மிட்சைஸ் செடான் ரகத்தில் புத்தம் புதிய டொயோட்டா யாரிஸ் செடான் காரின் பாதுகாப்பு தரம் குறித்த கிராஷ் டெஸ்ட் முடிவு வெளியாகி இருக்கிறது. ஏசியன் என்சிஏபி நடத்திய கிராஷ் டெஸ்ட்டில் புதிய டொயோட்டா யாரிஸ் கார் 5 நட்சத்திர பாதுகாப்பு தர மதிப்பீட்டை பெற்றிருக்கிறது. பெரியவர் மற்றும் சிறியவர்களுக்கான பாதுகாப்பு அம்சங்களில் இந்த கார் மிகச் சிறப்பான புள்ளிகளை பெற்று அசத்தி இருக்கிறது. தாய்லாந்து நாட்டில் டொயோட்டா யாரிஸ் கார் வியோஸ் என்ற பெயரில் விற்பனை செய்யப்படுகிறது. […]