நாளாக இன்று நடைபெற்று வருகிறது. இன்றைய கூட்டத்தில் மக்களவையில் பேசிய திமுக எம்பி டி.ஆர்.பாலு சென்னையை புரட்டி போட்ட மிக்ஜாம் புயல் பாதிப்பு குறித்தும், மத்திய அரசு தமிழகத்திற்கு உடனடியாக உதவ வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார். அவர் கூறுகையில், வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம் , செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக பொதுமக்கள் […]
தமிழ்நாடு ஆளுநர் ஆர் என் ரவி அவர்களை திரும்ப பெறும் கோரிக்கைக்கு திமுக கூட்டணி கட்சிகளாக காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவு அளித்துள்ளன. தமிழக ஆளுநர் ஆர் என் ரவியின் சமீபத்திய செயல்பாடுகள் ஆளுங்கட்சியான திமுக மற்றும் சமூக ஆர்வலர்களால் விமர்சிக்கபட்டுவருகிறது. அவரது கருத்துகள் குறிப்பிட்ட மதத்திற்கு மட்டுமே ஆதரவாக உள்ளதாகவும்தாகவும், இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிராக உள்ளதாகவும் அண்மையில் திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் கூட்டாக அறிக்கை வெளியிட்டுருந்தனர். […]
திமுக எம்பிக்கள் டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன் மீதி ஜூன் 10 ஆம் தேதி வரை நடவடிக்கை எடுக்கக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வன்கொடுமை தடுப்பு சட்டத்தை ரத்து செய்யக் கோரிய வழக்கு ஜூன் 10 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உயர் நீதிமன்றம். ஏற்கனவே மே 29 ஆம் தேதி வரை எந்த நடவடிக்கைகளும் எடுக்கக்கூடாது என்று உத்தரவிட்டிருந்த நிலையில், தற்போது தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. திமுக எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன் தங்களுக்கு எதிரான வன்கொடுமை தடைச்சட்ட […]
திமுக எம்.பி.க்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. திமுக எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன் தங்களுக்கு எதிரான வன்கொடுமை தடைச்சட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். மேலும் டி.ஆர்.பாலு, தயாநிதி மாறநின் மனுக்களை அவசர வழக்காக பிற்பகலில் நீதிபதி நிர்மல்குமார் விசாரணை மேற்கொள்கிறார் என்று கூறப்பட்டது. இந்நிலையில், திமுக எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன் ஆகிய இருவர் மீது மே 29 வரை எந்தவித கடுமையான […]
திமுக எம்பிக்கள் டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல். தங்களுக்கு எதிரான வன்கொடுமை தடைச்சட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளனர். டி.ஆர்.பாலு, தயாநிதி மாறநின் மனுக்களை அவசர வழக்காக பிற்பகலில் நீதிபதி நிர்மல்குமார் விசாரணை மேற்கொள்கிறார். தாழ்த்தப்பட்ட மக்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக கூறி கோவையை சேர்ந்த சேகர் என்பவர் புகார் அளித்துள்ளார். சேகரின் புகாரால் கோவை வெரைட்டி காவல்நிலையத்தில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது […]
கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து பிரதமர் மோடி, அனைத்துக் கட்சி நாடாளுமன்றக் குழுத் தலைவர்களுடன் காணொளி மூலமாக ஆலோசனை கூட்டம் நடத்தினார். இந்த நிலையில் பிரதமருடனான ஆலோசனை கூட்டம் முடிந்த பின்னர் திமுக எம்.பி.யும், கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமடைந்து வரும் சூழலில் புதிய நாடாளுமன்றம் தேவையா? என பிரதமரிடம் கேட்டேன் என தெரிவித்தார். இதையடுத்து மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறை, உள்ளிட்டோர் மக்கள் […]
மக்களவையில் திமுக எம்பி டி.ஆர்.பாலு பேசினார்.அப்பொழுது அவர் கூறுகையில், காங்கிரஸ் ஆட்சி காலத்தில் இந்தி மற்றும் ஆங்கிலம் மட்டுமல்லாது மாநில மொழிகளிலும், அகில இந்திய தேர்வுகளை எழுதலாம் என்று அரசாணை வெளியிடப்பட்டது. ஆனால் தபால்துறை தேர்வு ஆங்கிலம், இந்தியில் மட்டுமே நடைபெற்றிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது .மாநில மக்களுடைய ஆர்வங்களை மத்திய அரசு கண்டுகொள்வதில்லை என்று குற்றம்சாட்டினார் டி.ஆர்.பாலு.
மக்களவையில் திமுக எம்.பி. டி.ஆர்.பாலு பேசினார்.அப்போழுது அவர் பேசுகையில்,வாஜ்பாய் போன்ற ஒரு தலைவரை நான் பார்த்ததில்லை. வாஜ்பாய் எனக்கு தந்தையை போன்றவர். பட்ஜெட்டில் சேது சமுத்திரத் திட்டம் குறித்து எந்தவிதமான குறிப்பும் இடம்பெறவில்லை, அரசு அந்த திட்டத்தை மறந்துவிட்டதா அல்லது வாஜ்பாயையே மறந்துவிட்டதா? என்று டி.ஆர்.பாலு கேள்வி எழுப்பினார். மேலும் சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற தீவிரம் காட்டினார் வாஜ்பாய்.பெட்ரோல் – டீசலை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவர வேண்டும் என்றும் பேசினார்.